சேவல் கூவ கொடுக்கறாங்க லஞ்சம்

Added : டிச 25, 2018
Share
Advertisement
மார்கழி என்றாலும், வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மொபைல் போனில், ''ஏய்... மித்து. ரெடியாயிட்டயா? நான் வந்துட்டே இருக்கறேன்,'' சித்ரா பரபரப்பாக பேசியதும், ''ரெடிதான். வாங்க போலாம்,'' என்றாள்.அடுத்த சில நிமிடங்களில், மித்ராவுடன், வண்டி கிளம்பியது. பல்லடம் ரோட்டில், பொங்கலுார் நோக்கி சென்றதும் இரண்டு புறமும் கொடி, தோரணங்கள் என்று அமர்க்களப்பட்டது.''ஏக்கா...
 சேவல் கூவ கொடுக்கறாங்க லஞ்சம்

மார்கழி என்றாலும், வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மொபைல் போனில், ''ஏய்... மித்து. ரெடியாயிட்டயா? நான் வந்துட்டே இருக்கறேன்,'' சித்ரா பரபரப்பாக பேசியதும், ''ரெடிதான். வாங்க போலாம்,'' என்றாள்.அடுத்த சில நிமிடங்களில், மித்ராவுடன், வண்டி கிளம்பியது. பல்லடம் ரோட்டில், பொங்கலுார் நோக்கி சென்றதும் இரண்டு புறமும் கொடி, தோரணங்கள் என்று அமர்க்களப்பட்டது.''ஏக்கா... ரொம்ப பெரியளவில், மகாலட்சுமி யாகம் நடத்தறாங்களாம். என்ன திடீர்னு இப்படி ஒரு ஐடியா?''''இல்லப்பா... வழக்கம்போல விநாயகர் சதுர்த்தியை மட்டும் பெரிசா கொண்டாடுறாங்க. இதேபோல், மூணு நாள் ஒரு பெரிய நிகழ்ச்சி பண்ணனும்னு இதை பண்றாங்களாம்,''''பரவாயில்லை. நம்ம ஏரியாவில், 100 ஏக்கருக்கு மேல நடக்கற விழா இதுவாகத்தான் இருக்கும்போல,''''ஆமான்டி.. இந்த விழா, பிற இந்து இயக்கங்களின் மத்தியில் ஒரு கூட்டுறவை ஏற்படுத்திடுச்சு,''''அங்கே கூட்டுறவு; இங்கே பிரிவுங்க்கா..''''எதை, யாரை சொல்கிறாய்?''''திருப்பூரில் இருக்கற பெரிய சங்கத்துக்கு தேர்தல் இதோடு இரண்டு தடவை நின்னுடுச்சு. தன்னோட ஆளுக்குத்தான், தலைவர் பதவி கொடுக்கோணும்னு 'மாஜி' சொல்றார். ஆனா, அவரு அம்மாவால் நீக்கப்பட்டவர், மூவர் அணி சொல்றாங்க,''''இப்படி பல பிரச்னைகளில் மாஜியின் செயல்பாடு பிடிக்காமல், கட்சியில் புகைச்சல் கிளம்பியுள்ளது. இதனால்தான் மூவர் அணியினர், 'மாஜி'யை கழற்றி விட்டு, கட்சி செயல்பாட்டில், ஆனந்தமாக செயல்படுகின்றனராம். அப்புறம் அவரை பத்தி, பக்கம் பக்கமாக புகார் வாசிச்சு, தலைமைக்கு அனுப்பிட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.''வரவர... அ.தி.மு.க.,விலும், கோஷ்டிப்பூசல் தாண்டவமாடுது,'' என்று சித்ரா கூறவும், 'காங்கயம் டி.எஸ்.பி., ஜீப் சென்றது.அதைப்பார்த்த மித்ரா, ''துப்பாக்கியில் சுட்டு, கொள்ளையடிச்ச விவகாரம் என்னாச்சுக்கா?'' என்றாள்.''மித்து... காங்கயம் பகுதியில் ஆளுங்கட்சி பிரமுகர் ஆதரவோடு, பல இடங்களில் லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாட்டம் நடக்கிறதாம். அமைச்சர் வரைக்கு பிரச்னை வராதுன்னு உறுதிப்படுத்திட்டு, போலீஸ் அதிகாரிகளையும், 'செமையா' கவனிச்சிறாங்களாம்.''போன வாரம், துப்பாக்கியால் சுட்டு 'டெமோ' காண்பிச்சு, சூதாட்ட கும்பலிடம், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம், நகையை அபேஸ் செய்த ஒரு கும்பலை பத்தி, ஒருத்தர் கூட, கம்ளைன்ட் கொடுக்கலையாம்,''''ஏக்கா... திருடனுக்கு தேள் கொட்டினா, சத்தம் போடுவானா? அதேமாதிரிதான் இதுவும். பூராமே பெரிய ஆளுங்கறதால, அப்படியே விட்டுட்டாங்க போல,'' என்றாள் மித்ரா.''இப்படி 'டிஸ்க்ரிக்ட்' பூராவும், கோஷ்டி பூசல், சட்ட விரோத செயல்களுக்கு துணை போறதுன்னு இருந்தா, எம்.பி., எலக்ஷனில் என்ன ஆவாங்களோ?'' என்ற சித்ரா வண்டியை, ஒரு பேக்கரி முன் நிறுத்தினாள்.லெமன் டீ ஆர்டர் கொடுத்த மித்ரா, ''அதைப்பத்தி எல்லாம் கவலைப்படாமல், எலக்ஷன் வேலையில் ஜரூரா இருக்காங்க தெரியுங்களா,'' என்றாள்.''அட... அப்படியா?''''பி.ஜே.பி., யோட கூட்டணி என்ற நிலைப்பாடு இருப்பதால், திருப்பூர் தொகுதியை கேட்டு வாங்க திட்டமாம். அதிலயும், 'மாஜி' க்கு எம்.பி., ஆசை வந்திடுச்சாம்,''''அப்ப... சிட்டிங் எம்.பி.,?''''ஆமாங்க்கா... அவரும், எப்படியாவது, 'சீட்' வாங்கிடணும்னு பலமாக காய் நகர்த்துகிறாராம். பி.ஜே.பி., கூட்டணின்னா, மினிஸ்டர் ஆகி விடலாமுன்னு, உசுப்பேத்றாங்களாம். இப்படி பலரும், எம்.பி., ஆயிட்ட மாதிரியே கனவில மிதக்குறாங்களாம்'' என்று மித்ரா சொல்லி முடிக்கவும், டீ வந்தது.இருவரும் குடிக்கத்துவங்கினர். அவ்வழியே, ஓ.பி.எஸ்., மகன் கார் சென்றது. இதைப்பார்த்து ஆச்சரியப்பட்ட, மித்ரா, ''அக்கா.. இவரு இங்க என்ன பண்றாரு?'' என்றாள்.''அட.. உனக்கு விஷயம் தெரியாதா? அவர், இந்து முன்னணி நடத்தும் யாக பூஜையில் பங்கேற்று பக்தி பழமாகவே மாறிட்டாராம். இப்ப அடிக்கடி அவங்களோட 'லிங்க்'கில் இருக்குறாராம். அனேகமா, அடுத்த எலக்ஷனில், களம் இறங்குவார் போல..?'' சித்ரா கூறினாள்.''சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி கொடுக்காத கதையாட்டம் அல்ல இருக்குது,''''என்னடி, புதிர் போடுற. புரியற மாதிரி சொல்லேன்,''''மாவட்ட காதுகேளாதோர் கிரிக்கெட் அசோசியேஷனுக்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை கொடுத்ததாம். ஆனால், இப்ப வரைக்கும், அந்த நிதி போய்ச்சேரலையாம். இதை தெரிஞ்சுகிட்ட அசோசியேஷன் நிர்வாகிகள், கலெக்டர்கிட்டயும் மனு கொடுத்தாங்களாம். அப்படியும் கூட, பணம் வந்தபாடில்லையாம்,''''வந்த பணத்தை கொடுக்கறதுக்கு, இப்படி ஆமை வேகம் காட்டுற அதிகாரிகள், மத்த விஷயத்தில், எப்படி இருப்பாங்கன்னு நீயே பாரு மித்து,'' என, கோப்பட்டாள் சித்ரா.