மும்பை: 2014-ம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதியின் படி ஒவ்வொரு இந்தியர் வங்கி கணக்கி்ல் ரூ. 15 லட்சம் டிபாசிட் செய்யப்படும் என மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே நம்பிக்கை தெரிவித்தார்.
மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் மத்திய இணை அமைச்சராக இருப்பவர் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் ராம்தாஸ் அத்வாலே நேற்று மகாராஷ்டிரா மாநிலம், சங்லி மாவட்டம், இஸ்லாம்பூர் பகுதியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ,நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் 3 மாநிலங்களில் பா.ஜ.வுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது கவலை அளிக்கிறது.
வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ.வுடன் சிவசேனா இணைய வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி, 2014-ல் லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது அறிவித்தபடி, ஒவ்வொரு இந்தியர் வங்கிக் கணக்கிலும், ரூ.15 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்யப்படும் என அறிவித்தார்.ஆனால் மத்திய (ரிசர்வ்) வங்கியில் அவ்வளவு தொகை இல்லாததால்தான் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. விரைவில் ரூ. 15 லட்சம் டிபாசிட் செய்யப்படும் என நம்புகிறேன் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE