காங்., முதல்வர்கள் பதவியேற்பு : கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு

Added : டிச 17, 2018 | கருத்துகள் (26)
Advertisement
 Assembly elections 2018, Stalin, Mayawati, Prime Ministerial candidate, காங்கிரஸ், முதல்வர்கள் பதவியேற்பு விழா, எதிர்க்கட்சிகள், திமுக, சட்டசபை தேர்தல் 2018,  பிரதமர் வேட்பாளர் ராகுல், ஸ்டாலின் , மாயாவதி, கமல்நாத், அகிலேஷ் யாதவ், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் , 
Congress, Chief Ministers swearing-in ceremony, opposition parties,
DMK, Prime Ministerial candidate Rahul,Kamal Nath, Akhilesh Yadav, Rajasthan, Chhattisgarh, Madhya Pradesh,

புதுடில்லி : நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்., வெற்றி பெற்ற 3 மாநில முதல்வர்கள் இன்று (டிச.,17) பதவியேற்க உள்ளனர். ஆனால் இவ்விழாவை எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் உள்ள பல கட்சிகள் புறக்கணித்துள்ளன.
காங்., வெற்றி பெற்ற ராஜஸ்தான், ம.பி., சத்தீஸ்கர் மாநிலங்களில் அக்கட்சியை சேர்ந்தவர்கள் முதல்வர்களாக இன்று பதவியேற்க உள்ளனர். இதில் ம.பி., மற்றும் ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடனேயே காங்., ஆட்சி அமைக்க உள்ளது. லோக்சபா தேர்தலுக்காக பா.ஜ.,விற்கு எதிராக அணி திரண்டுள்ள எதிர்க்கட்சிகள், அதன் முன்னோட்டமாக 5 மாநில தேர்தல்களில் காங்.,குக்கு ஆதரவை தெரிவித்துள்ளன.
ம.பி., யில் காங்., ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக அறிவித்த பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, தற்போது அம்மாநிலத்தில் முதல்வராக கமல்நாத் பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ள போவதில்லை என அறிவித்துள்ளார். இதே போன்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேசும் பதவியேற்பு விழாக்களில் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளார். அதே சமயம் காங்., கூட்டணியில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலின், ராஜஸ்தான் முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள ஜெய்ப்பூர் சென்றுள்ளார்.
காங்., முதல்வர்களின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வருமாறு பா.ஜ.,வுக்கு எதிரான கட்சிகளுக்கு காங்., அழைப்பு விடுத்திருந்த போதிலும், திமுக தவிர மற்ற கட்சிகள் அதை புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் கர்நாடகா முதல்வராக குமாரசாமி பதவியேற்ற விழாவில் மாயாவதி, சரத் பவார், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்து பேசியது, இந்த பதவியேற்பு விழாவை திமுக தவிர பிற எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதற்கு காரணமாக இருக்கலாம் என தேசிய அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (26)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
anand - Chennai,இந்தியா
18-டிச-201811:55:12 IST Report Abuse
anand கூப்பிடாவிட்டாலும் ஸ்டாலின் போவார்..அவருக்கு வேலை எதுவும் இல்லை
Rate this:
Share this comment
Cancel
ganapathy - khartoum,சூடான்
18-டிச-201804:34:07 IST Report Abuse
ganapathy Stalin's view d problem. Stalin's now talkslike his father mk. இந்து என்றால் திருடன். கலாம் என்றாலே கலகம். என்ற பொன்வரிகள் நினைவுக்கு வருகின்றன. ஊழல் கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள். தி.மு.க மற்றும் காங்கிரஸ் அதை கூட்டணி தர்மம் என்றே சொல்லும்.
Rate this:
Share this comment
Cancel
17-டிச-201814:56:10 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் ஒரே வார்த்தையில் கூட்டணியை கலைத்தார் சுடாலின். ராகுல் காந்தியே வருக ராகுகால ஆட்சி தருக என்று அவர் சொன்னபோதே எனக்கு சந்தேகமாக இருந்தது.
Rate this:
Share this comment
karutthu - nainital,இந்தியா
17-டிச-201818:02:44 IST Report Abuse
karutthuஉங்கள் கருத்தால் வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை நண்பரே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X