தமிழகத்தில் தேர்தல் அரசியல்

Added : டிச 19, 2018
Advertisement

தமிழகத்தில் தேர்தல் அறிகுறி உடனடியாக வராவிட்டாலும், ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள், ஆளும் கட்சி உட்பட முக்கியக் கட்சிகள் அனைத்தையும், தேர்தல் பாதையை நோக்கி நகர வைத்திருக்கிறது.அதிலும் முக்கியக் கட்சியான ஆளும், அ.தி.மு.க., வில் உள்ள முக்கியத் தலைவர்கள், ஜெயலலிதா பாதையில் பயணிப்பதாக கூறினாலும், அரசும், கட்சியும், தினமும் ஏதாவது ஒரு பிரச்னையைச் சந்திக்கின்றன.முக்கிய எதிர்க்கட்சியான, தி.மு.க., அதிக சட்டசபை இடங்களை வைத்திருந்த போதும், பல முடிவுகளை புதிய கோணத்தில் எடுக்க வேண்டிஇருக்கிறது.தமிழக ஐகோர்ட் வழக்குகளில் வழங்கப்படும் தீர்ப்புகள், அந்தந்த நேரங்களில், இரு கட்சிகளுக்கும் சாதகமாக வருவதும், சமயங்களில் பாதகமாக அமைவதும், மக்கள் நினைவில் நிற்காது. அதே சமயம், தமிழகத்தில் எல்லாத் துறைகளிலும் ஊழல் அதிரடி வேட்டையும், பொருளாதார அமலாக்கத்துறை அதிரடி சோதனைகளும், மணல் குவாரி ஊழல், மிகப்பெரிதாக மாறிய, 'குட்கா ஊழல்' என்ற பல விஷயங்கள், இவ்வளவு பெரிதாக இருக்கும் என்று, கற்பனை செய்து பார்க்க முடியாதது.அதற்குக் காரணம், அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் தங்கள் ஆட்சிக் காலங்களில் அளித்த இலவசங்கள், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட, நடைமுறைப்படுத்தப்பட்ட ஊழல் வளங்கள். அதிலும் மத்திய அரசு அளிக்கும் இலவசத்தின் மீது, மற்றொரு இலவசம் வழங்கும் நடைமுறைகள் தொடர்ந்தன. இப்போது பட்ஜெட் நிதிப் பற்றாக்குறை மட்டும் அல்ல; தொடர் வறட்சி அல்லது அபாயகரமான புயல் ஆபத்து ஆகியவை, நமக்கு பழகி வருகின்றன.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பின் ஏற்பட்ட வெற்றிடம் மிகவும் பெரியது. கேள்வியே கேட்க முடியாத மாபெரும் திராவிடத் தலைவராக இருந்த அவர் மரணமே, விசாரணை ஆணையத்தில் சர்ச்சையாகி இருக்கிறது. தி.மு,க., தலைவர் கருணாநிதி போல, தமிழகத்தில் தனது மூதாதையரை அவர் கொண்டிருந்தவர் என்ற தகவல்கள் இன்று தேவையா? அவருக்கு நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா, அவருடைய மரணத்திற்கு பின் அக்கட்சித் தலைமையை சில நாட்கள் ஏற்று, ஊழல் வழக்கில் இன்று சிறையில் இருக்கிறார்.அவரிடம் வருமானவரித்துறை கேட்ட கேள்விகள் பலவற்றிற்கு, 'தெரியாது அல்லது நினைவில்லை' என்ற பதில்கள் சரியே. ஏனெனில், மிகப்பெரும் அரசியல் தலைவர்களை காக்க, அளவு கடந்த பணமும், அதற்கேற்ற வழக்கறிஞர்கள் குழுமமும் செயல்படும் போது, இதன் முடிவுகள் வருமுன்பாக, மக்கள் பல விஷயங்களை மறந்து விடுவர்.அவரைச் சார்ந்து, தனிக்கட்சி தொடங்கியிருக்கும் தினகரன், தன் தரப்பில் ஓராண்டிற்கும் மேலாக, 18 எம்.எல்.ஏக்களை வைத்திருந்தவர். அவர் இன்று ஜெயலலிதா காலத்தில் சில மாதங்கள் அமைச்சராக இருந்த, செந்தில் பாலாஜியை கைநழுவ விட்டு விட்டார். காரணம், இருவருக்கும் பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் வந்து விட்டதால், தன்னிடம் உள்ளவர்களை, 'விளைந்த நெற்பயிர் என்றும், அதில் செந்தில் பாலாஜி செழிப்பாக வளர்ந்த களை' என்கிறார். இளையதாக இருக்கும் போதே இக்களையை ஏன் தினகரன் அகற்றவில்லை? கரூர் தொகுதியை எதிர்பார்த்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலினிடம், இவர் ஐக்கியமாகி விட்டார் என்று கருதலாம்.திராவிடக் கட்சிகளில் உள்ள தலைவர்கள், தங்களுக்குள் மிக மோசமாக விமர்சிப்பதும், பின்பு ஏதாவது ஒரு சாக்கில் ஒட்டிக் கொள்வதற்கும், பெரிய அளவு சித்தாந்தம் தேவையல்ல. தி.மு.க.,வில், 'குடும்பத் தலைவர்கள்' பெறும் முக்கியத்துவம் அங்கீகரிக்கப்பட்ட அளவுகோலாக இருக்கிறது.அத்துடன் புதிய தலைமைச் செயலக கட்டடம் தொடர்பான, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கும் அரசாணை ரத்து என்பது ஒரு, 'பிளஸ் பாயின்ட்.' டில்லியில், 'மகா பெரிய கூட்டணித் தலைவர்களுடன்' ஸ்டாலின் பேசியது, முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பில், காங்கிரஸ் தலைவர் சோனியா பங்கேற்று, அதில் பிரதமர் வேட்பாளர் என்று அவருக்கு கிடைத்த அங்கீகாரம் ஆகியவை, தேர்தல் ஆதாயத்திற்கான செயல்கள்.ஆளும், அ.தி.மு.க.வில், பிரிந்து சென்றவர்களில் தினகரன் தவிர, அனைவருக்கும் இடம் உண்டு என்ற, முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு, அவரது முக்கியத்துவம் அதிகரித்திருப்பதை உணர்த்துவதாகும். மேகதாது அணைக்கட்டு விஷயத்தில், அ.தி.மு.க., எடுத்த முடிவுகள், அக்கட்சியின் ஆளுமையை வளர்க்கும் அறிகுறியாகும். துணை முதல்வர் பன்னீர் செல்வம் எந்த அளவு பழனிசாமியை தாண்டி, கட்சியில் அதிக முக்கியத்துவம் பெறுவார் அல்லது மற்ற அமைச்சர்களில் யார் முந்துவர் என்பதற்கும் சுலபமான பதில் கிடைக்காது.தவிரவும், தமிழகத்தில், காங்., மற்றும் பா.ஜ., செல்வாக்கை, முன்கூட்டியே மதிப்பிட வழி ஏதும் காணோம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X