அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் தம்பி திடீர் நீக்கம்

Updated : டிச 19, 2018 | Added : டிச 19, 2018 | கருத்துகள் (19) | |
Advertisement
சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா , அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் - இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்டுப்பாட்டை மீறி,
அதிமுக, ஓபிஎஸ், நீக்கம், ராஜா

சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா , அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் - இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால், பெரியகுளம் நகராட்சி முன்னாள் தலைவர் ஓ.ராஜா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கட்சியினர் யாரும் இவருடன் தொடர்பு வைத்து கொள்ளக்கூடாது என கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


ஆவினுக்கு தேர்வு:


மதுரை ஆவின் தலைவராக இன்று (டிச.19) தான் ராஜா தேர்வு செய்யப்பட்டார். இவர் தேர்வு செய்யப்பட்ட விதத்தில் ஏராளமான புகார்கள் கூறப்பட்டன. ஓட்டளிக்கும் உறுப்பினர்களை கடத்தி வைத்து, அவர் வெற்றி பெற்றதாகவும் கூறப்பட்டது. இதன் பின்னணியில் தான் கட்சியை விட்டு அவர் நீக்கப்பட்டிருக்கிறார் என்கிறார்கள் கட்சினர்.




அமைச்சர் ஜெயகுமார் வரவேற்பு


ஓ.ராஜா இன்று அ.தி.மு.க.வில் இருந்து திடீரென நீக்கப்பட்டது குறித்து அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, கட்சிக்கு விரோதமாக நடந்து கொண்டதால் தான் அவர் நீக்கப்பட்டார். அண்ணன் , தம்பி யாராக இருந்தாலும் நடவடிக்கை பாயும். மற்றவர்களுக்கு இது உதாரணமாக இருக்கும். ஒ.ராஜாவை நீக்கியதை நான் வரவேற்கிறேன் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரபேல் ராகுல் பாய் - வயநாடு தொகுதி,இந்தியா
20-டிச-201815:07:38 IST Report Abuse
ரபேல் ராகுல் பாய் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஒரு ஞாயமா?? அவரையும் நீக்கலாமே??
Rate this:
Cancel
Balasubramaniam - Tirupur,இந்தியா
19-டிச-201823:48:56 IST Report Abuse
Balasubramaniam நன்று. ஆனால் late
Rate this:
Cancel
Vanavaasam - Dallas,Fort Worth,யூ.எஸ்.ஏ
19-டிச-201820:56:00 IST Report Abuse
Vanavaasam எங்கள் அம்மாவின் வளர்ப்பு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X