கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத போக்கு
அரசு அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கண்டனம்

சென்னை: 'நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத போக்கு, தற்போது அதிகரித்து வருகிறது; அரசு நிர்வாகத்தின் இத்தகைய நிலையை ஏற்க முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவு, மதிக்காத போக்கு, அரசு அதிகாரி ஐகோர்ட், கண்டனம்

இரண்டு ஆண்டுகள் ஆகியும், உத்தரவை அமல்படுத்தாததால், நகரமைப்பு துறையின் இயக்குனரான, பீலா ராஜேஷ் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது.கோவை மாவட்டம், சிங்காநல்லுாரைச் சேர்ந்தவர், ஆனந்த்; இவருக்கு, உப்பிலிபாளையம் கிராமத்தில், நிலம் உள்ளது.


ஆட்சேபனை



இதில் ஒரு பகுதியை, ௮௦ அடி சாலை அமைக்கும் திட்டத்துக்காக, நகரமைப்பு திட்ட அதிகாரிகள் குறியீடு செய்தனர்.நிலம் கையகப்படுத்தப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு, ஆனந்தின் தந்தை ஆட்சேபனை தெரி வித்தார்.இந்த சாலை திட்டத்தால், அசவுகரியம் ஏற்படுவது மட்டும்அல்லாமல், தண்ணீர் போக்கும் தடைபடும் என,தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நிலத்தை விடுவிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆனந்த் மனு

தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த உயர் நீதி மன்றம், நான்கு வாரங்களில் நிலத்தை விடுவிப்ப தற்கு, தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி, நகரமைப்பு திட்ட அதிகாரி களுக்கு உத்தரவிட்டது.


கடந்த,2016 டிசம்பரில், இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. இதையடுத்து, அதிகாரிகளுக்கு பல முறை மனுக்கள் அனுப்பியும், நீதிமன்ற உத்தரவு நிறை வேற்றப்படவில்லை. நீதி மன்ற உத்தரவை வேண்டுமென்றே பின்பற்ற வில்லை; அவமதிப்பு சட்டத்தின் படி, அதிகாரி களை தண்டிக்க கோரி, ஆனந்த் மனு தாக்கல் செய்தார்.

இம்மனு, நீதிபதி,ஆர்.சுரேஷ்குமார் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர், வி.ஆர்.கமலநாதன் ஆஜரானார். மனுவை விசாரித்த, நீதிபதி, ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:நீதிமன்ற உத்தரவை நிறை வேற்ற, நான்கு வாரங்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டது. உத்தரவை நிறைவேற்றாததால், அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.


அரசு வழக்கறிஞர் ஆஜராகி, அரசிடம் கருத்து கேட்டு, நீதிமன்றத்துக்கு தெரிவிப்பதாக கூறினார். அதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணைக்கு வந்த போது, நகரமைப்பு துறை ஆணையர் அலுவலக துணை இயக்குனர் கடிதத்தை, அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய, நகரமைப்பு துறை முடி வெடுத்தி ருப்பதாக,அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அதிகாரிகளின் இத்தகைய அணுகுமுறை, நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும். குறிப்பாக, நகரமைப்பு துறை இயக்குனர், நீதிமன்ற அவ மதிப்பு

Advertisement

செய்திருப்பதற்கான முகாந்திரம் இருப்ப தாக,இந்த நீதிமன்றம் கருதுகிறது. ஏனென்றால், 2016 டிச., ௨ல், உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இரண்டு ஆண்டுக ளாக, இந்த உத்தரவை பரிசீலிக்க வில்லை. அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்த பின், மேல் முறையீடு செய்யப் போவதாக, நகரமைப்பு திட்டத் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.


நோட்டீஸ்



மேல்முறையீடு செய்வதற்கு, ௩௦ நாட்கள் தான் அவகாசம் உள்ளது. அப்படி இருக்கும் போது, அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்தனர் என்பதை தெரிவிக்கவில்லை.நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத போக்கு அதிகரித்து வருகிறது. இத்தகைய போக்கை, அரசு நிர்வாக துறை அதிகாரிகள் பின்பற்றுவதை, ஏற்க முடியாது. எனவே, நகரமைப்பு துறை இயக்கு னர் பீலா ராஜேஷுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்படுகிறது.2019ஜன., 21ம் தேதி, நீதிமன்றத்தில் அவர் ஆஜராக வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
23-டிச-201819:06:23 IST Report Abuse

SIVA. THIYAGARAJANநீதி மன்றத்தை மதித்தால் தானே அதன் சட்டத்தை மதிப்பார்கள். தெரிந்தே குற்றம் செய்பவன்தான் தற்கால் சுயநல அரசியல்வாதி .கோர்ட்டும்அவனுக்கு சாதகமாகத்தானே செயல்பட நினைக்குது.

Rate this:
bal - chennai,இந்தியா
23-டிச-201818:28:29 IST Report Abuse

balகர்நாடக அரசே மதிக்கவில்லை அதுவும் நாட்டின் உயர்ந்த உச்ச நீதி மன்ற தீர்ப்பையே துச்சமாக எண்ணுகிறது...அதிகாரிகள் என்ன செய்வர். இதற்கு நீதி மன்றம் ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பதுதான் வருத்தம்...தீர்ப்பை நடைமுறை படுத்தவில்லை என்றால் பதவி உடனே பறிக்க பட வேண்டும். முடியுமா..

Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
23-டிச-201814:38:45 IST Report Abuse

Natarajan Ramanathanநீதிமன்ற தீர்ப்புகள் மிகவும் கேவலமாக இருந்தால் அதற்கு மதிப்பு இருக்காது. ப.சி.போன்ற கிரிமினல்களை கைது செய்ய தடை விதிப்பது போன்ற சமீபத்திய பல தீர்ப்புகள் நீதிமன்றங்களின் மீதான மரியாதையை குறைக்கின்றன.

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X