'அறம்' இல்லாத துறையால் அழியும் சொத்து... அதிகாரியை வெளுத்து வாங்கி, கலெக்டர் கெத்து!

Added : டிச 18, 2018
Share
Advertisement
ண்டியில் இருந்து 'ஸ்லிப்' ஆகி விழுந்ததில், காலில் அடிபட்டு, வீட்டில் ரெஸ்ட் எடுத்து கொண்டிருந்தாள் சித்ரா. பிஸ்கட், பழங்கள் சகிதம் வந்த, மித்ராவை பார்த்து, ''ஏய்... மித்து. எதுக்கு இந்த பார்மாலிட்டி? நாளைக்கு ரெடியாயிடுவேன்,'' என்றாள்.''அக்கா.. அதனால.. என்னங்க?'' என்றவாறே அமர்ந்தாள் மித்ரா.கையில் காபி டம்ளரோடு வந்த சித்ராவின் அம்மா, ''என்ன மித்து.. ஆளையே காணோம்.
 'அறம்' இல்லாத துறையால் அழியும் சொத்து... அதிகாரியை வெளுத்து வாங்கி, கலெக்டர் கெத்து!

ண்டியில் இருந்து 'ஸ்லிப்' ஆகி விழுந்ததில், காலில் அடிபட்டு, வீட்டில் ரெஸ்ட் எடுத்து கொண்டிருந்தாள் சித்ரா. பிஸ்கட், பழங்கள் சகிதம் வந்த, மித்ராவை பார்த்து, ''ஏய்... மித்து. எதுக்கு இந்த பார்மாலிட்டி? நாளைக்கு ரெடியாயிடுவேன்,'' என்றாள்.''அக்கா.. அதனால.. என்னங்க?'' என்றவாறே அமர்ந்தாள் மித்ரா.கையில் காபி டம்ளரோடு வந்த சித்ராவின் அம்மா, ''என்ன மித்து.. ஆளையே காணோம். அம்மா.. அப்பா.. நல்லாருக்காங்களா?'' என்றார்''ம்... சூப்பரா இருக்காங்க ஆன்ட்டி,'' என்றதும், ''ஏம்பா.. மித்து, டாடிகிட்டி சொல்லி, இந்த தாராபுரத்தில் உள்ள 'சைட்'டுக்கு அப்ரூவல் விஷயத்தை கொஞ்சம் பார்க்க சொல்லேன்,'' என்றார் சித்ராவின் அம்மா.''ஆன்ட்டி கண்டிப்பா சொல்றேன்,''சித்ராவின் அம்மா, கிச்சனுக்குள் சென்றதும், ''மக்கள் பிரதிநிதிகளே நடையாக நடக்கின்றனராம். மிஸ்டர் பொதுஜனம் எம்மாத்திரம்?'' என்றாள் சித்ரா.''எப்படிக்கா சொல்றீங்க?''''தாராபுரம் எம்.எல்.ஏ., தனது தொகுதி வளர்ச்சி நிதியில், பெரமியம் பகுதியில் சத்துணவு கூடம் அமைக்க நிதி ஒதுக்கிடு செய்து, மூலனுார் யூனியன் ஆபீசில், 'எஸ்டிமேட்' கேட்டிருக்கார். பல மாதங்களாகியும் பதிலில்லை. இருந்தாலும், எம்.எல்.ஏ., ஆபீசிலிருந்து உதவியாளர் தினமும் நடையாய் நடக்கிறாராம். இன்னும் தரலையாம்''''எம்.எல்.ஏ., சொல்லியும் கேட்காத ஆபீசர் யாரோ?''''திருப்பூரிலிருந்து போற ஆபீசர்தான். காலையில், 11:00 மணிக்கு ஆபீசுக்கு போனால், சாயந்திரம், 4:00 மணிக்கே பையை துாக்கி கிளம்பிடறாராம். போன வாரம் பயிற்சி முகாம் நடந்த போதும், கடமையே கண்ணாக, தன் உதவியாளரிடம் 'லஞ்ச் பேக்' எடுத்து வரச்சொல்லி பின் வாசல் வழியே 'எஸ்கேப்' ஆகி விட்டாராம்,'' என்றாள் சித்ரா.''அப்ப... மணி பார்த்து வேலை செஞ்சு, 'மாணிக்க'மாக மின்னுகிறார்னு சொல்லுங்க,'' என்று கூறி சிரித்தாள் மித்ரா.''அதே ஊர் மேட்டர் இன்னொன்னு சொல்றேன் கேளு மித்து,'''சொல்லுங்க''''தாராபுரம் பக்கத்தில், முன்னாள் ஊராட்சி தலைவரின் கணவர் ஒருவர், ஆளுங்கட்சி கிளை செயலாளர், சூரியக்கட்சியில், தன் ஆதரவாளர்களுடன் போய் சேர்ந்திருக்கார். கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில், ஆளுங்கட்சியை சேர்ந்த ஒருவரிடம், லட்சக்கணக்கில் பணம் வராமல், ரொம்ப நாளாக பிரச்னையாம். அதனால, கட்சி மாறிட்டாராம்,'' என்றாள் சித்ரா.''