எட்டு வருஷமா நோட்டு போட்டு துட்டு வசூல்! | Dinamalar

எட்டு வருஷமா நோட்டு போட்டு துட்டு வசூல்!

Added : டிச 18, 2018
Share
'சண்டே என்றால் இரண்டு. ஒன்று நன்றாக சாப்பிடுவது; மற்றொன்று நன்றாக துாங்குவது. இதுதான் சித்ரா எடுத்திருந்த தீர்மானம். தீர்மானத்தை நிறைவேற்ற, காலை டிபன் முடித்து, 'டிவி' முன் அமர்ந்தாள்.காலிங் பெல் ஒலித்தது. திறந்து பார்த்தால் அது, அந்த குட்டி பிசாசு மித்ராவேதான்.''வா...வா. இன்னிக்கு மட்டும் என்னைய எங்கயும் கூப்பிடாதே. கம்ப்ளீட் ரெஸ்ட்,'' என்றாள்
 எட்டு வருஷமா நோட்டு போட்டு துட்டு வசூல்!

'சண்டே என்றால் இரண்டு. ஒன்று நன்றாக சாப்பிடுவது; மற்றொன்று நன்றாக துாங்குவது. இதுதான் சித்ரா எடுத்திருந்த தீர்மானம். தீர்மானத்தை நிறைவேற்ற, காலை டிபன் முடித்து, 'டிவி' முன் அமர்ந்தாள்.காலிங் பெல் ஒலித்தது. திறந்து பார்த்தால் அது, அந்த குட்டி பிசாசு மித்ராவேதான்.''வா...வா. இன்னிக்கு மட்டும் என்னைய எங்கயும் கூப்பிடாதே. கம்ப்ளீட் ரெஸ்ட்,'' என்றாள் சித்ரா.''எனக்கும் பெரிசா மூடு இல்லை. அம்மா...சூடா ஒரு கப் காபி கிடைக்குமா'' என்று உள்ளே பார்த்து குரல் கொடுத்தபடி, சோபாவில் புதைந்தாள்.'டிவி'யில் முதல்வர் பழனிசாமி ஏதோ ஒரு ஊரில் மைக்கில் பேசிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்த மித்ரா, ''இவர் சேலம் வந்துட்டு போற வழியிலதான், கணியூர் 'டோல்கேட்' இருக்கு. இதனால எப்பல்லாம் இந்த வழியா சி.எம். கிராஸ் பண்றாரோ, அன்னைக்கெல்லாம் கட்சியோட , சூலுார் ஒன்றியக்காரங்க சுத்திக்குறாங்க. ஒன்றியச் செயலாளர் ஒருத்தரு, தன்னோட வீட்டு கல்யாண பத்திரிகையை, டோல்கேட்டுல வச்சுதான் சி. எம்.,க்கு குடுத்தார்னா பார்த்துக்கோ'' என்றாள்.''அதுக்கென்ன இப்ப?''''ஆனா பப்ளிக் யாராச்சும், பொதுப்பிரச்னை சம்பந்தமா மனு குடுக்க வந்தா, அவங்கள போலீஸ் அனுமதிக்கறதில்லை. எலக்ஷன் வருதுல்ல, அப்ப நம்மள பார்க்க வண்டி நிக்குமா நிக்காதான்னு பார்ப்போம்னு, ஏரியா ஜனங்க கோபத்தோட காத்திருக்காங்க'' என்றாள் மித்ரா.அதற்கு சித்ரா, ''என்கிட்டயும் ஒரு போலீஸ் மேட்டர் இருக்கு. க.க.சாவடி போலீஸ் தனிப்பிரிவுல ஒருத்தர் வேலை பாக்குறாரு. இவரு, சுத்தியுள்ள ஆறேழு காலேஜ்கள்ல, கேன்டீன் எடுத்து நடத்துறாரு. இந்த கேன்டீன்களுக்கு தேவையான காய்கறி, பழம்னு எல்லா சாமான்களையும், சுத்தியுள்ள கடைகள்ல இருந்து கம்மி ரேட்டுக்கு மிரட்டி வாங்கி அனுப்புறார். இதனால இவரோட ஏரியால, பணமழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுதாம்'' என்றாள்.''கவர்மென்ட் வேலை பார்த்துட்டே எப்படி இத்தனையும் செய்றாரு?''''அதான் பாரேன்... மணல் லாரிகள்கிட்டயும், நோட்டு போட்டு வசூல் பண்றாராம். மாசம் நாலு லட்சம் ரூபா வரை அள்ளுறாராம். இப்படி, எட்டு வருசமா இங்க ஒர்க் பண்ற இவரை, பழைய எஸ்.பி., ரம்யாபாரதி துாக்கிட்டு வேற ஒருத்தரை போட்டார்''''வெரிகுட்...