சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோஷ்டிப்பூசலில் வேஷ்டி பறிப்பு ஜட்டியுடன் நின்ற அ.தி.மு.க., பிரமுகர்

Added : டிச 20, 2018 | கருத்துகள் (1)
Advertisement

திருச்சி, திருச்சி விமான நிலையத்தில், அமைச்சரை வரவேற்க வந்த, அ.தி.மு.க., நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட மோதலில், டவுன் பஞ்சாயத்து முன்னாள் தலைவர், 10 நிமிடங்கள், வேஷ்டி இல்லாமல் நின்றார்.தமிழக சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் நேற்று மதியம், விமானம் மூலம், திருச்சி வந்தார். முன்னதாக, அவரை வரவேற்க, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.,வினர், விமான நிலையத்தில் காத்திருந்தனர்.இவர்களில், விராலிமலை ஒன்றிய பொருளாளர் கருப்பையாவும் இருந்தார். அங்கு, இலுப்பூர் டவுன் பஞ்., முன்னாள் தலைவர் குருபாபு வந்துள்ளார். அவரைப் பார்த்ததும் ஆத்திரமான கருப்பையா, 'எந்த பிரச்னைக்கும் நான் வர்றதில்லையே... அப்புறம் ஏன் என்னை பத்தி பேசுற. உன்னைப் போன்ற ஆட்களால் தான், அமைச்சருக்கு கெட்ட பெயர், என, சண்டையிட்டார்.குருபாபு பதிலுக்கு பேச, ஆத்திரமான கருப்பையா, குருபாபுவை உதைத்து கீழே தள்ளி, அவரது வேஷ்டியை உருவி விட்டார். பின், வேஷ்டியை கொடுக்கவும் மறுத்து விட்டார்.இதனால், குருபாபு, 10 நிமிடங்கள், வேஷ்டி இல்லாமல், ஜட்டியுடன் நின்றிருந்தார். அமைச்சர் வருகிறார் என தகவல் வந்ததும், அங்கிருந்தவர்கள், கருப்பையாவை சமாதானப்படுத்தி, வேஷ்டியை வாங்கிக் கொடுத்தனர். அதன்பின், குருபாபு வேஷ்டியை கட்டி, அமைச்சரை வரவேற்க சென்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Guru Swamy - Madurai,இந்தியா
20-டிச-201810:47:04 IST Report Abuse
Guru Swamy நாம் யாராவது இது போல் விமான நிலையத்தில் நின்றால் காவலர்கள் அனுமதிப்பார்களா?வெட்கம் ,சூடு சொரணை இல்லைன்னாதான் அரசியலில் முன்னேறமுடியும் போல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X