கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு மின்சாரம் திருட்டு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு மின்சாரம் திருட்டு

Added : டிச 19, 2018 | கருத்துகள் (21)
Advertisement
Karunanidhi statue ,D Jayakumar, Power theft, கருணாநிதி சிலை திறப்பு , தி.மு.க., ஜெயகுமார், D ஜெயகுமார் , அமைச்சர் ஜெயகுமார் , திருட்டு மின்சாரம், மின்சாரம் திருட்டு, Karunanidhi statue opening, DMK, Jayakumar, Minister Jayakumar, theft power supply,

சென்னை: ''கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்காக, மாநகராட்சி விதிகளை மீறி, தி.மு.க.,வினர், திருட்டுத்தனமாக, மின்சாரம் எடுத்துள்ளனர். அவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மீன்வளத் துறை அமைச்சர், ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயகுமார் பேசியதாவது: காங்., -- தி.மு.க., கூட்டணி, 'கூடா நட்பு கேடாய் முடியும்' என்பது போல அமையும். கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற, காங்., தலைவர்கள், சோனியா, ராகுல் உள்ளிட்டோர், தமிழகத்தில் நிலவி வரும், மேகதாது அணை விவகாரம், 'கஜா' புயல், ஸ்டெர்லைட் பிரச்னை போன்றவை குறித்து பேசாமல், கூட்டணி குறித்து மட்டும் பேசியுள்ளனர்.

விழாவையொட்டி, தி.மு.க., சார்பில், பல பகுதிகளில், சாலையோரம் அலங்கார விளக்குகள் மற்றும் கட் - -அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கு தேவையான மின்சாரத்தை, மாநகராட்சி விதிகளுக்கு புறம்பாக, திருட்டுத்தனமாக எடுத்துள்ளனர். அவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-டிச-201819:14:08 IST Report Abuse
நாஞ்சில் நாடோடி சிலை திருட்டும், மின்சாரம் திருடுவதும் டிராவிட கட்சிகளுக்கு கைவந்த கலை. எல்லாம் மின்வாரிய அதிகாரிகளுக்கு தெரிந்தே நடக்கும்...
Rate this:
Share this comment
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
19-டிச-201816:45:37 IST Report Abuse
Vijay D Ratnam என்னது திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது திருட்டு பழியா. ஒழுக்கம், நேர்மை, உண்மையின் மீது இப்படி பழி போடுகிறாரே.
Rate this:
Share this comment
Cancel
adalarasan - chennai,இந்தியா
19-டிச-201812:36:33 IST Report Abuse
adalarasan என்ன புதுசா இருக்கே ?தேருக்கு தேருக்கு, எல்லா கழகங்கள், அரசியல்வாதிகளுக்கு மின்சாரம் திருடுவது என்பதை நடைமுறைக்கு வந்து பல காலங்கள் ஆகிவிட்டனவே? மக்கள்தான் மடையர்கள், இதெற்கெல்லாம் மாற்றம் கொண்டுவர வழியில்லை? சட்டப்படி, உள்ளே தள்ளலாமே, நடவடிக்கை எடுப்பீர்களா?இதையே ஒரு ஏழை எளியவர் செய்தால், நிச்சயமாக உள்ளே போயிடுவார்?இதுதான் நம்ம ஊர் ஜனநாயகம்?திரும்ப திரும்ப அதே மக்கள் இவர்களுக்கு வோட்டு வேறு போடுவார்கள்?வேறு வழியில்லை போலும்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X