அதிரூபன் தோன்றினாரே!: கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்

Added : டிச 24, 2018 | கருத்துகள் (4)
Advertisement
அதிரூபன் தோன்றினாரே!: கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்


இயேசு இறைவனானது எப்போது?


இயேசு கிறிஸ்து, 33 வருடங்கள் பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்து அற்புதம் செய்தார். மனிதன் பாவமன்னிப்பை பெற ஆட்டையும், மாட்டையும், பறவைகளையும் பலியாக கடவுளுக்கு செலுத்தி வந்தான். எனவே இயேசு மனிதனாகப் பிறந்து உலக மக்களின் பாவப்பலியாக சிலுவை சரணத்தை ஏற்றுக் கொண்டார். மூன்றாம் நாளில் உயிர்த்து எழுந்து 40 நாட்கள் மக்களுக்கு காட்சி தந்தார். இயேசுவின் மறைவிக்குப்பின் 300 ஆண்டுகள் கழித்து ரோம் அரசு அவரைத் இறைவனாக ஏற்றுக் கொண்டது. 'இயேசு' என்பதற்கு 'விடுதலையாக்குபவர்' என்றும் 'கிறிஸ்து' என்பதற்கு 'தீர்க்கதரிசி' என்றும் அர்த்தம்.கிறிஸ்துமஸ் உருவான விதம்: கிறிஸ்துமஸ் என்பது ''கிறிஸ்ட், மாஸ்'' என்ற இரு வார்த்தைகளின் இணைப்பால் உருவானது.கிமு 7க்கும் கிமு 2க்கும் இடைப்பட்ட காலத்தில் கிறிஸ்து பிறந்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். யூதர்களின் பருவகாலம், நாட்காட்டிகள் மூலம் கணக்கிட்டு டிச.25 கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுகின்றனர்.முதன் முதலில் 4ம் நுாற்றாண்டை சேர்ந்த மேற்கத்திய கிறிஸ்தவர்கள் கொண்டாடியதாக வரலாற்று குறிப்புகள் உள்ளன. ஆனால் மற்ற கிறிஸ்தவர்கள் மறுப்பு தெரிவித்து, ஜன.6ல் இயேசு பிறந்ததாக கொண்டாடினர்.


'ஓ... ஹோலி நைட்'கிறிஸ்துமஸ் அன்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள பரிசுப் பொருட்களை பரிமாறுவது, போட்டிகளை நடத்துவது என பலவிதமாக கொண்டாட்டம் விரிவடைந்தது. அன்று கிறிஸ்தவர்கள் குழுக்களாக 'கேரல் சர்வீஸ்' என்ற நிகழ்ச்சியில் குழந்தை இயேசுவை வாழ்த்தியும், அவரது பிறப்பு, அவர் உலகிற்கு வந்த நோக்கம் உள்ளிட்ட கருத்துகளை கொண்ட பாடல்கள் பாடுவது வழக்கம். 1847ல் பிரான்சில் முதல் முதலாக நடந்த கிறிஸ்துமஸ் கேரலில் 'ஓ... ஹோலி நைட்' என்ற கிறிஸ்துவ பாடல் பாடப்பட்டது. இந்நாளை விசேஷமாக கருதுவதால் மக்கள் தங்களின் புதிய முயற்சிகளை தொடங்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.


குழந்தைகளுக்கு பரிசு'சாண்டா கிளாஸ்' என்னும் கிறிஸ்துமஸ் தாத்தாவாக முதன்முதலில் வேடமிட்டவர் செயின்ட் நிக்கோலஸ். இவர் பிறந்தது தென் துருக்கியில் இருக்கும் லிசியாவில். பிஷப் பதவி வகித்த இவர், கிறிஸ்துமஸ்க்கு முதல் நாள் இரவு பழங்கள், சாக்லெட்கள், பொம்மைகள் என குழந்தைகளுக்கு பரிசாக கொடுப்பார். பிற்காலத்தில் அமெரிக்காவில் வெள்ளை தாடியுடன், தொந்தி வயிற்றுடன்வேடிக்கையானவராக கிறிஸ்துமஸ் தாத்தா சித்தரிக்கப்பட்டார். கடும்பனியும், குளிரும் நிறைந்த துருவ பிரதேசங்களில் பறக்கும் மான் இனங்கள் உள்ளன. அவை பறந்து செல்வதை பார்க்கும் போது, கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்த வகை மான் கிறிஸ்துமஸ் தாத்தாவின் வாகனமாக கருதப்படுகிறது.


