புதுடில்லி: திரிபுராவை போல், தமிழகத்திலும் பா.ஜ.,வுக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.
அபாயகரமான விளையாட்டு
தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பா.ஜ., நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:
காங்கிரசின் ஜனநாயக விரோத முறைக்கு சரியான பதில், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே. ஜனநாயகத்திற்கு தகவல் மற்றும் விழிப்புணர்வு ஆகியவை முக்கியம். காங்கிரஸ் மற்றும் அதன் அபாயகரமான விளையாட்டு குறித்து மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்.தேர்தலுக்கு முன்னர் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரம் குறித்து கேள்வி எழுப்பி, அதன் மீது சந்தேக பார்வையை எழுப்ப முயற்சிப்பார்கள். ஆனால், தேர்தலுக்கு பின்னர், காங்கிரஸ் வெற்றி பெற்றால், எந்திரங்களை ஏற்றுக் கொள்வார்கள்.
தந்திரம்
ராணுவம், சிஏஜி உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் காங்கிரஸ் அவமானபடுத்தியுள்ளது. சமீபத்தில், சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பை அக்கட்சி விரும்பாத காரணத்தினால், அது குறித்து கேள்வி எழுப்பியது. முன்னர், கோர்ட்டை மிரட்டியதுடன் மட்டுமல்லாமல், பதவி நீக்கம் செய்யப்போவதாக கூறி அச்சுறுத்தியது.அவசரகால நிலையை பிரகடனப்படுத்திய காங்., இப்போது பா.ஜ.,வை குறை சொல்கிறது.
திரிபுரா மாநிலத்தை போன்று தமிழகத்திலும் பா.ஜ., வெற்றி பெற வேண்டும். நாட்டின் ஜனநாயகத்தை கட்டி காப்பவர்கள் மக்கள தான். இதனால், காங்., தந்திரத்தால் அதை அழிக்க பார்க்கிறது.
ஜனநாயக்தை உதாசீனப்படுத்தி வந்த காங்., தற்போது மத்திய அரசு மீது குறை சொல்கிறது. புதுச்சேரியில் பாஜவை வலுப்படுத்த சம்பந்தப்பட நிர்வாகிகள் தங்களின் பூத் பகுதிக்கு சென்று தேர்தல் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE