சினிமா போஸ்டர் ஒட்டுது | Dinamalar

சினிமா போஸ்டர் ஒட்டுது

Added : டிச 25, 2018
Share
''சிட்டி செம போரு...நாளைக்கு அப்படியே ரூரல் பக்கம் போயிட்டு வரலாம்...வர்றியா''இரவில் வந்த சித்ராவின் அழைப்பை, மித்ராவால் தட்ட முடியவில்லை. மறுநாள் காலை ஸ்கூட்டரில், புலியகுளம் வழியாக இருவரும் பறந்தனர்.''இந்த புலியகுளம் ஏரியால மாநகராட்சிக்கு சொந்தமா, நாலு ஏக்கர்ல ஸ்கூல் இருக்கு. ஸ்கூல் பக்கத்துல இருக்கற மைதானத்தை, பக்கத்துல இருக்கற பிரைவேட் ஸ்கூல்காரங்க
 சினிமா போஸ்டர் ஒட்டுது

''சிட்டி செம போரு...நாளைக்கு அப்படியே ரூரல் பக்கம் போயிட்டு வரலாம்...வர்றியா''இரவில் வந்த சித்ராவின் அழைப்பை, மித்ராவால் தட்ட முடியவில்லை. மறுநாள் காலை ஸ்கூட்டரில், புலியகுளம் வழியாக இருவரும் பறந்தனர்.''இந்த புலியகுளம் ஏரியால மாநகராட்சிக்கு சொந்தமா, நாலு ஏக்கர்ல ஸ்கூல் இருக்கு. ஸ்கூல் பக்கத்துல இருக்கற மைதானத்தை, பக்கத்துல இருக்கற பிரைவேட் ஸ்கூல்காரங்க வளைச்சுப்போட பார்க்கறாங்க. இது தொடர்பா கார்ப்பரேஷன் அதிகாரிங்ககிட்ட, பேச்சு நடந்துக்கிட்டு இருக்கு,'' என்று துவங்கினாள் சித்ரா.''அப்ப கார்ப்பரேஷன் ஸ்கூல் என்னாகுறதாமா?''''மாணவர் சேர்க்கை கொறைச்சலா இருக்குன்னு சொல்லி, மாநகராட்சி பள்ளிக்கூடத்தை மூடுறதுக்கு யோசிச்சுக்கிட்டு இருக்காங்க. பள்ளிக்கூடத்தை மூடிட்டா மைதானம் தேவை இருக்காதே. அப்புறம், தேவைப்பட்டவங்களுக்கு தாரை வார்க்கலாம்னு ஐடியா''''அடப்பாவமே... பல கோடி ரூபாய் மாநகராட்சி சொத்தை, கைமாத்தற கொள்ளைத் திட்டமாச்சே இது. யாரும் தடுத்து நிறுத்த மாட்டாங்களா''''அதுக்கு சகாயம் மாதிரி நேர்மையான அதிகாரிங்க வரணுமே. நம்மூர்ல, வளைஞ்சு போற அதிகாரிங்கதானே இருக்காங்க'' என்றாள் சித்ரா.அப்போது மாநகராட்சியின் ஒரு ஓட்டை லாரி, ரோடு முழுக்க குப்பையை சிதற விட்டபடி கடந்து சென்றது.அதைப்பார்த்த சித்ரா, ''குப்பை மேட்டரு, அரசியல் சுனாமியா மாறும் போலிருக்கே...'' என்றாள்.''ஆமாக்கா, கோர்ட் நெருக்கடி கொடுக்கறதுனால, மண்டல அளவுல குப்பை மேலாண்மை மையம் அமைக்குறதுக்கு மாநகராட்சி ட்ரை பண்ணுது. 'ஸ்மார்ட் சிட்டி' நிதியில, ரூ.6.62 கோடி ஒதுக்கி இருக்காங்க. இது, ஒவ்வொரு ஏரியாவுலயும் ஜனங்கள்கிட்ட புகைச்சலை கிளப்பி இருக்கு''''எதிர்க்கட்சிக்காரங்களுக்கு இந்த விஷயம் தெரியாதா என்ன?''''அதெப்படி தெரியாம இருக்கும்? இந்த மேட்டரை தங்களுக்கு சாதகமா எப்படி பயன்படுத்தலாம்னு பார்த்துக்கிட்டு இருக்காங்க. முதல் கட்டமா வீடுகள்ல கறுப்புக்கொடி கட்டி, போராட்டம் நடத்த முடிவு செஞ்சிருக்காங்க''''ஓகோ...''''காளப்பட்டியில கறுப்புக்கொடி கட்டுறதுக்கு, போட்டிருந்த திட்டத்தை 'ஸ்மெல்' பண்ணுன எம்.எல்.ஏ., அப்புறமா அவசர அவசரமா தடுத்து நிறுத்தியிருக்காரு'' என்றாள் மித்ரா.