இருவரும் டீயை குடித்து கொண்டிருந்த போது, பாதுகாப்புபோலீசாரும், பேக்கரியில் அமர்ந்தனர்.அதைப்பார்த்த மித்ரா, ''ஏக்கா... இது டிஸ்ட்ரிக்ட் ரூரல் லிமிட்தானே... இவங்க எப்படி இங்கே?''''நடக்குறது பெரிய விழாங்கறதால, வந்திருப்பாங்க. அட... அதை விடு. சிட்டியில் ஒரு இன்ஸ்பெக்டரை, மினி ஆட்டோ டிரைவர் கலாய்ச்ச கதை தெரியுமா?''''அக்கா...! சொல்லுங்க... சொல்லுங்க,''''சிட்டியில், சரக்கு ஆட்டோ டிரைவர் ஒருத்தர், மினி ஆட்டோவில், மொபைல் போனில் பேசியபடி ஓட்டி சென்றுள்ளார். இதைப்பார்த்த, இன்ஸ்பெக்டர், 'மொபைல் டிரைவிங்'க்கு 'பைன்' போட்டு, நோட்டீஸ் வழங்கி, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்,''''அபராதம் பறிமுதல் செய்தனர். 'பைன்' கட்ட வருமாறு, வாலிபரின் நம்பருக்கு போலீசார் அழைத்த போது, 'நான் அவன் இல்லை,' என்ற பாணியில் பதில் சொன்னதால், போலீசார் குழம்பினர். ஒரு வழியாக அட்ரஸ் கண்டுபிடிச்சு, சம்பந்தப்பட்ட டிரைவரை கூட்டிட்டு வந்து 'கவனிச்சாங்களாம்,'' என்றாள் சித்ரா.''போலீசுக்கு எப்போதும் யாரையாவது கவனிக்கிறதே வேலையா போச்சுங்க்கா...''''அனுப்பர்பாளையத்தில், போலீசார் ஆசியுடன், கூத்தம்பாளையத்தில், அமுதாராணி கல்யாண மண்டபத்துக்கு பக்கத்தில, சேவல்கட்டு, நடக்குதாம். நல்ல பெரிய 'செட்' போட்டு, தினமும் காலையில ஆரம்பிச்சு, சாயந்திரம் வரைக்கும், வெட்டாட்டம் கனஜோரா நடக்குதாம். இப்படி 'பப்ளிக்'கா நடத்தறதுக்கு, அதிகாரிகளுக்கு 'செம' கவனிப்பாம்,''''சேவல் கட்டுக்கு வாங்கற லஞ்சப்பணம் கூவவாக போகுது,'' என்று கூறி சிரித்தாள் மித்ரா.''அதேமாதிரி, அவிநாசி ஏரியாவில், சட்ட விரோத சரக்கு விற்க, 5 முதல், 25 ஆயிரம் வரை, ஒரு கடைக்கு மாமூல் போகுதாம். இதுக்காக, ஒரு குரூப் போலீசார், லிஸ்ட் போட்டு வசூலிச்சு கல்லா கட்டுறாங்களாம். நம்ம 'சாமி' ஆபீஸர் எதையும் கண்டுக்கறதில்லையாம்,''''ஆமாங்க்கா... அதிகாரிங்க வரைக்கு 'ப' பாய்வதால், எல்லாருமே மவுன விரதம் இருக்காங்க...''''சரி... வா... கிளம்பலாம். மகாலட்சுமி யாகம் ஆரம்பிச்சுடுவாங்க...'' என்று சித்ரா சொல்ல, மித்ரா ஓடிச்சென்று, பில்லியனில் உட்கார்ந்தாள். அப்போது, ''பக்தர்களே.. பூக்களை கையில் எடுத்து கொள்ளுங்கள்,'' என்று ஒலி பெருக்கியில், அறிவிப்பு வெளியானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X