சூரிய கட்சியில் மட்டும் என்ன வாழுது? கேப்டனுக்கு குட்பை சொல்லி விட்டு வந்த சிலர், தங்களுக்கு உரிய முக்கியத்துவம் தருவதில்லைன்னு வருத்தத்தில் உள்ளனராம். எப்போது என்ன நடக்கும்? என்று தெரியாதாம்?,'' மித்ரா சொன்னாள்.''ஏம்பா... இந்த காங்கயம் பக்கத்தில, கோவில் இடப்பிரச்னை என்னாச்சு. ஏதாவது தெரியுமா?''''ஆமாங்க்கா.. ஊதியூர் உத்தாண்டவர் கோவிலுக்கு சொந்தமான ஆயிரம் ஏக்கர் நிலம் கேட்பாரற்று கிடக்கிறது. அதில், 95 ஏக்கர் நிலத்தை ஒருத்தர் ஆக்கிரமிச்சு, பால்பண்ணை கட்டுறாங்க. இதனை சட்டரீதியாக அணுகுவதில் அறநிலையத்துறையினர் எந்த அக்கறையும் காட்டலையாம். கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, கோவில் நிலம் காப்பாற்றப்படும். இல்லாட்டி 'ஸ்வாஹா'தான்,'' என்ற மித்ரா, தலைக்கு மேல கைகூப்பி வணங்கினாள்.அப்போது, டேபிள் மேல் கிடந்த நாளிதழை படித்தாள் சித்ரா. அதில் இடம் பெற்ற கலெக்டர் நியூைஸ படித்தவாறே,''தகவல் மையம் மாதிரி செயல்படக்கூடாதுனு, கலெக்டர் 'டோஸ்' விட்டிருக்காரு தெரியுமா,'' என்றாள்.''கலெக்டர் எதையும் 'பட்.. பட்'ன்னு சொல்லி, 'குட்டு' வச்சு, வறுத்து எடுத்துடுவாரே'' என்றாள் மித்ரா.''ஆமாண்டி...உண்மைதான். பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில், வடக்கு தொகுதியில் குடிநீர் தட்டுப்பாடுன்னு, அதிக அளவுல மனு கொடுத்திட்டே இருக்காங்க. ஆனா, எதையும் சரி செய்யலையாம். இதை தெரிஞ்சுகிட்ட கலெக்டர், பி.டி.ஓ.,க்களை வெளுத்து வாங்கிட்டாராம்,''''மனுவ வாங்கிட்டு, பதில் மட்டும் பதிவு செய்யற தகவல் மையம் மாதிரி, யூனியன் ஆபீஸ் செயல்படக்கூடாது. புகார் செஞ்சவரை தாஜா பண்ணி, மறுபடியும் கலெக்டருக்கு நன்றி சொல்லி, கடிதம் கொடுக்க வைச்சா மட்டும், யூனியன்ல நல்லா வேலை நடக்குதுனு ஒத்துக்க மாட்டேனு,' வெளுத்து வாங்கிட்டாரு,'' என்றாள் சித்ரா.''அக்கா... ஸ்டேஷனுக்கு எதிரிலேயே லாட்டரி விக்கறாங்க தெரியுமா?'' என்று கேள்வி கேட்டாள் மித்ரா.''அடக்கொடுமையே... எங்கடி, சீக்கிரம் சொல்லு'' ஆர்வமானாள் சித்ரா.''ரூரல் போலீஸ் ஸ்டேஷன் எதிரே, ஒரு நம்பர் லாட்டரி விற்பனை ஜோராக நடக்குதாம். இதை கண்டுக்காமா இருக்க, ஒரு சிறப்பு ஒப்பந்தம் போட்டிருக்காங்களாம். அதன்படி, ஸ்டேஷனில் ஆகும் செலவுகளை, லாட்டரி விற்பவரே கொடுக்கிறாராம். இதனால, போலீசாரும் எட்டி பார்ப்பதில்லையாம். இதனால, ரொம்ப சவுகரியமா லாட்டரி விக்றாங்களாம்,''''இப்படியும்தான் போலீசார் நடந்துப்பாங்களா? தலையை கொண்டுபோய் எதில முட்டிக்கறதுன்னே தெரியலயே'' என, ஆதங்கப்பட்டாள் சித்ரா.''இது பரவாயில்லைங்க்கா குண்டடம் ஸ்டேஷனில் வேலை செய்யும் ரெண்டு போலீசார் 'டியூட்டி' பார்க்கிறோம்ன்னு சொல்லிட்டு, பக்கத்துல இருக்கற கறிக்கடையில் உட்கார்ந்துட்டு வெட்டி அரட்டை அடிச்சிட்டு இருக்காங்கன்னு,' பேசினோமே ஞாபகமிருக்குங்களா?''''ஆமா.. இப்ப அதுக்கென்ன?'''இப்ப, அந்த ரெண்டு பேரும் அந்த ஏரியா பக்கமே தல வச்சு படுக்கறதில்லையாம். அப்புறம், இந்த விஷயத்தை, ஸ்டேஷனில் உள்ள சிலர்தான் சொல்லியிருப்பாங்கன்னு நினைச்சு, ஸ்டேஷனில் போலீசார் இரண்டு அணியாக செயல்படறாங்களாம்,''''இதென்னடி கூத்தா இருக்குது. அதே மாதிரி போன வாரம் நாம பேசின ஒரு மேட்டர் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு பெரிய பிரச்னையாயிடுச்சு தெரியுமா?''''எந்த மேட்டருங்க்கா?''''கஜா புயலுக்காக நிவாரண பொருட்களை, அரசு பஸ்சில் அனுப்பும் போது, இலவசமாக அனுப்பலாம் என்று அமைச்சர் உத்தரவிட்டிருந்தாருல்ல. இது வாய் மொழி உத்தரவுதான்னு சொன்ன, அதிகாரியை, உயரதிகாரி ஒருத்தர் வெளுத்து வாங்கிட்டாராம்,''''அப்புறம் என்ன ஆச்சுங்க...''''போய் அமைச்சரை பார்த்துட்டு வாங்கன்னு அனுப்பிச்ட்டாங்களாம். அவரும், அமைச்சரை பார்க்க, கரூருக்கு 'கணேசா' பஸ்ஸில் போய், ஒரு நாள் முழுக்க நின்னு பார்த்துட்டு, 'செமத்தியா' வாங்கிட்டு வந்தாராம்,'' என்றாள் சித்ரா.''இப்டி துரை மாதிரி நடந்துக்கற அதிகாரிக்கு இப்படித்தான் செய்யோணும். அப்பதான் மத்தவங்களும் அரசாங்க உத்தரவை மதிச்சு நடப்பாங்க,''''அதே மாதிரி, கஜலட்சுமி தியேட்டர் ரோட்டோரத்தில் தங்கியிருந்த மக்கள்கிட்ட அதிகாரிகள் ஓவரா ஆட்டம் போட்டாங்க தெரியுமா?,''''ஏன்... என்ன நடந்தது?''''ஆளுங்கட்சியினர் கொடுத்த 'பிரஸ்ஸர்' காரணமாத்தான், அவங்களை வேற பக்கம் கொண்டு போய் தங்க வச்சாங்களாம்,''''யாரு.. அந்த வி.ஐ.பி.,? எதுக்காகவாம்?''''அட... அவரு ஒரு ஓட்டல் திறந்தாரு. அதுக்கு முன்னாடி இவங்க இருந்தால், ஓட்டலுக்கு வர்ற வண்டிகளை பார்க்கிங் பண்ண முடியாதுன்னு, கார்ப்ரேஷன் அதிகாரிககிட்ட 'அன்பா'த்தான் சொன்னாராம். உடனே, அதிகாரிங்க, அங்க போய், 'திருப்பதி'மொட்டை அடிக்கிற மாதிரி, தங்கியிருந்த ஆட்களை அப்புறப்படுத்தினாங்களாம்,'' என முடித்தாள் சித்ரா.''இதே மாதிரி, மத்த பிரச்னைகளிலும், இந்த அதிகாரிங்க நடந்துட்டா பரவாயில்லைதானே,'' மித்ரா கூறவும், பக்கத்திலுள்ள பெருமாள் கோவிலில், நாலாயிர திவ்ய பிரபந்தம் ஒலித்தது.''அக்கா... இதைக்கேட்டதும்தான், லிங்கேஸ்வரர் ஊர் மேட்டர் ஒண்ணு நினைவுக்கு வருது. சமீபத்துல, நகை திருட்டு போனது குறித்து, ஒருவர் கம்ளையன்ட் பண்ணாராம். 'நகைய கண்டுபுடுச்சா கொடுக்கிறோம். வெயிட் பண்ணுங்கன்னு சொல்லியே நாட்களை கடத்துறாங்களாம்,'' என்றாள்.''பாவம், அப்பாவி ஜனங்ககிட்ட இருக்கிற கொஞ்ச நகையும் போனா, அவங்க என்னடி பண்ணுவாங்க. எதையுமே கண்டுபிடிக்க மாட்டோம்ங்கிற, லட்சுமண ரேகையை தாண்டி வந்தா சரிதான்,'' என்று கூறி அங்கலாய்த்தாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X