அப்புறம்''''புதுசா வந்தவரு மேல மொட்டை பெட்டிஷன் போட்டு, அவரை துாக்க வச்சு, இப்ப பழைய இடத்துக்கே வந்துட்டாரு. டாப் போலீஸ்ல அவ்வளவு செல்வாக்கு'' என்றாள் சித்ரா.அப்போது 'டிவி'யில் ஆண்பாவம் படத்தில் ஆற அமர பேசி, சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார் நடிகர் வி.கே.ராமசாமி. ஜோக்கை ரசித்துக் கொண்டிருந்த இருவருக்கும், சித்ராவின் தாய் காபி கலந்து சூடாக எடுத்து வந்தார்.''தேங்க்ஸ்மா...இனி குளிர்காலத்துல எதையும், சூடா குடிச்சாதான் காய்ச்சல் கீய்ச்சல் வராம பார்த்துக்க முடியுமாம்'' என்று கூறியபடி வாங்கி ருசித்தாள்.''காய்ச்சல்னு சொன்னவுடனேதான் ஞாபகம் வருது. டெங்கு, பன்றிக்காய்ச்சல் விவகாரத்துல மாவட்ட சுகாதார அதிகாரிங்களோட ரெட்டை வேஷம் வெளிவந்துருச்சு. கேள்விப்பட்டியா'' என்றாள் சித்ரா.''அவங்க எப்பவுமே ரெட்டை வேஷம் போடுறவங்க தானே. இதுல என்ன புதுசா இருக்கு,'' என, ஆச்சர்யப்பட்டாள் மித்ரா.''இருக்கு. மாவட்டத்துல டெங்கு, பன்றிக்காய்ச்சல்ல பலியானவங்க எண்ணிக்கையை குறைச்சுக்காட்ட, ஆஸ்பத்திரிகள்ல நடந்த பலிகளுக்கான நிஜமான காரணத்தை மறைக்க சொல்லியிருக்காங்க. அது மட்டுமில்லாம, பிரைவேட் லேப்கள்ல டெங்கு, பன்றிக்காய்ச்சல் ரிசல்ட்டுகளையும் வெளியே விடக்கூடாதுன்னு மிரட்டியிருக்காங்க'' என்றாள் சித்ரா.''அடப்பாவிகளா...''''ரெண்டு நாள் முன்னாடி நம்மூருல நடந்த, லேப் டெக்னிஷியன் மாநாட்டுக்கு வந்தவங்க இதையெல்லாம் கொட்டித்தீர்த்துட்டாங்க'' என்று முடித்தாள் சித்ரா.''யாரு செத்தா என்ன, யாரு பொழச்சா சுகாதார அதிகாரிங்களுக்கு என்ன? அவங்க சொகுசா இருக்கறதுக்கு, கல்லா நிரம்பினா சரி'' என்றாள் மித்ரா.''உனக்கு தெரியுமா... சொகுசு காருக்கு ஆசைப்பட்டு, தகுதியே இல்லாத ஒருத்தர கட்சியில சேர்த்துட்டாங்கன்னு பேசிக்கிறாங்க'' என்றாள் சித்ரா.''டீட்டெய்ல்ஸ் ப்ளீஸ்...''''சொல்றேன் கேளு. சரவணம்பட்டி பகுதியில சிட்பண்ட்ஸ் நடத்தி மோசடி செய்ததா, போன வாரம் ஒருத்தர குற்றப்பிரிவு போலீஸ் அரெஸ்ட் பண்ணினாங்க. இவருகிட்ட 'தமிழர்களின்' கட்சி அடையாள அட்டை இருந்துச்சு''''சரி...மேட்டருக்கு வா''''அவசரப்படாதே...சீட்டு போட்டு மோசடி பேர்வழிகிட்ட சிக்குனவங்க, அந்த கட்சிகாரங்ககிட்ட சொல்லி பிரச்னையை கிளப்பியிருக்காங்க. அவங்களும் அவரை கூப்பிட்டு பஞ்சாயத்து செஞ்சிருக்காங்க... அப்ப அவருகிட்ட சொகுசு காரெல்லாம் இருக்கிறது தெரியவந்திருக்கு...''''ம்ம்...''''டக்குனு யோசிச்ச கட்சிக்காரங்க, நம்ம அண்ணன் கோவை வந்தா பயன்படுத்த, இந்த சொகுசு கார் வேணும்னு, அவருக்கு கட்சியில நிரந்தர உறுப்பினர் அட்டை ஓப்பன் பண்ணிட்டாங்களாம். இதனால, பணத்தை போட்டு ஏமாந்தவங்க, மண்ட காஞ்சுப்போயி போலீசுல கேஸ் போட்டிருக்காங்களாம்'' என்று முடித்தாள் சித்ரா.''ரெண்டு நாள் முன்னால கார்ப்பரேஷன் ஆபிஸ் பக்கம் போயிருந்தேன். அங்க இன்ஜி., செக்சன்ல அதிகாரிங்க எண்ணிக்கை அதிகமாயிடுச்சு... ஆனா, எந்த வேலையும் உருப்படியா நடக்கற மாதிரி தெரியலை'' என்றாள் மித்ரா.''