அரசியல் செய்தி

தமிழ்நாடு

காமராஜரை புறக்கணித்த சோனியா, ராகுல்: தமிழக காங்.,கில் கொந்தளிப்பு

Updated : டிச 18, 2018 | Added : டிச 18, 2018 | கருத்துகள் (79)
Advertisement
காமராஜர், சோனியா, ராகுல், அண்ணாதுரை, சென்னை

அண்ணாதுரை சமாதிக்கு சென்ற, சோனியாவும், ராகுலும், காமராஜர் நினைவிடத்திற்கு வராமல் போனது, தமிழக காங்கிரசில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, அறிவாலயத்தில், கருணாநிதி சிலை திறப்பு விழா, நேற்று முன்தினம் நடந்தது.இது முடிந்ததும், மெரினாவில் உள்ள, அண்ணாதுரை, கருணாநிதி சமாதிகளுக்கு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாவும், காங்கிரஸ் தலைவர் ராகுலும் சென்றனர்; அங்கு, மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.அதேபோல, கிண்டியில் உள்ள, மறைந்த தலைவர் காமராஜர் நினைவிடத்திலும், இருவரும் மரியாதை செலுத்த வேண்டும் என, காங்கிரசார் விரும்பினர்.அந்த கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கு, தென் சென்னை மாவட்ட தலைவர், கராத்தே தியாகராஜன் கடிதம் எழுதியிருந்தார்.இந்நிகழ்ச்சிகளை முடித்து, சோனியா, ராகுலும், காந்தி மண்டபம், காமராஜர் நினைவிடம் வழியாகத் தான், விமான நிலையம் சென்றனர். அங்கு வருவர் என, எதிர்பார்த்து, ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் காத்திருந்தனர். ஆனால், வராமல் போனதால், அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த விவகாரம், தமிழக காங்கிரஸ் கட்சியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, காங்கிரசார் கூறியதாவது:காங்கிரசை வீழ்த்திய, அண்ணாதுரை சமாதிக்கு சென்றவர்கள், காங்கிரசை வளர்த்த, காமராஜர் நினைவிடத்திற்கு வர மறுத்தது, எங்களுக்கு ஏமாற்றம் தான். ஆனால், இதற்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தான் பொறுப்பேற்க வேண்டும். அவர், இந்த விஷயத்தை, சோனியா, ராகுலிடம் கொண்டு சென்றாரா என்பதே தெரியவில்லை.இது குறித்து, மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவல்ல பிரசாத்திடம், நேற்று காங்கிரஸ் நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர். விமான நிலையத்தில், சோனியா, ராகுலை வரவேற்கவும், வழியனுப்பவும், காங்கிரசில், 40 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதை, சோனியாவிடம் கூறி விடுவார் என்பதால், காரத்தே தியாகராஜனுக்கு, அனுமதி தரப்படவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அரசு (நான் ஒரு ஹிந்து இந்தியன் தமிழன் 😀) அது எப்படிங்க இந்தப் பத்திரிகையில் செய்தியை படிச்சா பாஜகவில் நடக்கிறது எல்லாமே ஆஹா ஓஹோன்னு இருக்கு, ஆனால் மற்ற கட்சி செய்திகள் எல்லாமே குறை சொல்லும் விதமாகவே இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
rajan. - kerala,இந்தியா
18-டிச-201816:24:07 IST Report Abuse
rajan.  சுயலாபம் கருதி ஈழ தமிழர்களை படுகொலை செய்த எந்த ஒரு திராவிட, காங்கிரஸ் கட்சிக்கும் தமிழ் நாட்டிலே இடமே கிடையாது. மக்கள் சக்தி ஓன்று சேர்ந்து இந்த இரு கடசிகளையும் ஒழித்து கட்ட வேண்டும். வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
BoochiMarunthu - Paradise papers,பனாமா
18-டிச-201816:22:32 IST Report Abuse
BoochiMarunthu காமராஜர் காங்கிரஸ் இல் இருந்து விலகி தனி கட்சி ஆரம்பித்தார் . ராஜாஜியும் அதே தான் .
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
18-டிச-201818:09:36 IST Report Abuse
சுந்தரம் எப்போது காமராஜர் காங்கிரசில் இருந்து விலகினார் என்று சொல்ல முடியுமா ? எப்போது தனிக்கட்சி ஆரம்பிச்சார்? தேவையில்லாமல் வரலாறுகளை திருத்தவேண்டாம்...
Rate this:
Share this comment
blocked user - blocked,மயோட்
19-டிச-201805:02:36 IST Report Abuse
blocked userஅள்ளி விடு... ஓடிப்போய் கட்சி ஆரபித்தது இந்திரா... ஸ்தாபனக்காங்கிரஸில் மிஞ்சியது சு சாமி மட்டுமே... இப்பொழுது இருப்பது இந்திரா காங்கிரஸ்... காங்கிரஸ் கட்சியின் சொத்துக்கள் எல்லாவற்றயும் இந்திரா காங்கிரஸ் கட்சியினர் அபகரித்து விட்டார்கள்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X