சென்னை:பெங்களூரு சிறையில் உள்ள, சசிகலா மீது, அந்நிய செலாவணி மோசடி வழக்கில், நேற்று மீண்டும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அமலாக்கத் துறை தொடர்ந்த, மேலும், இரு வழக்குகளில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய, ஜனவரி, 9ல், அவரை ஆஜர்படுத்தும்படி, சென்னை, எழும்பூர் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
ஜெ.ஜெ., 'டிவி'க்கு, வெளிநாட்டில் இருந்து, எலக்ட்ரானிக் உபகரணங்கள் வாங்கியதில், சசிகலா மற்றும் அவரது உறவினர் பாஸ்கரன் ஆகியோர், அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக, சென்னை, எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை, ஐந்து வழக்குகள் தொடர்ந்துள்ளது. இந்த வழக்குகளில், 2017 ஜூலையில், பாஸ்கரன் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள, சசிகலாவை, 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் ஆஜர்படுத்தி, குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. குற்றச் சாட்டுகள் பதிவுக்கு பின், அந்த ஆவணங்களில் கையெழுத்திடுவது போன்ற, சில நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. எனவே, சசிகலாவுக்கு எதிராக, மீண்டும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்காக, நவ., 30ல், அவரை நேரில் ஆஜர்படுத்த வேண்டும்
என,எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட், மலர்மதி உத்தரவிட்டு இருந்தார்.
இதை எதிர்த்து, சசிகலா தரப்பினர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.மனுவை விசாரித்த நீதிமன்றம், சசிகலாவை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆஜர்படுத்தி, குற்றச்சாட்டு களை பதிவு செய்ய வேண்டும் என, உத்தர விட்டது.அதன்படி, நேற்று காலை, 11:00 மணிக்கு,
மாஜிஸ்திரேட் மலர்மதி முன்,வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, சசிகலா ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம், அந்நிய செலாவணி மோசடி தொடர்பான, இரு வழக்குகளில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை, மாஜிஸ்திரேட், தமிழில் படித்து காட்டினார்.
அதற்கு சசிகலா, 'என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை; முழுவதையும் மறுக்கிறேன்' என, கூறினார்.அதை, மாஜிஸ்திரேட் பதிவு செய்தார். 'அரசு தரப்பு சாட்சிகளிடம், குறுக்கு விசாரணை செய்ய ஒப்புக் கொள்கிறீர்களா' என, சசிகலாவிடம், மாஜிஸ்திரேட் கேட்டார். அதற்கு, அவர் சம்மதம் தெரிவித்தார்.
இதையடுத்து, சசிகலா மீது, மேலும், இரு வழக்குகளில் குற்றசாட்டுகள் பதிவு செய்ய, ஜன., 9ல், அவரை மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும் என, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (34)
Reply
Reply
Reply