ஏன்... என்னாச்சு''''நகரமைப்பு பிரிவுல இருந்த ஒரு பெண் அதிகாரிய, துாத்துக்குடிக்கு மாத்துனாங்க. அந்த ஊர்க்காரங்க, இந்தம்மாவ வர விடாம தடுத்துட்டாங்க. அதுக்கப்புறம், மூன்றெழுத்து மாநகராட்சிக்கு மாத்துனாங்க. அந்த ஊருக்கு இவுங்க போக பிரியப்படலை. நம்மூரு ஆளுங்கட்சி வி. ஐ.பி., கிட்ட கெஞ்சி கூத்தாடி, திரும்பவும் கோயமுத்துாருக்கே வந்துட்டாங்க'' என்றாள் மித்ரா.''அட...அந்தளவுக்கு அவங்க பவர்புல்லா''''சம்பாதிச்ச பணம் இருக்குல்ல... இப்ப, ஜே.என்.என்.யு.ஆர்.எம்., திட்டத்துக்கு நிர்வாக பொறியாளரா நியமிச்சு, மேற்கு மண்டல பொறுப்பு குடுத்திருக்காங்க''இடைமறித்த சித்ரா, ''ஜே.என்.என்.யு.ஆர்.எம்., திட்டமே இப்ப இல்லையே...அப்புறம் எப்படி'' என்றாள்.''பரவாயில்லை...ஷார்ப்பா இருக்கே. இதான் கார்ப்பரேசன்ல இப்ப காமெடி. காங்., காலத்துல துவங்குன இந்த திட்டத்துக்கு, அப்ப, சில 'போஸ்டிங்' உருவாக்கி இருக்காங்க. அத திருப்பி ஒப்படைக்காம, வேண்டப்பட்ட அதிகாரிகளுக்கு பதவி கொடுக்குறாங்க. இது, இன்ஜி., செக்சன்ல புகைச்சல கெளப்பி விட்டுக்கிட்டு இருக்கு'' என்றாள் மித்ரா.அதற்கு சித்ரா, ''கமிஷனருக்கு இதப்பத்தி 'ஞானம்' இருக்கான்னு தெரியலை'' என கூறிக் கொண்டிருக்கும்போது, 'டிவி'யில், 'உடன்பிறவா சகோதரி'யிடம் ஜெயிலில் விசாரணை' என 'ஸ்க்ரோலிங்' ஓடியது.''நியூஸ் கவனிச்சியா'' என்றாள் மித்ரா.''கவனிச்சேன்...ஆளுங்கட்சி சப்போர்ட் இருக்கறதுனால... ரெண்டு பேரும் வண்டிய ஓட்டிக்கிட்டு இருக்காங்க'' என்று சம்பந்தமில்லாமல் பேசினாள்.அப்போது, 'மேடம்...போஸ்ட்' என்று வெளியில் நின்றவாறே, தபால்காரர் அழைத்தார். எழுந்து சென்று தபாலை வாங்கி தாயாரிடம் அளித்த சித்ரா, ''ஆர்.எஸ்.புரம் போஸ்ட் ஆபிஸ்ல புதுசா வந்திருக்கற ஒரு அதிகாரிக்கு, ராம்நகர்ல பெரிய குவார்ட்டர்ஸ் ஒதுக்கியிருக்காங்க. ஆனா அவரு அங்க குடியிருக்காம, வெளியே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்காராம்'' என்றாள்.''ஏன்''''அப்புறம் வீட்டு வாடகைப்படி எப்படி கிடைக்குமாம்...இதுக்காக, பலபேரு இப்ப குடியிருக்கற வீடுகள, குடியிருக்க தகுதியானதா இல்லைன்னு, சர்ட்டிபிகேட் கூட வாங்கி வச்சிருக்கார்னா பார்த்துக்கோயேன்'' என்றாள்.'டிவி'யில் 'அறநிலையத்துறை அதிகாரி திருமகள் மீது வழக்கு' என செய்தி ஓடியது. அதைக் கண்ட மித்ரா, ''இவரோட ஆதரவாளர்கள் கொஞ்சம் பேரு, கோவை மண்டல அறநிலையத்துறையில வேலை பார்க்கறாங்க. இப்ப அவர் மேல ஆக்ஷன் எடுத்திருக்கறத பார்த்த, அவங்க,'அடுத்து யார் பொறுப்புக்கு வரப்போறாங்களோ, நம்ம ஊழல் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்துருமோன்னு' பயந்து நடுங்குறாங்களாம்'' என்றாள்.மித்ராவிடம் இருந்து 'டிவி' ரிமோட்டை பறித்த சித்ரா, சேனல் மாற்றினாள். ஏதோ ஒரு சேனலில், '96 படம் ஓடிக்கொண்டிருந்தது. இருவரும் ரசிக்க ஆரம்பித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X