கம்ப்யூட்டர்களை உளவு பார்க்கும் அதிகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

Added : டிச 24, 2018 | கருத்துகள் (34)
Advertisement
Supreme Court,Investigation Organizations, Research and Analysis Wing, சுப்ரீம் கோர்ட், கம்ப்யூட்டர் உளவு பார்த்தல், மத்திய அரசு,   ஆர்டிஐ , எம்.எல்.சர்மா , மொபைல் போன் அழைப்பு, பாரதிய ஜனதா, காங்கிரஸ் , விசாரணை அமைப்புக்கள் , சிபிஐ, அமலாக்கத்துறை, ரா, 
 Computer Intelligence, Central Government, RTI, ML Sharma, Mobile phone call, Bharatiya Janata, Congress,  CBI, Enforcement Department, Raw,

புதுடில்லி : நாட்டில் உள்ள எந்த கம்ப்யூட்டரையும் மத்திய அரசின் 10 விசாரணை அமைப்புக்கள் கண்காணிக்கலாம் என்ற முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள எந்த கம்ப்யூட்டர், மொபைல் போன் அழைப்புக்கள், இமெயில்களையும் கண்காணித்து உளவு பார்க்கவும், அவற்றை பறிமுதல் செய்யவும் சிபிஐ, அமலாக்கத்துறை, ரா, தேசிய புலனாய்வு அமைப்பு உள்ளிட்ட 10 அமைப்புக்களுக்கு அதிகாரம் வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இதற்கிடையில் இது புதிதாக கடைபிடிக்கும் முறையல்ல. 2009 ம் ஆண்டு முந்தைய காங்., ஆட்சியின் போதிலிருந்தே நடைபெற்று வரும் முறை தான் என பா.ஜ., சார்பில் ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு காங்., அரசு அளித்த பதிலை ஆதாரமாக வைத்து விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில் மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து எம்.எல்.சர்மா என்ற வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-டிச-201821:10:47 IST Report Abuse
ஆப்பு நீதிபதிகள் உளவு பார்க்கப்பட மாட்டார்கள்னு உத்தரவாதம் குடுத்துருவாங்க. கேஸ் பிசுபிசுத்துடும். அப்பிடி இல்லேண்ணா தடா தான்.
Rate this:
Share this comment
Cancel
spr - chennai,இந்தியா
24-டிச-201819:55:04 IST Report Abuse
spr ஒரு நாட்டின் அரசு இது போல ஒற்றர்களை வைத்து உளவு பார்ப்பது எல்லாக் காலத்திலும் உண்டு திருவள்ளுவர் முதல் சாணக்கியன் மாக்கியவல்லி முதலான அனைத்து அறிஞர்களும் சொன்னதே ஆனால் 2009 இயற்றப்பட்ட சட்டத்தை, யார் வேவு பார்க்கலாம் என்று தெளிவாக சொல்லப்படாத சட்டத்தை நம்மைப் போல சாமான்யர்களும் அறிவில்லாத முறைத்துத் துணிச்சல் மட்டுமே மூலதனமாகக் கொண்டு அரசியில் செய்யும் அரசியவியாதிகளும் அறியாமலிருப்பது வியப்பில்லை ஆனால் ஊடகங்களும் செய்தித்தாள்களும் இவர் போன்ற சட்டம் அறிந்தவர்களும் இப்பொழுது விழித்துக் கொண்டு கூவுவது ஏன்? ஸ்டெர்லைட், கூடங்குளம் தேனீ ஆய்வு மையம் என இன்று நாம் எதிர்க்கும் அனைத்தும் இன்று நேற்று வந்தவை அல்லவே அப்பொழுதெல்லாம் எதிர்த்திருந்தால், பல பிரச்சினைகள் உருவாகியிருக்காதே நீதிமன்றம் அன்று கேட்ட கேள்விக்கு "யாரெல்லாம் உங்கள் கணிணியை கருத்துக் பரிமாற்றத்த்தை வேவு பார்க்கலாம்?" இன்று முறையாக பதில் அளித்திருக்கிறது பாஜக அரசு இதனையே பலகாலமும் காங்கிரஸ் அரசு ஓசையில்லாமல் செய்து வந்திருக்கிறது இதனை சட்டமாக்கியவரே, நம் தமிழக பெரும் (கறுப்புப்) புள்ளி ப.சி என்றும் இவர்களுக்குத் தெரியாதா? இப்பொழுது நம் முன்னால் இருப்பதெல்லாம் இது பல எத்தனை மக்கள் விரோதக் கொள்கைகளை முந்தைய காங்கிரஸ் அரசு செய்திருக்கிறதோ தெரியவில்லையே அவையெல்லாம் எப்பொழுது வெளிவருமா தெரியவில்லையே காங்கிரஸ் ஆரம்பித்துச் செய்யாமல் விட்டதனைத் தானே இன்று பாஜக அரசு செய்கிறது
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
24-டிச-201819:47:38 IST Report Abuse
Pugazh V டுமிள்கள் என்று அவமரியாதையாக எழுதுவதை ஏன் எவரும் கண்டிப்பதில்லை? எந்த செய்தியில் என்ன எழுதுகிறார்கள் என்று தெரிந்து தான் எழுதுகிறார்களா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X