எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
குழப்பம்..!
பொங்கல் பரிசை எப்படி வழங்குவது?
பிளாஸ்டிக் தடையால் வந்தது குழப்பம்

ஜனவரி முதல், பிளாஸ்டிக் தடை அமலுக்கு வருவதால், முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகிய பொங்கல் பரிசு பொருட்களை, 'பாக்கெட்' செய்வதில், அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

பொங்கல் பரிசை எப்படி வழங்குவது? பிளாஸ்டிக் தடையால் வந்தது குழப்பம்


தமிழக அரசு, ரேஷன் கடைகளில், பொங்கலை முன்னிட்டு, தலா, ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை; தலா, 20 கிராம் முந்திரி, திராட்சை; ஐந்து கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய, பரிசு தொகுப்பை, ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.

அதில், முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவை, பிளாஸ்டிக் பாக்கெட்டில் வழங்கப்பட்டன.

சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க, தமிழக அரசு, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த, 2019 ஜன., 1 முதல், தடை விதித்துள்ளது. இதனால்,பொங்கல் பரிசு பொருட்களை பாக்கெட் செய்வதில், அதிகாரிகளுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரேஷன் கடைகளை நடத்தும், கூட்டுறவு சங்கங்கள், முந்திரி, திராட்சை, ஏலக்காயை, மொத்தமாக வாங்கி, அவற்றை சேமிப்பு கிடங்குகளில், அரசு அறிவித்த அளவில் எடையிட்டு, பிளாஸ்டிக் பைகளில், சிறிய பொட்டலமாக தயார் செய்தன. பின், கடைகளுக்கு அனுப்பி, கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டன. இதனால், எடை குறைவுபிரச்னை ஏற்படவில்லை.

தற்போது, பிளாஸ்டிக் பைக்கு, அரசு விதித்த தடை, ஜன., முதல் அமலுக்கு வருவதால், முந்திரி, திராட்சை, ஏலக்காயை, எப்படி வழங்குவது என, தெரியவில்லை. கடைகளுக்கு மொத்தமாக

Advertisement

அனுப்பி, எடையிட்டு வழங்குமாறு கூறினால், ஊழியர்கள் தவறு செய்ய வாய்ப்புள்ளது.

முதல்வர் பழனிசாமி, பொங்கல் பரிசு அறிவிப்பை, சனிக்கிழமை வெளியிட்டார். அதற்கு, நிதி ஒதுக்கீடு, செயல்படுத்த வேண்டிய வழிமுறைகள் அடங்கிய அரசாணையை, அரசு, இதுவரை வெளியிடவில்லை. அதை, விரைவாக வெளியிடுவதுடன், பாக்கெட் முறை குறித்தும், தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
25-டிச-201815:25:09 IST Report Abuse

Endrum Indianபிளாஸ்டிக் குழப்பம். அப்படியென்றால் நாம் சூப்பர்மார்கெட்டில், துணி கடைகளில், இனிப்பு கடைகளில் ........இப்படிபலப்பல கடைகளில் வாங்கும் பொருளை பிளாஸ்டிக்கில் தான் கட்டிக்கொடுக்கின்றார்கள் அப்போ அதுக்கு மட்டும் தடை இல்லையா????ஏன்???அரிசி ஒரு கிலோ, சர்ப் 250 கிராம், இனிப்பு/காரம் 200 கிராம், சேலை/வேஷ்டி எல்லாம் பிளாஸ்டிக் உரை/அல்லது பை தானே சுற்றிக்கொடுக்கின்றார்கள் அப்போ அதுக்கு மூடு விழா எப்போது?????????

