அரசியல் செய்தி

தமிழ்நாடு

செ.பாலாஜி, 'பிளாஷ்பேக்' வீடியோ வெளியிட திட்டம்

Added : டிச 23, 2018 | கருத்துகள் (18)
Advertisement
 செ.பாலாஜி, 'பிளாஷ்பேக்' வீடியோ வெளியிட திட்டம்

கரூர்: முன்னாள் முதல்வர் கருணாநிதி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆகியோரை விமர்சித்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசிய வீடியோக்களை, தெருமுனை பிரசார கூட்டங்களில் ஒளிபரப்ப, அ.தி.மு.க.,வினர் தயாராகி வருகின்றனர்.அ.ம.மு.க., அமைப்பு செயலராக இருந்த செந்தில் பாலாஜி, சமீபத்தில், தி.மு.க.,வுக்கு தாவினார். வரும், 27ம் தேதி, கரூர் அருகே ராயனுாரில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், ஆதரவாளர்களை இணைக்கும் பொதுக்கூட்டம் நடக்கிறது.அவர், 2011 - 14ல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, தி.மு.க.,வின் அப்போதைய தலைவர் கருணாநிதி, தற்போதைய தலைவர் ஸ்டாலின் ஆகியோரை, பொதுக்கூட்ட மேடைகளில் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். அந்த வீடியோ தொகுப்பு களை, தெருமுனை பிரசார கூட்டங்களில் ஒளிபரப்ப, அ.தி.மு.க.,வினர் திட்டமிட்டுள்ளனர்.செந்தில் பாலாஜி, அமைச்சராக இருந்தபோது, அவரது நிழலாக இருந்தவர் மூர்த்தி. இவர், 'ஜெயம் டிவி' என்ற உள்ளூர் சேனலை நடத்தி வருகிறார். செந்தில் பாலாஜி பேசிய பேச்சுகள் அனைத்தும், அந்த சேனலில் தான் ஒளிபரப்பானது.செந்தில் பாலாஜி, அ.ம.மு.க.,வில் சேர்ந்தபோது, அவருடன் செல்லாமல் மூர்த்தி ஒதுங்கி இருந்தார். தற்போது, செந்தில் பாலாஜி, தி.மு.க.,வுக்கு தாவி விட்டதால், மூர்த்தி கடந்த வாரம் மீண்டும், அ.தி.மு.க.,வுக்கு சென்று விட்டார்.இதையடுத்து, 'செந்தில்பாலாஜி, தி.மு.க.,வினர் குறித்து பேசிய சர்ச்சைக்குரிய வீடியோ தொகுப்புகளை, அவரது அரசியல் எதிரியான, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கைப்பற்றி விட்டார்' என, அ.தி.மு.க.,வினர் கூறி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
frester - சென்னை,இந்தியா
24-டிச-201817:17:05 IST Report Abuse
frester பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்
Rate this:
Share this comment
Cancel
RAJ - MADURAI,இந்தியா
24-டிச-201817:16:11 IST Report Abuse
RAJ ஆதாரம் வைத்து தான் அவரை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அவசியம் மக்களுக்கு கிடையாது
Rate this:
Share this comment
Cancel
niki - Chennai,இந்தியா
24-டிச-201817:12:18 IST Report Abuse
niki இந்த அசிங்கம் உனக்கு தேவைதான் செந்தில் பாலாஜி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X