சென்னை: சிலை கடத்தல் வழக்கில் கைதாகி, ஜாமினில் வந்த வாலிபரை, கூடுதல் எஸ்.பி., இளங்கோ உள்ளிட்டோர் அழைத்து வந்து, பொன் மாணிக்கவேலுக்கு எதிராக, டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் அளிக்க வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஓய்வு பெற்ற, ஐ.ஜி., பொன் மாணிக்கவேலை, சென்னை உயர் நீதிமன்றம், ஓராண்டுக்கு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமித்துள்ளது. அவரது தலைமையிலான குழுவினர், சிலை திருட்டு மற்றும் கடத்தலில் ஈடுபடுவோரை கைது செய்து வருகின்றனர்.
இரு தினங்களுக்கு முன், சென்னை, ஈக்காட்டுதாங்கலில், 'லேத்' பட்டறையில் பதுக்கி வைத்திருந்த, பஞ்சலோக முருகன் சிலையை மீட்டனர்; சிவகுமார் என்பவனை கைது செய்தனர். இந்நிலையில், பொன்
மாணிக்கவேலுக்கு எதிராக, அயல்பணி என்ற அடிப்படையில், ஓராண்டாக பணியாற்றி வந்த, கூடுதல் எஸ்.பி.,க்கள் இளங்கோ, குமார் உள்ளிட்ட, 40க்கும் மேற்பட்ட போலீசார், டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் அளித்துஉள்ளனர்.
சென்னை, போரூரில், சிலை கடத்தல் வழக்கில் கைதாகி ஜாமினில் வெளி வந்தவர், சக்திவேல், 29. இவரும், சிலையின் உரிமையாளர் எனக்கூறும் தீனதயாளனும், டி.ஜி.பி., அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர். பின், போலீஸ் அதிகாரிகள் புடைசூழ வந்து, பேட்டியும் அளித்தனர்.இவர்களை, கூடுதல் எஸ்.பி., இளங்கோவன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், அழைத்து வந்து புகார் அளிக்கச் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட ஒருவரை முன் நிறுத்தி, துறை ரீதியான சம்பவங்கள் தொடர்பாக, பேட்டி அளிக்கவைத்தது, காவல் துறை வரலாற்றில், இதுவே முதல் முறை. இதிலிருந்தே, பொன் மாணிக்கவேலுக்கு எதிராக, கூடுதல் எஸ்.பி.,
இளங்கோவன் உள்ளிட்டோர், அரங்கேற்றும் நாடகம் அப்பட்டமாக தெரிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.'
பேட்டி கொடுத்து மாட்டிக் கொண்டார்'
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறியதாவது: சென்னை, நெற்குன்றத்தை சேர்ந்த ஒருவரிடம், 7,000 ஆயிரம் ரூபாய்க்கு, கஷ்டலட்சுமி என்ற, பித்தளை சிலையை வாங்கினேன். அந்த சிலையை, ஐந்து ஆண்டுகளாக, வீட்டில் வைத்து பூஜை செய்து வந்தேன். கஷ்டம் அதிகரிக்கும் என, சிலர் கூறியதால், எங்கள் பகுதியில் உள்ள, பழைய இரும்பு கடையில் விற்று விடலாம் என, எடுத்துச் சென்றேன் என, தீனதயாளன் என்பவர் கூறியுள்ளார். அவரையும், விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (42)
Reply
Reply
Reply