அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மத்திய, மாநில அரசு, ஊழியர், ரேஷன் பொருட்கள், கட்

சென்னை: மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் ரத்து செய்யப்படுகின்றன. அரசு பணியில் முதல் மற்றும் இரண்டாம் நிலையில் அதிகாரிகளாக இருப்போருக்கு, இனிமேல் இலவச ரேஷன் பொருட்களும், 100 யூனிட் இலவச மின்சாரமும் வழங்கப்படாது. கடும் நிதி நெருக்கடியில் தவிக்கும் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுக்க திட்டமிட்டுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில், அரிசி கார்டு வைத்துள்ள குடும்பத்திற்கு, வீட்டில் நான்கு உறுப்பினர்கள் இருந்தால், மாதம், 20 கிலோ அரிசியும், அதற்கு மேல் உள்ள, ஒவ்வொரு உறுப்பினருக்கும், கூடுதலாக, ஐந்து கிலோ அரிசியும், இலவசமாக வழங்கப்படுகிறது. அதேபோல், தமிழக மின் வாரியம், இரண்டு கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு, தலா, 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குகிறது.
வசதி படைத்தவர்கள், ரேஷன் அரிசியை வாங்குவதில்லை. ஆனால், அவர்கள் வாங்கியது போல, முறைகேடு நடக்கிறது. இந்நிலையில், மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு, இலவச அரிசி மற்றும், 100 யூனிட் இலவச மின்சாரத்தை நிறுத்துவதற்கு, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:ரேஷனில், 1.87 கோடி அரிசி கார்டுகளுக்கு வழங்க, மாதம், 3.20 லட்சம் டன் அரிசி தேவை. அதில், 1.93 லட்சம் டன் அரிசி, கிலோ, மூன்று ரூபாய் விலையில், இந்திய உணவு கழகத்திடம் வாங்கப்படுகிறது. ஒரு லட்சம் டன், கிலோ, 8.30 ரூபாய்க்கும்; மீதி அரிசி, கிலோ, 20 ரூபாய்க்கும் வாங்கப்படுகிறது.இதற்காக, ஆண்டுக்கு, 2,500 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகிறது. ஒரு வீட்டிற்கு, 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதால், 250 ரூபாய் செலவாகிறது. அனைத்து வீடுகளுக்கும் வழங்க, 3,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகிறது.
மத்திய அரசு, வசதி யானவர்களை, சமையல் காஸ் சிலிண்டர் மானியத்தை விட்டு தரும்படி வலியுறுத்தியது.

அதை, பலர் பின்பற்ற வில்லை. பின்,ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டும் அனைவருக்கும், சமையல் காஸ் சிலிண்டர் மானியத்தை, மத்திய அரசே ரத்து செய்துள்ளது. அதேபோல, தமிழக அரசும், ரேஷன் பொருட்களை, பொது மக்களே விட்டு தரும் வசதியை துவக்கியது. அதை, பலர் கண்டு கொள்ளவில்லை.
தற்போது, நீதிமன்றமும், அரிசி உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்களை, ஏழை மக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்று, கருத்து தெரிவித்துள்ளது. இதனால், வசதியானவர்களுக்கு, இலவச அரிசி மற்றும், 100 யூனிட் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டிய சூழல் எழுந்துள்ளது.மத்திய, மாநில அரசு பணியில், முதல் மற்றும் இரண்டாம் நிலையில், அதிகாரிகள் அந்தஸ்தில் உள்ளவர்களின்

வீடுகளுக்கும், தற்போது இலவச அரிசியும், இலவச மின்சாரமும் வழங்கப்பட்டு வருகிறது.

முதல் கட்டமாக, இவர்களுக்கான இலவசங்களை நிறுத்துவதன் வாயிலாக, அரசின் செலவு கணிசமாக குறையும் என, கணக்கிடப் பட்டு உள்ளது.ஆனால், இந்த இலவசங்கள், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் என்பதால், விரைவாக முடிவு எடுக்க முடியாத தயக்கமும், அரசிடம் உள்ளது. இருப்பினும், நிதிச்சுமையை குறைக்க அரசு விரும்புகிறது.
எனவே, மத்திய அரசை பின்பற்றி, தமிழகத்தில் வசிக்கும், மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு, இலவச மின்சாரம் மற்றும் அரிசியை நிறுத்துவது தொடர்பாக, தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது.
அவசியம் இல்லாதவர்களுக்கு வழங்கப்படும், இலவச திட்டங்களை நிறுத்துவதால், மிச்சமாகும் நிதியால், புதிய வேலை வாய்ப்பு திட்டங்களை செயல்படுத்தலாம். இதனால், இளைஞர்கள், வேலையில்லா பட்டாதரிகளின் ஆதரவை, அரசு பெற முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-டிச-201820:49:21 IST Report Abuse

ரவிவரவேற்கத்தக்க முடிவு. நிச்சயமாக செயல்படுத்த வேண்டும். முன்பு ஜெயலலிதா அவர்கள் இது போல் நடவடிக்கை எடுக்க முற்பட்டார். அது ஒருவித காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தீய சக்திகளால் முறியடிக்கபட்டது.இப்போது நிலைமை வேறு. நிச்சயமாக வெற்றி பெறும்.

Rate this:
Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ
23-டிச-201820:13:37 IST Report Abuse

Rajasekaran Palaniswamyசரியான துவக்கம் அனைத்து அரசு சம்பளம் வாங்கும் ஊழியர்கள் அனைவருக்கும் இது பொருந்தவேண்டும்

Rate this:
Vittal Anand - Chennai,இந்தியா
23-டிச-201817:35:18 IST Report Abuse

Vittal Anandஎது எப்படியானாலும் மின்சாரம் இலவசமாக அளிக்கக்கூடாது . துவக்கத்தில் ஒரு மின்சார விளக்குக்கு மட்டும் என்று இருந்தது இன்றோ இலவச மின்சாரம் எப்படியும் எவ்வளவு மின்திறனுக்கும் வழங்கப்படுகிறது . மின் விளக்குகள் என்ன, விசிறிகள் என்ன, அரைப்பான்கள் என்ன தொலை காட்சி பெட்டிகள் என்ன காற்றுப்பதனிகள் என்ன அனைத்தையும் இந்த ஏழை மக்கள் இலவசமாக நுகர்கிறார்கள்.

Rate this:
மேலும் 42 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X