யார் அந்த அதிர்ஷ்டசாலி


கிறிஸ்துமஸ் நாளில் கேக்கிற்கு சிறப்பிடம் உண்டு. பண்டிகைக்கு ஒரு மாதம் முன்பாகவே இங்கிலாந்தில் மக்கள் ப்ளம் கேக் செய்ய தொடங்குவர். அப்போது வீடுகளில் குடும்பத்தினர் முன்னிலையில் குடும்பத் தலைவி மாவைக் கொட்டி பிசைவாள். ரகசியமாக வெள்ளி நாணயத்தை மாவுடன் கலந்து விடுவாள். அதன் பின் கேக் தயாரிக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும். கிறிஸ்துமஸ் நாளில் குடும்பத்தினருக்கு கேக்கை பரிமாறுவர். யாருக்குக் கேக்கிலிருந்து வெள்ளிநாணயம் கிடைக்கிறதோ அவரே அதிர்ஷ்டசாலி. அவருக்கு பரிசுகள் வழங்குவர்.


கிறிஸ்துமஸ் மரம்


ஒருநாள் குளிர்கால இரவில் ஜெர்மனை ஆட்சி புரிந்த மார்டின் லுாதர்கிங் காட்டின் வழியே வந்து கொண்டிருந்தார். மிருகங்கள் நிறைந்த பகுதி என்பதால் மார்ட்டினுக்கு பயம் உண்டானது. வரும்வழியில் ஒரு மரத்தைக் கண்டார். அது நீல நிறத்திலும், வெள்ளி நிறத்திலும் நட்சத்திரம் போல மின்னுவதை கண்டு வியந்தார். பின்னர் அந்த சிறிய மரத்தை தன்னுடன் எடுத்து வந்தார். அதன்பின் அந்த மரம் கிறிஸ்துமஸ் மரம் என்றாகி அதற்கு மெழுகுவர்த்தி ஏற்றும் வழக்கம் தோன்றியது.


பைபிள் உருவானது எப்படி


பிப்லியா என்ற கிரேக்க சொல் 'பைபிள்' என மொழி பெயர்க்கப்பட்டது. 'பிப்லியா' என்றால் 'புத்தகம்' அல்லது 'பத்திரம்' என்பது பொருள். பைபிளை எழுதி முடிக்க 1200 ஆண்டுகள் ஆயின. வெவ்வேறு காலங்களில் 40 பேர் இதை எழுதினர். இதில் பலரது பெயர் கூட தெரியவில்லை. இதை பழைய, புதிய ஏற்பாடு என இரண்டாகப் பிரித்தனர். இரண்டிலும் 1189 அதிகாரங்களும், 31 ஆயிரத்து 102 வசனங்களும் உள்ளன.


ஒருநாள் விடுதலைகிறிஸ்துமஸ் அன்று பாரசீகத்தில் எல்லா அடிமைகளுக்கும் ஒருநாள் விடுதலை அளிக்கப்படும். சில எஜமானர்கள் தங்களின் அடிமைகளுக்கு அன்று முழுவதும் வீட்டில் முழு சுதந்திரம் கொடுத்ததாகவும் வரலாற்று குறிப்புகள் உள்ளன. பண்டைய காலத்தில் ஐரோப்பியர்கள் பேய், பிசாசுகளுக்கு அதிகம் பயந்தனர். வருடத்தில் நீண்ட இரவு கொண்ட நாட்களில் அவை தீமை விளைவிக்கும் என்று நம்பினர். இதனால் நீண்ட இரவுகளுக்கு பிறகு சூரியன் சீக்கிரம் உதிக்க வேண்டும் என்பதற்காக இப்பண்டிகையை கொண்டாடினர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா
25-டிச-201819:34:18 IST Report Abuse
கலியுக கண்ணன் Vatican and Pope should ly apologise for this atrocities .
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
25-டிச-201814:47:09 IST Report Abuse
Endrum Indian இன்டர்நெட்டில் போய் பாருங்கள் வேறு விதமாக இருக்கின்றது.
Rate this:
Share this comment
Cancel
Magesh - Riyadh,சவுதி அரேபியா
25-டிச-201811:19:14 IST Report Abuse
Magesh Merry Christmas.. அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X