Rate this:
Manian - Chennai,இந்தியா
27-டிச-201800:44:33 IST Report Abuse

Manianஅதுவும் வரும். மருத்தவ வசதி இல்லாத ஏழைகளுக்கு அப்படி தரப்படும் பிளாச்டிக் பைகளால் கேன்சர் வருவது அவர்களுக்கு தரும் பெரிய தண்டனையே. பிசாலடி பைகளை சுடான தேனீர், சாம்பார் போன்றவை தரூவது தவறு ஏற்று முன்னாலேயே தடை செய்யாதற்கு இரெண்டு காரநங்கள் (1 ) அந்த பிளாச்டின் தீமையாக்களை வெளி நாடுகளில் அதிகமாக வெளி இடவில்லை. மாண்சான்டோ போன்ற ரசாயண கம்பெனிகள் அமுக்கி விடடன .அதன் தாக்கம் கடல் வாழ் பிராணிகள் வரை தற்போது அதிக அளவில் இருப்பதால், மீனை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு கேஞ்சர் வரும் என்று கண்டுள்ளார்கள். இந்த விழிப்புணர்ச்சி தற்போது அதிகம்.(2 ) அரசாங்க, அரசியல் வியாதிகள் இந்த பிலாச்டிக் ஆளையார்கள் தரும் பெரும் லஞ்சம். கேள்வி என்னவென்றால், சுமார் 40 வயதில் கேன்சர் வந்து சொத்துக்களை இழந்து பரிதாபமாக சாக வேண்டுமா? ஏற்கனவே ஏழைகளின் ஆயுள் குறைவு (ஊடட சத்து இல்லாமை, சுகாதாரம் இல்லாமை, மருத்துவ இல்லாமை,..). ஏமாற்றும் வியாபாரிகள், சிந்திக்க தெரியாத மக்கள் இருக்கும் வரை மெதுவாகவே மாற்றங்கள் வரும். ஆறில் சாக்கடை கலப்பதை, தோல் பதனிடட, சாயக் கழிவுகளை தடுத்து விட்டொமா ? ...

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
25-டிச-201814:52:06 IST Report Abuse

Pugazh Vஏன் சென்னை மணியன் இவ்வளவு உணர்ச்சி வசப்பட்டு விட்டார்? இவர் இந்த இலவசங்களுக்கு அருகதை இல்லாத அளவுக்கு அதிக வருமானம் வாங்குபவர் போல. அதனால் தான் இத்தனை ஃபீவிங்கு.. பாவம்.

Rate this:
Manian - Chennai,இந்தியா
27-டிச-201800:31:06 IST Report Abuse

Manianதவறு புகழ். எசகிகளுக்கு சுமார் 95 % எந்த நல்ல பயனும் கிடைக்கவில்லையே என்ற தாபம்தான். 25 % மூன்றே ஜாதியினர், பொய்யான ஓவிசி என்று 98 % பலன்களையும் தங்கள் இனத்தாருக்கே எல்லா பயன்களும் கிடைக்க வேண்டும் என்று ஏன் இவ்வளவு பேராசை படுகிறார்கள்? தன்கண் இனத்திலேயும் ஏழைகள் உள்ளார்களே? 2000 க்கு மேற்பாட உன்மையான ஓபிசி சிகளுக்கு எந்தவித உதவி செல்லவில்லை என்பதை மத்திய அரசாங்க கமிஷன் சொன்னதை பின்னேயும், உணர்ச்சி வசப்படவில்லல், நானும் ஒரு திருடர்கள் கழக தொண்டனாக இருப்பேனே. ஏழைகள், பின்தங்கிய மலை இனத்தவர்களுடன் பழுவதால் இதை பேருந்து கொண்டேன். கோயம்புத்தரில் மறைந்து வாழும் போலி ஓபிசி என்றால் எந்த பீலிங்குமே இருக்காதே ...

Rate this:
Girija - Chennai,இந்தியா
25-டிச-201814:21:07 IST Report Abuse

Girijaஆமாம் அப்போ வரும் ஜனவரி முதல் தேதியில் இருந்து ஆவின் வீட்டிற்கு வீடு தண்ணீர் குழாய் வழியாக சப்ளை செய்யுமா? இல்லை விற்பனையை நிறுத்திவிடுமா ?

Rate this:
RAMESH - CHENNAI,இந்தியா
25-டிச-201816:02:28 IST Report Abuse

RAMESHசொம்புலத்தான் வாங்கணும் போல .... ...

Rate this:
Manian - Chennai,இந்தியா
27-டிச-201800:24:13 IST Report Abuse

Manianதண்ணிர் குழாய்கள் உபயோகிக்கும் பிளாச்டிக் வேறு விதமானது. அதன் ரசாயண முறையும் வேறு. பதினோரு விதமான பிளாச்டிக்குகள் உண்டு. பாளி எத்திலீன் டெரிப்தாலேட்(, Polyethylene terephthalate PETE,PET) -குடி நீர் பாட்டில்கள், பலியெத்திலீன் (Polyethylene (PE)) - துணி துவைக்கும் ரசாயனக் கலவை உயல்ல பாட்டில்கள், பாலி குளோரைடு ( Polyvinyl Chloride (PVC):) தண்ணிர் எடுத்து செல்ல பதிக்கும் பாதிப்புக்கள் - இவை முரணும் மாரு சுழற்சி செய்ய முடியும். ஆக மொத்தம் உள்ள 11 வித பலியெதிலிகளில் மற்ற எட்டும் விஷம். மின் வலை தளத்தில் தேடி புரிந்து கொண்டு கருத்து சொன்னால், தவரான புரிதல்கள் பதிவுகளில் வராது. ...

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X