சென்னை: தமிழகத்தின், 234 சட்டசபை தொகுதிகளுக்கும், 575 பொறுப்பாளர்களை, மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர், கமல் நியமித்துள்ளார்.
கமலின் கட்சி, அடுத்தாண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ளது. மேலும், தமிழக சட்டசபையில் காலியாக உள்ள, 20 தொகுதிக்கான இடைத்தேர்தலிலும்
போட்டியிட தயாராகி வருகிறது. இந்நிலையில், 234 சட்டசபை தொகுதிகளுக்கும், 575பொறுப்பாளர்களை, கமல் நியமித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழர்களின் வளர்ச்சிக்காக, மக்கள் நீதி மையம் கட்சி பணியாற்றி வருகிறது. மாற்றத்தை முன்னிறுத்தி, ஒவ்வொரு நகர்விலும், தமிழர்களின் நம்பிக்கையாக, கட்சி வலுப்பெற்று வளர்ந்து வருகிறது.தற்போது, அனைத்து தொகுதிகளுக்கும், பொறுப்பாளர்களை நியமித்துள்ளோம்.
இது, பதவியல்ல; ஒவ்வொருவரின் பொறுப்பு. இதை மனதில் வைத்து, கட்சியின் விழியாகவும், செவியாகவும், குரலாகவும்,
கடமை உணர்வுடன் செயலாற்ற வேண்டும். தொகுதி பொறுப்பாளர் என்ற பொறுப்பை, சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு பயன்படுத்தாமல், மக்களுக்கு தொண்டாற்ற, அரிய வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (41)
Reply
Reply
Reply