அதற்கு சித்ரா, ''அடுத்த வருஷம் எம்.பி., எலக்சன் பிரசாரத்துல, இந்த பிரச்னையை நம்மூர்ல பெருசா பேசுவாங்க. லோக்கல் பிரச்னையா இருந்தாலும், ஓட்டு வங்கிய அசைச்சு பார்க்கக்கூடிய விஷயமா மாறப்போகுது'' என்றாள் சித்ரா.''அப்ப, ஆளுங்கட்சிக்கு சறுக்கல் விழும்னு சொல்லு...'' என்றாள் மித்ரா.''அதுல டவுட்டே இல்லை. இது மட்டுமில்லாம, நம்ம ஊர் இண்டஸ்ட்ரிகாரங்களும் நெருக்கடி குடுக்கப் போறாங்களாமா''''இது என்ன புதுசா... ஜி.எஸ்.டி., சமாச்சாரமா?''''கரெக்டா அடிச்சே.... அதேதான். குறுந்தொழில் அமைப்புகள்லாம் சேர்ந்து, ஸ்ட்ரைக் பண்ண தயாராகிட்டு இருக்காங்க''''ஏன்... என்ன விஷயம்?''''ஜாப் ஆர்டர்களுக்கு போட்ட, 18 சதவீத ஜி.எஸ்.டி.,யை ரத்து பண்ணனும்; குறைந்தபட்சம் அஞ்சு சதவீத வரி பட்டியலுக்காவது, கொண்டு போகணும்னு எதிர்பார்த்தாங்க''அதற்கு மித்ரா, ''வெட்கிரைண்டர்கள், பம்ப்செட் தயாரிப்பாளர்களும், 12 சதவீத வரி பட்டியல்ல இருந்து, அஞ்சு சதவீத வரி பட்டியலுக்கு கொண்டு போகணும்னு, கேட்டுட்டு இருந்தாங்களே'' என்று 'இண்டஸ்ட்ரி அப்டேட்' கொடுத்தாள்.''சரியா சொன்னே...போன மாசம் 22ம் தேதி நடந்த ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்துல, எல்லா பிரச்னையும் தீர்ந்துரும்னு, அசோசியேஷன்காரங்க எதிர்பார்த்தாங்க. நிறைவேறாததால உச்சகட்ட அதிருப்தியில இருக்காங்க''''சரி... அடுத்ததா என்ன செய்யப் போறாங்களாம்?''''தொழில் அமைப்புகள்லாம் ஒண்ணா சேர்ந்து, ஆர்ப்பாட்டம் அல்லது ஸ்ட்ரைக்குல குதிக்கலாமானு, மத்த அமைப்புகள் கூட பேசிட்டு இருக்காங்க''''அப்ப... ஸ்டிரைக் அறிவிப்பு எப்ப வேணும்னாலும், வரலாம்னு சொல்லு'' என்றாள் மித்ரா.''அதேதான்....அப்படியே ஓரமா வண்டிய நிறுத்து. நல்ல குளிரு. சூடா ஒரு இஞ்சி டீ குடிச்சுட்டு போலாம்'' என்றாள் சித்ரா.இஞ்சி டீ ஆர்டர் செய்து விட்டு அமர்ந்தனர். 'எப்.எம். ரேடியோவில், இளையராஜா 'நான் தேடும் செவ்வந்திப்பூவிது' பாடிக் கொண்டிருந்தார்.மித்ராவின் போன் சிணுங்கியது. எடுத்துப்பேசிய மித்ரா, 'அப்படியா...அட கேவலமே' என்று கூறி வைத்தாள்.''கேள்விப்பட்டியாக்கா... உயர்போலீஸ் அதிகாரி பையன் படத்துக்கு, 'போஸ்டர்' ஒட்டுற நிலைமைக்கு, நம்ம போலீஸ்காரங்க போய்ட்டாங்க'' என்றாள் மித்ரா.''புதுசா இருக்கே...விவரமா சொல்லு''அதற்கு சித்ரா, ''சமீபத்துல உயர் போலீஸ் அதிகாரி ஒருத்தர் மகன் நடிச்ச படம் ரிலீஸ் ஆச்சு. இந்த அதிகாரிக்கு கீழேதான், எல்லா போலீஸ் டிரைனிங் ஸ்கூலும் இருக்கு. இதனால படம் போஸ்டர் ஒட்டுற பொறுப்பை, டிரைனிங் ஸ்கூல் முதல்வருங்க கையில எடுத்துக்கிட்டாங்க...''''ம்ம்... அப்புறம்''''நம்மூர்லயும் அந்த சினிமா போஸ்டர்கள, டிரைனிங் ஸ்கூல்ல வச்சிருக்காங்க... ராத்திரி 1:00 மணிக்கு மேலே சில போலீஸ்காரங்க, ரோட்டுல நின்னு ஒட்டியிருக்காங்க... இதை உளவுத்துறை கண்டுபிடிச்சு, மேலிடத்துக்கு ரிப்போர்ட் போட்டிருக்காமா... பொறுத்திருந்து பாப்போம்'' என்றாள் சித்ரா.