பொது செய்தி

இந்தியா

நித்யானந்தா வெளிநாடு தப்பியோட்டம் ?

Updated : டிச 18, 2018 | Added : டிச 17, 2018 | கருத்துகள் (28)
Advertisement
நித்யானந்தா, வெளிநாடு, தப்பியோட்டம் ?

பராம்நகர் பாலியல் பலாத்கார விசாரணைக்கு பயந்து, நித்யானந்தா, நாட்டை விட்டு தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது.கர்நாடகாவில், ராம்நகர் மாவட்டம் பிடதியில், நித்யானந்தா ஆசிரமம் உள்ளது. இங்கு, பக்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாக, 2010ல், நித்யானந்தா மீது வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பாக, ராம்நகர் மாவட்ட கூடுதல் குற்றம் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.இதற்கிடையில், நித்யானந்தா பாஸ்போர்ட் காலாவதியாகி விட்டது. ஆனால், 'விசாரணை முடியும் வரை நித்யானந்தா பாஸ்போர்ட்டை புதுப்பிக்கக் கூடாது' என, போலீசார் வலியுறுத்தினர்; இதை பாஸ்போர்ட் அலுவலகமும் ஏற்றதாக தெரிகிறது.
இந்நிலையில், பாலியல் வழக்கு தொடர்பாக, நித்யானந்தாவிடம் விசாரணை நடத்த, நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, நித்யானந்தா தலைமறைவாகியுள்ளதாக, கர்நாடக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.விசாரணையில், நித்யானந்தா, அண்டை நாடான, நேபாளத்துக்கு சாலை மார்க்கமாக சென்று, அங்கிருந்து சிலரது உதவியுடன், பிரிட்டன் ஆதிக்கத்திலுள்ள, 'கெய்மன்' தீவுக்கு தப்பியோடியதாக, கன்னட,'டிவி' சேனல்களில் நேற்று செய்தி ஒளிபரப்பானது.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
21-டிச-201821:11:38 IST Report Abuse
A.George Alphonse It has become very easy to the cheaters, looters of banks and sex scandlers to escape to foreign countries very easily even without their passports also.These people are making use of their money power, political influences and other extra Powers by escaping very easily to foreign countries to lead the happy and peaceful lives.The people who were involved in sex scandles from other religions also enjoying either escaping to other countries or remain in our country and leading very happy lives.But the God won't allow these culprits to enjoy forever and punishes them severely in this world before their death without any doubt.
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
19-டிச-201815:52:04 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> கர்நாடகா லே எவன் ஆட்ச்சியாம் குமாரசாமியின் ஆட்ச்சியேதான் அவனும் ஸோக்கால்டடு காங்கிரஸ் தான் மக்களை முழுமுட்டாளாக்கும் ஆட்ச்சியேதான் நடக்குது எவனும் ஒழுக்கமே இல்லீங்களே
Rate this:
Share this comment
Ramesh Lal - coimbatore,இந்தியா
19-டிச-201817:14:10 IST Report Abuse
Ramesh Lalபுத்திசாலி, பெங்களூரில் எவனும் ஒழுக்கமானவன் இல்லேங்கிறீங்க , பாம்பின்கால் பாம்பறிகிறது....
Rate this:
Share this comment
Cancel
சத்யமேவ ஜெயதே - Ahmadabad,இந்தியா
19-டிச-201813:43:52 IST Report Abuse
சத்யமேவ ஜெயதே எங்கேப்பா அந்த கன்னியா ஸ்திரீயை பனிரெண்டு முறை கற்பழித்த பாதிரி. அதுபோல பல பாதிரிகள் உலாவுகிறார்கள் இலவசமாக இந்தியாவில். அவர்களை பற்றி பேச்சு மூச்சே இல்லை. ஜோடிக்கப்பட்ட வழக்கில் இந்து சாமியார் என்றால் நொங்க வாயங்கள் வந்துவிடுவார்கள். அவர் மீது சுமத்தப்பட்ட சன்டிவியின் வீடியோ ஆதாரம் பொய் என்று நிருபீக்கப்பட்டுள்ளது. அதை எந்த ஊடகமும் ஒன்று இரண்டு தவிர எவனும் போடவில்லை. ஆனால் அந்த பொய் வீடியோவை திரும்ப திரும்ப போட்டு டிஆர்பி ரெட்டை மட்டும் அனுபவித்தார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X