அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தி.மு.க.,வின் ஓட்டை தான் ரஜினியும், கமலும் பிரிப்பர்'

Added : டிச 23, 2018 | கருத்துகள் (7)
Advertisement

சென்னை: ''ரஜினியும், கமலும், தி.மு.க., ஓட்டை தான் பிரிப்பர்; எங்களுக்கு கவலையில்லை,'' என, மீன்வளத் துறை அமைச்சர், ஜெயகுமார் கூறினார்.சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:படிக்காத மாணவர்களுக்கு தான் தேர்வை கண்டு பயம்; எங்களுக்கு தேர்வு பற்றி கவலையில்லை. எப்போது தேர்வு வைத்தாலும், 'அவுட் ஸ்டாண்டிங்' தான். நடிகர்கள் ரஜினியும், கமலும், தி.மு.க.,வின் ஓட்டை தான் பிரிப்பர்.கணினியை உளவு பார்க்க மத்திய அரசு, அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதி, டாக்டர் கையில் இருக்கும் கத்தியை போல இருக்க வேண்டும். கொலைகாரன் கையில் இருக்கும், கத்தி போல இருக்கக் கூடாது.தமிழகத்தின் தொடர் கோரிக்கைகளால், பல பொருட்களுக்கான, ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டுள்ளது. இதன் பயனாக, ஜனவரியில், நல்ல அறிவிப்புகள் வரும். இவ்வாறு ஜெயகுமார் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
niki - Chennai,இந்தியா
24-டிச-201817:04:39 IST Report Abuse
niki பல பொருட்களுக்கான, ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டுள்ளது. ஜி எஸ் டியால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்ப மக்களுக்கே தர வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Aish - chennai,இந்தியா
24-டிச-201816:44:30 IST Report Abuse
Aish திமுக-க்கு எங்க ஓட்டு இருக்க போகுது ரஜினியும், கமலும் பிரித்து எடுக்க?
Rate this:
Share this comment
Cancel
Darunika - chennai,இந்தியா
24-டிச-201816:42:03 IST Report Abuse
Darunika நடிகர்கள் நிச்சியம் வருகிற தேர்தலில் டெபாசிட் இழப்பது உறுதி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X