Upendra Kushwaha joins mahagathbandhan | மெகா கூட்டணியில் குஷ்வாகா ஐக்கியம்| Dinamalar

மெகா கூட்டணியில் குஷ்வாகா ஐக்கியம்

Added : டிச 20, 2018 | கருத்துகள் (1)
Advertisement
மெகா கூட்டணியில் குஷ்வாகா ஐக்கியம்


புதுடில்லி: பா.ஜ., தலைமையி லான தே.ஜ., கூட்டணியில் இருந்து சமீபத்தில் விலகிய, பீஹாரைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர், உபேந்திரகுஷ்வாகாவின், ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி, காங்., தலைமையிலான கூட்டணி யில் இணைந்துள்ளது. மத்தியில், பிரதமர் மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசில், நான்கரை ஆண்டுகளாக இடம் பெற்றிருந்தது, ஆர்.எல்.எஸ்.பி., எனப்படும், ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி. இந்த கட்சி தலைவர், உபேந்திர குஷ்வாகா, மத்திய அமைச்சராகவும் இருந்தார்.அடுத்தாண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலுக்காக, பீஹாரில், தே.ஜ., கூட்டணி கட்சிகளிடையே, தொகுதி பங்கீடு பற்றிய பேச்சில், ஆர்.எல்.எஸ்.பி.,க்கு, இரண்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.இதனால், அதிருப்தியடைந்த குஷ்வாகா, மத்திய அமைச்சர் பதவியை, சமீபத்தில் ராஜினாமா செய்தார். தே.ஜ., கூட்டணியில்இருந்து, ஆர்.எல்.எஸ்.பி., விலகுவதாகவும் அறிவித்தார்.
இந்நிலையில், பீஹாரில், காங்., தலைமையிலான, எதிர்க்கட்சிகளின் கூட்டணியில், ஆர்.எல்.எஸ்.பி., இணைந்தது.இது பற்றி குஷ்வாகா கூறுகையில், ''காங்., தலைவர் ராகுல், தற்போது அனுபவம் வாய்ந்த தலைவராக மாறியுள்ளார்,'' என்றார்.இதற்கிடையில், மத்திய உணவுத் துறை அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி தலைவருமான, ராம் விலாஸ் பஸ்வானை, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா சந்தித்து, தொகுதி பங்கீடு பற்றி பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajavel - Ariyalur,இந்தியா
21-டிச-201805:30:27 IST Report Abuse
Rajavel குஷ்வாகா மூழ்கும் பிஜேபி கப்பலில் பயணம் செய்ய விரும்பவில்லை. அதனால்தான் நல்ல நிலையில் பயணம் மேற்கொள்ளும் ராகுல் தலைமையிலான கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X