உலகின் சிறந்த 25 இளைஞர்கள் பட்டியலில் மூன்று இந்தியர்கள்| Dinamalar

உலகின் சிறந்த 25 இளைஞர்கள் பட்டியலில் மூன்று இந்தியர்கள்

Added : டிச 21, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 உலகின் சிறந்த 25 இளைஞர்கள் பட்டியலில் மூன்று இந்தியர்கள்

ஹூஸ்டன்:அமெரிக்காவில் இருந்து வெளியாகும், 'டைம்ஸ்' இதழ் வெளியிட்டுள்ள, 25 வயதுக்குட்பட்ட, உலகின், 25 சிறந்த இளைஞர்கள் பட்டியலில், மூன்று, இந்திய வம்சாவளியினர் இடம்பெற்றுள்ளனர்.

மக்களிடையே மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய, 25 வயதுக்குட்பட்ட, 25 சிறந்த இளைஞர்கள் பட்டியலை, டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், இந்தியாவைப் பூர்வீகமாக உடைய, அமெரிக்க வாழ் இந்தியர்களான, காவ்யா கொப்பாரப்பு, ரிஷப் ஜெயின், பிரிட்டன் வாழ் இந்தியரான அமிகா ஜார்ஜ் இடம் பெற்று உள்ளனர்.

எட்டாம் வகுப்பு படிக்கும், 14 வயதான, ரிஷப் ஜெயின், புற்றுநோயைக் கண்டுபிடித்து, தகுந்த சிகிச்சை அளிக்கக் கூடிய, கணினி வழிமுறையை வடிவமைத்து உள்ளார்.ஹார்வர்டு பல்கலையில் படிக்கும், 18 வயதான, காவ்யா கொப்பாரப்பு, மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் திசுக்களை, கணினியில் ஆராயக்கூடிய வழிமுறைகளை வகுத்துள்ளார்.

பிரிட்டனில் படித்து வரும், 19 வயதாகும், அமிகா ஜார்ஜ், மாதவிடாய் காலத்தின் போது, அதற்குத் தேவையான பொருட்களை வாங்க முடியாத ஏழை பெண்களுக்கு உதவும் திட்டத்தை உருவாக்கியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yila - Nellai,இந்தியா
27-டிச-201816:44:36 IST Report Abuse
yila இவர்கள் இந்தியாவில் இருந்திருந்தால், வெளியே தெரியாமல் போயிருப்பார்கள்.... அல்லது இவர்களின், உண்மையான பெயர் மதம் பற்றி பெரிய விவாதங்களே நடக்கும். தலைப்பை பார்த்ததும் புரிந்து விட்டது...நிச்சயமாக இவர்கள் இந்தியாவில் இருக்கமாட்டார்கள் என்று.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
27-டிச-201814:52:06 IST Report Abuse
இந்தியன் kumar இளம் வயது சாதனையாளர்களுக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
25-டிச-201816:48:03 IST Report Abuse
kalyanasundaram why letter pad parties not protesting since 69% reservation not followed. this case must be taken to world court for justice. had these people stayed in india their intelligence would not have surfaced if they belong to forward e. it is evident that educational level kindles intelligence hence their work. india must encourage intelligent students than to employ on e babies
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X