உடனே மித்ரா, ''நானும் ஒரு காக்கி மேட்டர் சொல்றேன்... விளாங்குறிச்சி ஏரியாவுல சூதாட்ட பணம், 14 லட்சத்தை போலீஸ்காரங்க பிடிச்சிருக்காங்க... இங்க வெட்டாட்டம் ஆடுன, 31 பேரை பிடிச்சிட்டாங்க... இதுக்கு ஏரியா ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர்தான், புஜம் மடக்கி சப்போர்ட் குடுக்கறார்னு பேசிக்கறாங்க'' என்றாள்.''விளாங்குறிச்சியில மட்டுமில்ல... வடவள்ளி, பேரூர், துடியலுார் ஏரியாலயும் சூதாட்டம் அதிகமா நடக்குது... இதுக்கு ஆளுங்கட்சி ஆளுங்களோட ஆசி இருக்கறதால, போலீஸ்காரங்களே 'கை' வைக்க முடியாம புலம்பிட்டு இருக்காங்க'' என்றாள் சித்ரா பதிலுக்கு.''அவங்க மட்டுமா...இன்டர் ஸ்டேட் டிரைவருங்களும்தான் புலம்புறாங்க'' என்றாள் மித்ரா.''அவங்களுக்கு என்னவாம்''''க.க.சாவடியில் ஆர்.டி.ஓ., சோதனைச்சாவடி வழியா, கேரளா போற டூரிஸ்ட் வண்டிங்க, தற்காலிக பர்மிட் வாங்கிட்டுதான் போகணும். அதுக்கு வெறும் 200 ரூபாய் தான். ஆனா அங்கே மாமூல் சேர்த்து ஆயிரம் ரூபா வாங்கிட்டு இருந்தாங்க''''சரி...''''இப்ப சபரிமலை போற வண்டிக குறைஞ்சுட்டதால, அங்க இருக்கற தொகையை 1,500 ரூபாவா உயர்த்திட்டாங்களாம். இப்ப தினமும், வசூலாகுற ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை, அங்க இருக்கற எட்டு பேரும் ேஷர் பண்ணிக்கிறாங்களாம்'' என்று முடித்தாள் மித்ரா.''என்னைக்குதான் இவங்கள்லாம் திருந்தப் போறாங்களோ'' சித்ரா.அப்போது சுடச்சுட இஞ்சி டீ வந்தது. இருவரும் ரசித்து குடித்தனர்.இரண்டு வாய் உறிஞ்சிய மித்ரா, ''இன்னொரு சுவாரஸ்ய மேட்டர் கேளுக்கா... தொண்டாமுத்துார் ஒன்றிய டாஸ்மாக் பார் ஓனருங்க, இப்பல்லாம் போலீசுக்கு மாமூல் குடுக்கறதில்லையாம்'' என்றாள்.''வெரிகுட்...பரவாயில்லையே''''மேல கேளு....அந்த ஏரியால சில்லிங் மது விற்பனையை கண்டுக்காததாலயும், குடிபோதையில வர்றவங்கள பிடிச்சு கேஸ் போடுறதலாயும், சேல்ஸ் குறைஞ்சதால இந்த முடிவுக்கு வந்திருக்காங்க'' என்றாள் மித்ரா.''அப்புறம்... என்னாச்சு?'''''சில்லிங்'கை அடியோட ஒழிச்சுட்டுதான் மறுவேலைன்னு போலீஸ்காரங்க கிளம்பிட்டாங்களாம். ஒன்பது ஏரியாவுக்கும், ஒரு எஸ்.ஐ., தலைமையில, தனி டீம் போட்டு, ராவோடு ராவா அள்ளிட்டு வந்து, பைன் போடுறாங்க''''அட்றா சக்கை...என்னா நேர்மை''''அது மட்டுமா... பார்கள் இருக்கற ஏரியால, 'டிரங்க் அண்ட் டிரைவ்' கேஸ் பிடிக்கறதையும் விட்டுட்டாங்க'' என்றாள் மித்ரா.''யாரு விபத்துல அடிபட்டா இவங்களுக்கு என்ன... இவங்க பாக்கெட் நிறைஞ்சா சரி. கொடுமைடா சாமி'' என்றவாறு இருவரும் எழுந்தனர்.ஸ்கூட்டர் திருச்சி ரோட்டில் பறந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X