அம்பானி வீட்டு திருமணத்தில் நட்சத்திரங்கள் உணவு பரிமாறியது ஏன் : அபிஷேக் விளக்கம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அம்பானி வீட்டு திருமணத்தில் நட்சத்திரங்கள் உணவு பரிமாறியது ஏன் : அபிஷேக் விளக்கம்

Added : டிச 17, 2018 | கருத்துகள் (23)
Advertisement
Mukesh Ambani, Abhishek Bachchan, Isha Ambani, Anand Parmal,முகேஷ் அம்பானி,  உணவு பரிமாறிய நட்சத்திரங்கள், பாலிவுட் நடிகர்கள், அபிஷேக் பச்சன், இஷா அம்பானி, ஆனந்த் பிரமல், ஐஸ்வர்யா ராய்,ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான், சஜ்ஜன் கோட், முகேஷ் அம்பானி மகள் திருமணம்,
 Mukesh Ambani daughter married, Bollywood actors,  Aishwarya Rai, Shahrukh Khan, Salman Khan, Aamir Khan, Sajjan Kot,

புதுடில்லி : முகேஷ் அம்பானியின் மகள் திருமண விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் விருந்தினர்களுக்கு உணவு பரிமாறியது சர்ச்சை ஆனது. இதனையடுத்து, உணவு பரிமாறியது ஏன் என பிரபல நடிகரும், அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சன் விளக்கம் அளித்துள்ளார்.
முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பிரமல் என்பவருக்கும் டிசம்பர் 12 அன்று மிக பிரம்மாண்டமாக மும்பையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான அமிதாப் பச்சன், அவரது மகனும், நடிகருமான அபிஷேக் பச்சன், மருமகளும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யாவின் 7 வயது மகள் ஆராத்யா பச்சன், நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான் உள்ளிட்டோர் விருந்தினர்களுக்கு உணவு பரிமாறினர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தொடர்ந்து அம்பானி வீட்டு திருமணத்தில் பிரபல நடிகர்கள் உணவு பரிமாறிய விவகாரம் சர்ச்சை ஆக்கப்பட்டது. இந்நிலையில் அபிஷேக் பச்சன் டுவீட்டரில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அப்போது ரசிகர்கள் ஒருவர் அம்பானி வீட்டு திருமணத்தில் உணவு பரிமாறிய விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அபிஷேக், இது பாரம்பரியமாக மணமகள் வீட்டார் கடைபிடித்து வரும் வழக்கம். மணமகனின் வீட்டினரை அமரவைத்து, மணமகள் வீட்டை சேர்ந்தவர்கள் அவர்களுக்கு விருந்து பரிமாறுவது பாரம்பரியம். இந்த பண்பாட்டு முறைக்கு " சஜ்ஜன் கோட் " என பெயர் என விளக்கம் அளித்துள்ளார்.

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19-டிச-201804:04:33 IST Report Abuse
J.V. Iyer இது என்ன ஜுஜுபி கட்டுமரத்திற்கு பாலசந்தரும், வாலியும் காலை பிடிக்கவில்லையா?
Rate this:
Share this comment
Cancel
ganapathy - khartoum,சூடான்
18-டிச-201804:38:41 IST Report Abuse
ganapathy டைரக்டர் பாலாவின் கல்யாணத்தில் சூர்யா மற்றும் விக்ரம் பந்தி பரிமாறினர். கல்யாணம் தரையில் பாய் விரித்து பந்தி பரிமாறப்பட்டது. பழைய படத்தை கண்டு பிடித்து தினமலர் பிரசுரிக்கும்.
Rate this:
Share this comment
Cancel
PALANISAMY - SURREY,யுனைடெட் கிங்டம்
17-டிச-201817:13:40 IST Report Abuse
PALANISAMY I don't thing Serving food to guests are wrong.Our Tamil culture has the same those comes to our home, we serve food, if we go to friends or relatives functions we were serving foods as they are busy with greet guests.Serving food to guests are not meant servant it pleasure. Please try your next friend or relatives function and feel your inner joy. Thanks
Rate this:
Share this comment
S.Subramanian - Chennai,இந்தியா
19-டிச-201809:31:50 IST Report Abuse
S.SubramanianIt is correct....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X