'பீஹாரில் பெரிய கட்சி ஐக்கிய ஜனதா தளமே'

Added : டிச 23, 2018
Share
Advertisement
பட்னா,:'பீஹாரில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில், எங்கள் கட்சிதான் பெரியது; பா.ஜ., அல்ல. கூட்டணியில் இருந்த சில பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது' என, ஐக்கிய ஜனதா தளம் செய்தித் தொடர்பாளர், சஞ்சய் சிங் கூறியுள்ளார்.பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேசிய

பட்னா,:'பீஹாரில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில், எங்கள் கட்சிதான் பெரியது; பா.ஜ., அல்ல. கூட்டணியில் இருந்த சில பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது' என, ஐக்கிய ஜனதா தளம் செய்தித் தொடர்பாளர், சஞ்சய் சிங் கூறியுள்ளார்.பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து, பீஹாரைச் சேர்ந்த, உபேந்திர குஷ்வாகா தலைமையிலான, ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி, சமீபத்தில் விலகியது.கருத்து மற்றொரு கூட்டணி கட்சியான, மத்திய அமைச்சர், ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையிலான, லோக் ஜன சக்தி, அதிக தொகுதிகள் கோரி வருகிறது. பாஸ்வானின் மகன், சிராக் பாஸ்வான், பா.ஜ., வுக்கு எதிராக சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.பா.ஜ., தலைவர், அமித் ஷாவை, ராம்விலாஸ் பாஸ்வான் மற்றும் சிராக் பாஸ்வான் சமீபத்தில் சந்தித்து, கூட்டணி குறித்து பேசியுள்ளனர்.இந்த நிலையில், ஐக்கிய ஜனதா தளம் செய்தித் தொடர்பாளர், சஞ்சய் சிங் கூறியதாவது:தேசிய அளவில், பா.ஜ., தலைமையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைந்துஉள்ளது. பிரதமர் மோடியை, அவருடைய பதவிக்காக மதிக்கிறோம். அதே சமயம், இங்கு, நிதிஷ்குமார், முதல்வராக உள்ளார். பீஹாரை பொருத்தவரை, கூட்டணியில், எங்களுடைய கட்சியே பெரியது; பா.ஜ., அல்ல.லோக்சபா தேர்தல்கூட்டணியில் சிக்கல் ஏதும் இல்லை; இருந்த சில பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்பட்டுஉள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும், லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும், எங்களுடைய கூட்டணியே வெல்லும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X