சபரிமலை: சபரிமலை செல்ல முயன்ற சென்னையை சேர்ந்த பெண்களை, பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக போலீசார் திருப்பி அனுப்பினர்.
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து நாடு முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்கள் தீர்ப்பை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னையிலிருந்து 50 வயதுக்கு குறைவான 11 பெண்கள் அடங்கிய குழு சபரிமலை வந்தது. அவர்கள் அனைவரையும் பம்பையில் பக்தர்கள் வழிமறித்தனர். தற்போது பெண்கள் அனைவரும் போலீசார் பாதுகாப்பை நாடியுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள் சிலரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து அந்த பெண்கள் மீண்டும் சபரிமலை நோக்கி செல்ல முயன்றனர். ஆனால், அங்கிருந்த மற்ற பக்தர்கள் பெண்கள் செல்ல கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர். இதனால், அந்த பெண்கள் அறைக்கு திரும்பினர்.
பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருவதால், 11 பெண்களையும் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர். 6 பேரை வாகனத்தில் ஏற்றி நிலக்கல்லுக்கு அனுப்பி வைத்ததுடன், மற்றவர்களையும் அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழக எல்லை வரையில் பாதுகாப்புடன் அழைத்து செல்லவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE