அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அதிமுக,பா.ஜ,அ.தி.மு.க.,பா.ஜ.,கூட்டணி,பேச்சு,ஆரம்பம்!

அ.தி.மு.க., - பா.ஜ., இடையே, கூட்டணி பேச்சு ஆரம்பமாகிறது. மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அருண் ஜெட்லி ஆகியோரை சந்தித்து, முதல் கட்ட ஆலோசனை நடத்துவதற்காக, தமிழக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர், நேற்றிரவு அவசர பயணமாக, டில்லி சென்றனர்.
அடுத்த ஆண்டு, பிப்ரவரியில், லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. அதனால், இப்போதே, கூட்டணி பேச்சுகளை முடிக்க, காங்கிரஸ் தீவிரமாக களமிறங்கி உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த, ஐந்து மாநில தேர்தல் முடிவுகளுக்கு பின், இக்கட்சியின் செயல்பாடுகளில், திடீர் வேகம் பிறந்துள்ளது.

கருணாநிதி சிலை


தேசிய அளவில், தனித்து நின்று ஆட்சியை பிடிக்க முடியாது என்பதையும், பா.ஜ.,வை தனியாக வீழ்த்த முடியாது என்பதையும், நன்றாக அறிந்துள்ள, காங்கிரஸ் தலைவர்கள் சோனியாவும், ராகுலும், மாநில கட்சிகளை அரவணைத்து, வலுவான கூட்டணியை கட்டமைக்க, முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
அதன் துவக்கமாக, டில்லியில், மாநில கட்சிகளை அழைத்து, ஆலோசனை கூட்டத்தையும் நடத்தி முடித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக, சென்னையில் நடந்த, கருணாநிதி சிலை திறப்பு விழாவையும், காங்கிரஸ் பயன்படுத்தி கொண்டது.
இந்த விழாவில், தி.மு.க., கூட்டணியை உறுதி செய்த காங்கிரஸ் கட்சி, அடுத்தகட்ட காய் நகர்த்தலாக, ராகுலை, பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தவும், தி.மு.க., ஆதரவுடன் முயற்சிக்கிறது. இதில், இறுதி முடிவு ஏற்படவில்லை என்றாலும், கூட்டணிக்கு பங்கம் வராது என்பது, உறுதியாகி உள்ளது. எனவே, காங்கிரஸ் கட்சி, மிகுந்த நம்பிக்கையுடன், லோக்சபா தேர்தலை அணுக தயாராகி வருகிறது. அதன் வேகத்துக்கு ஈடுகொடுக்க வேண்டிய கட்டாயத்திலும், ஐந்து மாநில தேர்தலில்

ஏற்பட்ட தோல்வியில் இருந்து மீள வேண்டிய நெருக்கடியிலும், மத்திய ஆளும் கட்சியான, பா.ஜ., உள்ளது.

பீஹாரில் உடன்பாடு


அதனால், தேசிய ஜனநாயக கூட்டணியை, மேலும் வலுப்படுத்தும் விதமாக, மாநில கட்சிகளை சேர்க்க முடிவு செய்துள்ளது. பீஹாரில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தியுடன், லோக்சபா தேர்தலுக்கான தொகுதி உடன்பாட்டை, பா.ஜ., முடித்துள்ளது. தற்போது, தமிழகத்திலும், கூட்டணியை இறுதி செய்யும் பணிகளை துவக்கி உள்ளது.
அதற்கான அழைப்பின்படி, தமிழக முதல்வரின், வலதுகரமாக செயல்படும், மூத்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர், அவசர பயணமாக, நேற்றிரவு டில்லி சென்றுள்ளனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நிதி நிலையை சரிசெய்வதுடன், தேர்தல் கூட்டணியையும், முடிவு செய்ய வேண்டிய கட்டாயம், அ.தி.மு.க.,விற்கும் ஏற்பட்டுள்ளது.ஏனெனில், தமிழகத்தை பொறுத்தவரை, தி.மு.க., தலைமையிலான கூட்டணி உறுதியாகி விட்டது. எனவே, அதற்கு ஈடுகொடுக்கும் வகையிலான கூட்டணியை, அ.தி.மு.க.,வும் உறுதி செய்ய வேண்டிய அவசியம் உருவாகி உள்ளது.
அதே நேரம், மத்திய அரசின் தற்போதைய செயல்பாடுகள், அ.தி.மு.க., அரசுக்கு உதவுவதாக இல்லை என, அக்கட்சியினர் மத்தியில்

அதிருப்தி நிலவுகிறது. புயல் சேததத்தை பார்வையிட, பிரதமர் வராதது, கடும் விமர்சனத்தை கிளப்பியுள்ள நிலையில், நிதியுதவியும் தராமல் இருப்பது, ஆளும் கட்சியினரிடம், அதிருப்தியை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரங்கள் எல்லாவற்றையும் பேசி தீர்வு காணும் நோக்கில், பா.ஜ., அழைப்பை ஏற்று, முதல்வரின் நம்பிக்கைக்குரிய அமைச்சர்கள் மட்டும், நேற்றிரவு டில்லி சென்றுள்ளனர். மத்திய அரசிடம் நிதி கேட்டு பெறுவதற்காகவும், தேர்தல் கூட்டணியை முடிவு செய்யவும், இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
டில்லியில், இன்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை, அடுத்தடுத்து சந்தித்துப் பேச உள்ளனர். அருண் ஜெட்லியிடம், தமிழகத்திற்கு, உடனடியாக நிதி ஒதுக்கும்படி வலியுறுத்த உள்ளனர். நிர்மலாவிடம், கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு பற்றியும் முதல்கட்ட ஆலோசனை நடத்த உள்ளனர். டில்லி சந்திப்புக்கு பின், இந்த இரண்டு விஷயங்களிலும், சாதகமான பலன் கிட்டும் என, ஆளும் அ.தி.மு.க., தரப்பில் திடமாக நம்புகிறது.

நெருக்கடியில் அ.தி.மு.க.,


'கஜா' புயலில், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், பெரும் சேதத்தை சந்தித்தன.

இம்மாவட்ட மக்கள், தங்கள் வாழ்வாதாரத்தை முழுமையாக இழந்துள்ளனர். புயல் சேதத்தை பார்வையிட்டதும், முதல்வர் பழனிசாமி, டில்லி சென்றார்; பிரதமரை சந்தித்தார்.'தற்காலிக புனரமைப்பு பணிக்கு, உடனடியாக, 1,431 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்; நிரந்தர புனரமைப்பு மற்றும் பேரிடர் மீட்புக்கு, 14 ஆயிரத்து, 910 கோடி ரூபாய் வழங்க வேண்டும்.
சேதத்தை மதிப்பிட, மத்திய குழுவை அனுப்ப வேண்டும்' என, கோரிக்கை மனு கொடுத்தார்.அதை ஏற்று, மத்திய குழுவை அனுப்ப, அன்று இரவே, பிரதமர் உத்தரவிட்டார். மத்திய குழுவினர், மறுநாளே, தமிழகம் வந்தனர். புயலால் பாதிக்கப்பட்ட, நான்கு மாவட்டங்களுக்குச் சென்று, சேதங்களைப் பார்வையிட்டனர்.குழு வந்திருந்தபோது, தமிழக அரசு சார்பில், 'இடைக்கால நிவாரணமாக, 2,500 கோடி ரூபாய் வழங்க வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டது.
குழுவினர், டில்லி திரும்பும்போது, இடைக்கால நிவாரணத்தை சற்று உயர்த்தி, 2,700 கோடி ரூபாய் வழங்கும்படி, அரசு தரப்பில் மனு கொடுக்கப்பட்டது. புயல் சேதத்தை பார்வையிட்டுச் சென்ற, மத்திய குழு, தமிழக அரசு கொடுத்த மனுக்கள் தொடர்பாக, சில விளக்கங்களை கேட்டது. அதையும், தமிழக அரசு அளித்துள்ளது. ஆனால், இன்னமும், மத்திய குழு, தன் அறிக்கையை, மத்திய அரசிடம் சமர்ப்பிக்கவில்லை. அதனால், தமிழகத்திற்கு நிதியும் வழங்கப்படவில்லை.
தமிழக அரசு, ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், புயல் நிவாரணத்திற்கு, மத்திய அரசு நிதி ஒதுக்காதது, தமிழக அரசுக்கு, கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.மேலும், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததை காரணம் காட்டி, உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியையும், மத்திய அரசு நிறுத்தியுள்ளது. இது, தமிழக அரசுக்கு, மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியுடன் பேச்சு நடத்த உள்ள தமிழக அமைச்சர்கள், இப்பிரச்னைகளை முன் வைத்து, தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு பெற்று வருவதில், உறுதியாக உள்ளனர்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (153)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
masuk - tamil nadu,இந்தியா
02-ஜன-201917:30:09 IST Report Abuse

masukபிஜேபி சிங்கங்கள் தனியாக நின்று திருவாரூர் தொகுதியில் அமோக வெற்றி பெரும். ஆனா தனியாக போட்டியிட தைரியம் இல்லையே

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
26-டிச-201821:08:02 IST Report Abuse

Pugazh Vஜெர்மனி மேனேஜ்மென்ட் எக்ஸலென்ஸ் கான்ஃப்ரன்ஸ் பிரமாதமாக நடக்கிறது. பகலில் அருமையான காலநிலை. இரவுகள் தான் பயங்கர குளிர் 6℃. இன்னும் 4 நாட்கள்..

Rate this:
Krish Sami - Trivandrum,இந்தியா
28-டிச-201813:29:08 IST Report Abuse

Krish Samiஇந்த செய்திக்கு இங்கு தேவை என்னவோ? புரியவில்லை. ஜெர்மனி போனது குறித்த பெருமைதானோ? அல்லது "மேனேஜ்மென்ட் எக்ஸலென்ஸ் கான்ஃப்ரன்ஸ்" குறித்த பெருமிதமோ? ...

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
26-டிச-201819:35:53 IST Report Abuse

Pugazh Vதினமலர் வாசகர்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் - இங்கே வரும் பாஜக வாசகர்கள் பயன்படுத்திய அநாகரிகமான அவமரியாதை யான வார்த்தைகளையும் - டுமிளர்கள், டாஸ்மாக் டம்ளர்கள், திருட்டு திரவியர்கள், போர்வையாளர்கள், தேசவிரோதி, பாவாடை, பச்சை குல்லா, பாக்கிகள், அரபி அடிமைகள், வாடிகன் அடிமைகள், மிஷநரிகள் போன்ற கலாச்சாரமிக்க வார்த்தைகளை- நினைவு படுத்திக் கொள்ளுங்கள். எத்தனை அகங்காரம், ஆணவம், வன்முறை - மறக்கமுடியுமா? தேர்தலில் வாக்குகள் பதவிகள் வேண்டும் என்றதும் பாஜகவினருக்கு இந்துக்கள் என்று நினைவு வந்து, பாசம் பொங்கி வழிகிறதோ? ஓட்டுகளுக்காக இப்போது மாற்றி பேசுகிறார்கள்

Rate this:
Srinath Babu KSD - Madurai,இந்தியா
27-டிச-201814:03:31 IST Report Abuse

Srinath Babu KSDதி மு க ஜால்ரா Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா அவர்களுக்கு நினைவு படுத்துவதற்காக, உங்கள் தலைவர் மஞ்சள் துண்டார் பேசியவை "திருமதி ஜெயா, கருங்கொரங்கு காமராஜ், ஹிந்து என்றால் திருடன், ராமர் எந்த காலெஜ்ல் இன்ஜினியரிங் பிடிச்சார்" இன்னும் பல சொல்லிக்கொண்டே போகலாம். ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுகை வேண்டாம் ...

Rate this:
மேலும் 148 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X