தி.மு.க., ஸ்டாலினின் பேச்சுக்குக் கிளம்புது எதிர்ப்பு! Dinamalar
பதிவு செய்த நாள் :
தி.மு.க., ஸ்டாலின், பேச்சு, கிளம்புது,எதிர்ப்பு!

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் ராகுலை, பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசியதற்கு, எதிர்க்கட்சி கூட்டணியில் எதிர்ப்பு வலுத்துள்ளது. சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும், ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ''யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம்,'' என, அவர் கூறியுள்ளார். திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா, ''இது போன்ற பிரச்னைகள் தொடர்ந்தால், காங்கிரசுடன் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை,'' என, திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.
லோக்சபாவுக்கு, அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமை யிலான, தே.ஜ., கூட்டணி அரசுக்கு எதிராக, பலமான அணியாக களமிறங்க, எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து வருகின்றன.

ஆலோசனை


காங்கிரஸ் தலைமையில் கூட்டணியை உருவாக்க, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் தலைவருமான, சந்திரபாபு நாயுடு முயற்சித்து வருகிறார். இது தொடர்பாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உட்பட, பல்வேறு கட்சித் தலைவர்களுடன், அவர் ஆலோசனை நடத்தினார். சமீபத்தில், ஐந்து மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில், மூன்றில், காங்கிரஸ் வென்றது. இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்நிலையில், சென்னையில் நடந்த, கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பேசிய, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிகிறேன்.

மற்ற கட்சித் தலைவர்களும் ஆதரவு தர வேண்டும்' என்றார்.எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள கட்சிகள், ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. 'இது ஸ்டாலினின் தனிப்பட்ட விருப்பம்' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.
உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான, மாயாவதி உள்ளிட்டோரும், ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 'ஸ்டாலின் தன்னிச்சையாக, தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார்' என, பல்வேறு கட்சித் தலைவர்கள், கருத்து தெரிவித்திருந்தனர்.

தேவையில்லாத ஒன்று


ஸ்டாலின் பேச்சுக்கு, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான, மம்தா பானர்ஜியும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.''ஸ்டாலின் பேச்சு தற்போதைக்கு தேவையில்லாத ஒன்று. பிரதமர் வேட்பாளர் குறித்து,கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் அனைவரும் பேசி தான் முடிவு செய்ய வேண்டும்.

தேர்தலுக்குப் பிறகு அது குறித்து முடிவு செய்யப் படும்' என, மம்தா கூறியிருந்தார்.
தொடர்ந்து ராகுலை, பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தினால், கூட்டணியில் இருந்து வெளியேறவும் மம்தா தயாராக உள்ளதாக, அவரது கட்சித் தலைவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும், ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு உத்தர பிரதேசத்தில் நடந்த தேர்தலின்போது, அப்போது முதல்வராக இருந்த, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். சமாஜ்வாதியின் சின்னமான சைக்கிளில், இருவரும் ஒன்றாக பயணித்து, பிரசாரத்தில் ஈடுபட்டனர். தற்போது, தேசிய அளவிலான எதிர்க்கட்சிகள் கூட்டணியில், சமாஜ்வாதியும் இடம்பெற்றுள்ளது.
அதே நேரத்தில், சமீபத்தில் நடந்த, ஐந்து மாநில சட்டசபை தேர்தலில்,

காங்கிரசுடன் இணையாமல், சமாஜ்வாதி தனியாக போட்டியிட்டது. ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும், ஸ்டாலின் பேச்சு குறித்து, அகிலேஷ் யாதவ் கூறியதாவது:நாடு முழுவதும், பா.ஜ., அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அதனால் தான், மூன்று மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வென்றது.
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிரான வலுவான கூட்டணி அமைக்க, திரிணமுல் தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உட்பட பலர், பல்வேறு தலைவர் களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் வேட்பாளர் குறித்து, ஒருவர் கூறியது கூட்டணியின் கருத்தாகது. ஸ்டாலினின் கருத்தை, கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஏற்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. தற்போதைய நிலையில், யார் வேண்டுமானாலும், பிரதமராகலாம். தேர்தலுக்குப் பின்பே, அது குறித்து முடிவு செய்யப் படும்.இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்து, தேசிய அளவில், தி.மு.க.,வுக்கு முக்கியத்துவம் பெற்றுத் தரும் நோக்கத்துடன், ஸ்டாலின் பேசினார். ஆனால், பிரதமர் வேட்பாளர் கனவில், பல தலைவர்கள் உள்ளதால், அவரது பேச்சுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. கூட்டணியில் இருந்து, பல்வேறு கட்சிகள் வெளியேறும் அபாயத்தை, ஸ்டாலின் பேச்சு உருவாக்கி உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


Advertisement

வாசகர் கருத்து (89)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devanand Louis - Bangalore,இந்தியா
20-டிச-201822:18:26 IST Report Abuse

Devanand Louisஸ்டாலினின் பாஷையில் - ஒரு MP கூட இல்லாதநிலையில் பேசுவதற்கு அருகதையில்லை ,வக்கில்லை .5 -ஜீ ஊழலை இனிமேல் அரங்கேற்ற இப்பொய்த்துயிருந்தே ஸ்டாலின் திட்டம்தான் ஸ்டாலினின் விக்கிலாத பேச்சு

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
20-டிச-201822:08:12 IST Report Abuse

Pugazh Vகாங்கிரஸ் கூட்டணியைப் பார்த்து பாஜக அரண்டுவிட்டது என்று 56% மக்கள் சொல்லி யிருக்கிறார் கள் என்று காட்டப்பட்டது. இந்த செய்தியும் அந்த வகை தான்.

Rate this:
adalarasan - chennai,இந்தியா
20-டிச-201821:59:50 IST Report Abuse

adalarasanஇவரெல்லாம் அகில இந்தியா ,அரசியில் நுழைவது தெசையற்றது?சும்மா தமிழ்நாட்டில் தங்கள் வேலைகளை காட்டலாம்அங்கெல்லாம் போய்…?

Rate this:
மேலும் 86 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X