வேலை வாய்ப்பை பறிக்கும் பிற மாநிலத்தவர்: கமல்நாத் சர்ச்சை பேச்சு

Updated : டிச 18, 2018 | Added : டிச 18, 2018 | கருத்துகள் (35) | |
Advertisement
போபால்: ம.பி., மாநில முதல்வராக பொறுப்பேற்றுள்ள மூத்த காங்., தலைவர் கமல்நாத், ''பிற மாநிலங்களில் இருந்து மத்திய பிரதேசுக்கு வருபவர்கள், உள்ளூர் மக்களின் வேலை வாய்ப்பை தட்டிப்பறிக்கின்றனர்' என பேசி, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.ம.பி., முதல்வர் பொறுப்பேற்ற கமல்நாத், விவசாய கடன்களை ரத்து செய்து முதல் கையெழுத்திட்டார். பின்னர் அவர் கூறியதாவது:ம.பி., மாநிலத்தில் ஏராளமான
கமல்நாத்,சர்ச்சை, பேச்சு, பிற மாநிலத்தவர்கள், வேலை வாய்ப்பு, உள்ளூர் இளைஞர்கள்

போபால்: ம.பி., மாநில முதல்வராக பொறுப்பேற்றுள்ள மூத்த காங்., தலைவர் கமல்நாத், ''பிற மாநிலங்களில் இருந்து மத்திய பிரதேசுக்கு வருபவர்கள், உள்ளூர் மக்களின் வேலை வாய்ப்பை தட்டிப்பறிக்கின்றனர்' என பேசி, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
ம.பி., முதல்வர் பொறுப்பேற்ற கமல்நாத், விவசாய கடன்களை ரத்து செய்து முதல் கையெழுத்திட்டார். பின்னர் அவர் கூறியதாவது:

ம.பி., மாநிலத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், உ.பி., பீஹார் மாநிலங்களில் இருந்து வருபவர்கள் தான் அங்கு வேலை செய்கின்றனர். அவர்களை நான் குற்றம் சொல்லவில்லை. இருப்பினும், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் போகிறது. எனவே, 70 சதவீத பணியிடங்களை உள்ளூர் இளைஞர்களை கொண்டு நிரப்பும் தொழிற்சாலைகளுக்கு சலுகை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும். வேலை வாய்ப்பை அதிகரிக்க, ஆயத்த ஆடை, ஜவுளி பூங்காக்கள் துவக்கப்படும்.

இவ்வாறு கமல்நாத் பேசினார்.
இவரது இந்த பேச்சு எதிர்க்கட்சியினர் மத்தியில் கண்டனத்தை கிளப்பி உள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19-டிச-201803:58:35 IST Report Abuse
J.V. Iyer UP , பீகாரில் மக்கள் தொகை அதிகம். அங்கு அதிகள் வேலை வாய்ப்பில்லை. அங்கு மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது அவசியம்.
Rate this:
Cancel
Rajalakshmi - Kuwait City,குவைத்
19-டிச-201800:55:06 IST Report Abuse
Rajalakshmi இந்த கமல்நாத் ஒரு பெங்காலி. மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் அல்ல.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
18-டிச-201822:39:59 IST Report Abuse
Pugazh V சோனியா இந்திய சிட்டிசன்ஷிப் எடுத்து பல ஆண்டுகளாகின்றன. இன்னும் கூட இத்தாலி இத்தாலி என்று அனத்திண்டே இருக்கா. இதைக்கேட்டு இத்தாலிக்காரன் காண்டாகி குண்டு போடப் போறான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X