பொது செய்தி

தமிழ்நாடு

ரூ. 200 கோடி கோவில் நிலம் 'ஸ்வாகா?'

Added : டிச 18, 2018
Advertisement
 ரூ. 200 கோடி கோவில் நிலம் 'ஸ்வாகா?'

திருப்பூர்:ஊதியூர் அருகே, கோவில் நிலத்தை ஆக்கிரமித்து பால் பண்ணை அமைப்பதை தடுக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம், காங்கயம், ஊதியூர் அருகே உள்ளது, உத்தண்ட வேலாயுதசுவாமி கோவில். இக்கோவிலுக்கு சொந்தமான, பல நுாறு ஏக்கர் நிலம் ஊதியூர் சுற்றுப்பகுதிகளில் உள்ளது.
ஊதியூர் மலையடிவாரம் பகுதியில், குண்டடம் ரோட்டில் உள்ள கோவில் நிலம், 95 ஏக்கரில் தனியார் நிறுவனம் ஒன்று, பல கோடி ரூபாயில் பால் பண்ணை கட்டும் பணியை, 2017 இறுதியில் துவக்கியது.இதையறிந்த இந்து முன்னணி மற்றும் வி.எச்.பி., அமைப்பினர், கோவில் நிலத்தை மீட்க வலியுறுத்தி, போராட்டம் நடத்தினர். அறநிலையத்துறை அதிகாரிகள், நிலத்தை ஆய்வு செய்து, ஊதியூர் தேவதாய கிராம இனாம் நிலங்கள் என்றும், இரண்டு கோவில்களுக்கு உரிமை பெற்றது என்றும் கண்டறிந்தனர்.'கோவில் நிலத்தில் அத்துமீறி நுழைந்தால், பிணையில் வர முடியாத குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும், எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனால், கட்டுமான பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், சில நாட்களாக, மீண்டும் கட்டுமான பணி துவங்கியுள்ளது.பக்தர்கள் கூறுகையில், 'கோர்ட் உத்தரவுப்படி, ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. ஆனால், ஊதியூர் உத்தண்ட வேலாயுதசுவாமி கோவிலுக்குச் சொந்தமான, சுமார் ரூ.200 கோடி மதிப்பிலான நிலத்தில், ஆளுங்கட்சி முக்கிய புள்ளி துணையுடன் தனியார் பால் பண்ணை அமைக்கும் முயற்சி மீண்டும் துளிர்விட்டுள்ளது.
ஆளுங்கட்சியினர் தலையீடு காரணமாக, அதிகாரிகள் தயங்குவதாக சந்தேகம் எழுகிறது. தமிழக அரசு இப்பிரச்னையில், சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.சிவன்மலை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில், உதவி கமிஷனர் கண்ணதாசனிடம் கேட்ட போது,''கோவில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக புகார் எழுந்ததால், ஆய்வு செய்து, பணிகள் நிறுத்தப்பட்டன. விசாரணை நடத்திய தாராபுரம் சப்-கலெக்டர், கோவிலுக்கு சேர்ந்த இடம் இல்லையென, பிப்., 2ல் அறிவித்தார்.''சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்ததால், சப்-கலெக்டர் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. பால் பண்ணை உரிமையாளர்கள் மேல்முறையீட்டு மனுவை, ஜூன் 30ம் தேதி,ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
இந்நிலையில், மீண்டும் பணிகள் துவங்கியுள்ளதால், சட்ட ரீதியாகநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.'பட்டா இருக்கிறதாம்'காங்கயம் தாசில்தார் மகேஸ்வரனிடம் கேட்டபோது,''சம்பந்தப்பட்ட, 95 ஏக்கர் நிலத்துக்கு, 1967ல் வருவாய்த்துறை பட்டா வழங்கியுள்ளது.ஹிந்து சமய அறநிலையத்துறை முறையீடு செய்ததால், தாராபுரம் சப்-கலெக்டர் விசாரணை நடத்தி, தனியாருக்கு சொந்தமான நிலம் என, கடந்த பிப்., மாதம் தீர்ப்பு வழங்கியுள்ளார். நில உரிமையாளர் கேட்டுக்கொண்டதன் படி, போலீஸ் பாதுகாப்புடன் பணிகள் நடக்கின்றன,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X