பொது செய்தி

இந்தியா

விலை குறையும் பொருட்களின் பட்டியல்

Added : டிச 19, 2018 | கருத்துகள் (42)
Advertisement
PM Modi, GST,Narendra Modi, ஜிஎஸ்டி, விலை குறையும் பொருட்கள், ஏசி, ஜிஎஸ்டி வசூல், பிரதமர் மோடி , மத்திய அரசு , 
 price cuts, AC, GST collections, Prime Minister Modi, Central Government, Gst Slab, Modi,

புதுடில்லி : 99 சதவீத பொருட்களை 18 சதவீதத்திற்கும் குறைவான ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக, நேற்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதன் மூலம்விலை குறையும் பொருட்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 25 முதல் 30 பொருட்களின் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட உள்ளது. இனி ஆடம்பர பொருட்கள் மட்டுமே 28 சதவீத ஜிஎஸ்டி வரம்பிற்குள் இருக்கும். மற்ற பொருட்கள் அனைத்தும் 18 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான ஜிஎஸ்டி வரம்பிற்குள்ளாகவே இருக்கும். 2017 ம் ஆண்டு ஜூலை மாதம் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட போது 226 பொருட்கள் 28 சதவீத ஜிஎஸ்டி வரம்பிற்குள் இருந்தன. தற்போது 35 பொருட்கள் மட்டுமே 28 சதவீதம் ஜிஎஸ்டி வரம்பிற்குள் உள்ளன.


விலை குறையும் பொருட்கள் :தற்போது 25 முதல் 30 பொருட்களின் ஜிஎஸ்டி குறைக்கப்பட உள்ளது. ஏசி, டிஷ்வாஷர்ஸ், டிஜிட்டல் கேமரா, வீட்டு உபயோகப் பொருட்கள், சிமென்ட், டயர், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், நீர்பாசனம் உள்ளிட்ட பண்ணை விவசாயம் தொடர்பான பொருட்கள் 18 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வரப்படஉள்ளன.


விலை உயரும் பொருட்கள் :ஆட்டோமொபைல்ஸ், குளிர்பானங்கள், சிகரெட், பான் மசாலா, புகையிலை தயாரிப்புக்கள், சொகுசு படகுகள், தனிநபர் உபயோகத்திற்கான சிறிய ரக விமானங்கள், கை துப்பாக்கிகள் உள்ளிட்டவைகளின் விலை உயர்த்தப்பட்டு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்பட உள்ளன.


இனி 4 சதவீதம் மிச்சம் :ஜிஎஸ்டி வரம்பு குறைக்கப்படுவதால் இதற்கு முன் இருந்ததை விட 4 சதவீதம் வரை சேமிக்க முடியும். ஜிஎஸ்டிக்கு முன் டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின் மீது 31.3 சதவீதம் வரி இருந்தது. இனி இது 18 சதவீதமாக குறையும். மர சாமான்கள் மீது விதிக்கப்ப்டடு வந்த 25 முதல் 31 சதவீத வரி இனி 18 சதவீதமாக குறையும். 18 முதல் 25 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்த மொபைல் போன்களுக்கு இனி 12 சதவீதம் மட்டுமே ஜிஎஸ்டி விதிக்கப்படும்.

ஏற்கனவே ஜிஎஸ்டி வசூல் நிர்ணயித்த இலக்கான ரூ.1 லட்சம் கோடியை விட அதிகரித்து ரூ.1.2 லட்சம் கோடியாக இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது மேலும் சில பொருட்களின் மீதான வரி குறைக்கப்படுவதால் ஜிஎஸ்டி வசூல் வரும் மாதங்களில் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சிமென்ட் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளதால் மட்டும் இனி ஆண்டுக்கு ரூ.20,000 முதல் 25,000 கோடி ஜிஎஸ்டி வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. சிமென்ட் உற்பத்தி அதிகரிக்கும் என்பதால் இது வீடு வாங்குபவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rmr - chennai,இந்தியா
20-டிச-201819:14:06 IST Report Abuse
rmr petrol diesel எதெற்கு gst குல் கொண்டு வர வில்லை தங்கம் என்ன கணக்கு ? இதை கெட்டி மக்களுக்கு என்ன பயன் ?
Rate this:
Share this comment
Cancel
siriyaar - avinashi,இந்தியா
19-டிச-201819:04:12 IST Report Abuse
siriyaar அய்யா மோடி அவர்களே நாங்கள் திராவிடர்கள் எங்களுக்கு இது தேவை இல்லை. தினமும் ஒரு பாக்கட் பிரியானி, ஒரே ஒரு குவார்ட்டர். இலவச டிவி சன்னல் மாசம் மாசம் இரண்டாயிரம் போராட்ட அலவன்ஸ். இல்லைனா நீங்க சிலை திருட்டை அணுமதிக்கனும் கோவில் நகைகளை திருட விடனும் அத்து மன்னை அல்ல விடனும் மலை பேத்து விக்க விடனும். முடிஞ்ச செம்மரம் வெட்ட விடணும் எங்களை திருட விடுங்க இல்லின்னா இலவசமா கொடுங்க இல்லின்னா... மோடி ஓழிகா மோடி ஓழிகா.
Rate this:
Share this comment
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
21-டிச-201815:19:52 IST Report Abuse
மூல பத்திரம் டாஸ்மாக் விட்டுட்டீங்களே...
Rate this:
Share this comment
yila - Nellai,இந்தியா
21-டிச-201823:17:12 IST Report Abuse
yilaநல்ல வேளை....மனிதர்களைக் கொல்லும் கலவரங்களையும், மாட்டுக்கூட்டங்களின் கொலைகளையும்விட, இவைகள் எவ்வளவோ பரவாயில்லை.......
Rate this:
Share this comment
Cancel
Shanmuga Sundaram - Bangalore,இந்தியா
19-டிச-201817:25:37 IST Report Abuse
Shanmuga Sundaram just propaganda.... go to shop and check prices.... before gst and after gst?..... chennai/vadapalani Plain-dosa costing 60/- rupees on small hotel Margo-soap - it was 22 before GST now 25/-.... if govt reducing tax why this price raise? on to hotel consumers and FMCG?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X