பொது செய்தி

இந்தியா

புதுமண தம்பதிக்கு கழிப்பறை சாதனம் பரிசு

Added : டிச 18, 2018
Advertisement
புதுமண தம்பதிக்கு கழிப்பறை சாதனம் பரிசு

பிரயாக்ராஜ், உத்தர பிரதேசத்தில், 'ஜெய்ஸ்வால் சமாஜ்' அமைப்பு சார்பில் நடந்த, இலவச திருமண நிகழ்ச்சியில், தம்பதிக்கு, கழிப்பறை சாதனம் பரிசாக வழங்கப்பட்டது.உ.பி.,யில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்குள்ள பிரயாக்ராஜில், ஜெய்ஸ்வால் சமாஜ் என்ற அமைப்பு சார்பில், ௧௮ ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கப்பட்டது.இதையொட்டி, மணப்பந்தலுக்கு, திருமண ஜோடிகள், குதிரைகளில், ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். திருமணத்துக்கு பின், தம்பதியருக்கு, ஜெய்ஸ்வால் சமாஜ் சார்பில், கழிப்பறை சாதனமும், மரக்கன்றும், பரிசாக வழங்கப்பட்டன.வழக்கமாக, பீரோ, தையல் மிஷின், பாத்திரங்கள் போன்றவை தான் பரிசாக வழங்கப்படும். ஆனால், முதல் முறையாக, கழிப்பறை சாதனம் பரிசாக வழங்கப்பட்டது, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.இது பற்றி, ஜெய்ஸ்வால் சமாஜின் தலைவர், டி.என்.ஜெய்ஸ்வால் கூறியதாவது:மத்திய அரசின், 'துாய்மை இந்தியா' திட்டம், எங்களை மிகவும் கவர்ந்துள்ளது. அதனால், வழக்கமாக தரும் பரிசு பொருட்களுக்கு பதிலாக, கழிப்பறை சாதனத்தை பரிசாக அளித்தோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X