பொது செய்தி

தமிழ்நாடு

ஓவியப்போட்டி: பாராட்டு விழா

Added : டிச 18, 2018
Advertisement
 ஓவியப்போட்டி: பாராட்டு விழா

சிதம்பரம்:கேசினோ அடுமனை தமிழ்நாடு ஓவியர் சங்கம் சார்பில் நடந்த ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா கடலுாரில் நடந்தது.கேசினோ அடுமனை இனிப்பகம், ஏ.ஆர்.பெயிண்டிங் ஸ்டுடியோ, தமிழ்நாடு ஓவியர் சங்கம் மற்றும் ராஜ்கோ நிறுவனம் சார்பில் ஓவிய போட்டி கடந்த வாரம் கடலுார் டவுன் ஹாலில் நடந்தது. போட்டியில் மாவட்டத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கு, செம்மண்டலம் இம்பீரியல் பிளாசாவில் நடந்த பாராட்டு விழாவை புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூட வண்ணவியல் துறை பேராசிரியர் சேகர் துவக்கி வைத்தார். மனநல ஆலோசகர் கோமதி சிறப்புரையாற்றினார்.நுரையீரல் மருத்துவர் கலைக்கோவன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு ஓவியர்கள் சங்க மாநில பொதுச் செயலர் அன்பரசு, ராஜமோகன், ரமேஷ், ராஜசேகர், ஓவியப் பயிற்சி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.பாஸ்கர் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X