தமிழக வீரருக்கு 'ஜாக்பாட்' ரூ. 8.4 கோடிக்கு வாங்கப்பட்ட வருண்

Added : டிச 18, 2018 | கருத்துகள் (2) | |
Advertisement
ஜெய்ப்பூர்:ஐ.பி.எல்., ஏலத்தில் தமிழக 'ஆல் ரவுண்டர்' வருண் சக்ரவர்த்தி ரூ. 8.4 கோடிக்கு பஞ்சாப் அணியினால் வாங்கப்பட்டார். வேகப்பந்து வீச்சாளர் உனத்கட் (ராஜஸ்தான்) ரூ. 8.4 கோடிக்கு ஏலம் போனார்.இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின் 12வது சீசன் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் இன்று ஜெய்ப்பூரில் நடக்கிறது. எட்டு அணிகளில் 70 இடங்களுக்கு வீரர்கள் தேர்வு
தமிழக, வீரருக்கு, 'ஜாக்பாட்',  ரூ. 8.4 கோடி, வருண்

ஜெய்ப்பூர்:ஐ.பி.எல்., ஏலத்தில் தமிழக 'ஆல் ரவுண்டர்' வருண் சக்ரவர்த்தி ரூ. 8.4 கோடிக்கு பஞ்சாப் அணியினால் வாங்கப்பட்டார். வேகப்பந்து வீச்சாளர் உனத்கட் (ராஜஸ்தான்) ரூ. 8.4 கோடிக்கு ஏலம் போனார்.
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின் 12வது சீசன் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் இன்று ஜெய்ப்பூரில் நடக்கிறது. எட்டு அணிகளில் 70 இடங்களுக்கு வீரர்கள் தேர்வு நடக்கிறது.
இந்தியாவின் 228 வீரர்கள், வெளிநாட்டின் 123 வீரர்கள் என 13 நாடுகளில் இருந்து மொத்தம் 351 பேர் பங்கேற்கின்றனர். தமிழகத்தின் சேலத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சு 'ஆல் ரவுண்டர்' வருண் சக்ரவர்த்தி ஏலத்தில் வந்த போது முதலில் சென்னை அணி அதிகபட்சம் ரூ. 3.4 கோடி வரை ஏலம் கேட்டது. அடுத்து ராஜஸ்தான், கோல்கட்டாவும் போட்டியிட்டன. கடைசியில் ரூ. 8.4 கோடி கொடுத்து பஞ்சாப் அணி வாங்கியது.
மீண்டும் அதிகம்
வேகப்பந்து வீச்சாளர் உனத்கட்டை சென்னை அணி ரூ. 5.8 கோடி வரை ஏலம் கேட்டது. பின் பஞ்சாப், ராஜ்ஸ்தான் அதிக தொகைக்கு கேட்க, சென்னை அணி விலகிக் கொண்டது. கடைசியில் ரூ. 8.4 கோடி கொடுத்து ராஜஸ்தான் அணி வாங்கியது. கடந்த ஆண்டு ராஜஸ்தான் அணி இவரை ரூ. 11.5 கோடிக்கு வாங்கியிருந்தது.
கர்ரான் கலக்கல்
இங்கிலாந்து அணியின் இளம் வேகப்பந்துவீச்சு 'ஆல் ரவுண்டர்' சாம் கர்ரான். இங்கிலாந்து தொடரில் இந்திய அணிக்கு குடைச்சல் தந்தார். இவருக்கு ரூ. 7.20 கோடி கொடுத்து பஞ்சாப் அணி தட்டிச் சென்றது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
18-டிச-201823:02:17 IST Report Abuse
Mannai Radha Krishnan அடிமைகளைத்தான் ஏலம் போடுவார்கள் என்று கேள்வி. இவர்களையுமா ?
Rate this:
Cancel
POLLACHI JEAYASELVAN sanjose USA - SANJOSE,யூ.எஸ்.ஏ
18-டிச-201820:06:14 IST Report Abuse
POLLACHI  JEAYASELVAN   sanjose USA கருப்பு பணமாகவா வெள்ளை பணமாகவா டிஜிட்டல் இந்திய மாக்களின் பெருமைகளில் இதுவும் ஓன்று ,இந்தியா விளங்கிடும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X