அகிலேசை புகழ்ந்த மாற்றுதிறனாளியை தாக்கிய பா.ஜ., பிரமுகர்

Updated : டிச 26, 2018 | Added : டிச 26, 2018 | கருத்துகள் (48)
Advertisement
Akhilesh Yadav,Manoj Khujjar, Mohammed Miyan,  அகிலேஷ் , மாற்றுதிறனாளி தாக்குதல், பிரதமர் மோடி, மனோஜ் குஜ்ஜர், முகம்மது மியான், அகிலேஷ் யாதவ், மாற்றுதிறனாளி , பாரதிய ஜனதா, பாஜ,
BJP, Akhilesh,Handicapped Attack, Prime Minister Modi,   Handicapped, Bharatiya Janata,

லக்னோ : உ.பி.,யில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் வாழ்க என கோஷமிட்டதற்காக மாற்று திறனாளி இளைஞரை, பா.ஜ., பிரமுகர் ஒருவர் கம்பால் தாக்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
உ.பி.யின் சம்பல் பகுதி துணை மண்டல மாஜிஸ்திரேட் அலுவலகம் முன் மனோஜ் குஜ்ஜர் என்ற 22 வயதான மாற்றுதிறனாளி இளைஞர் ஒருவர், பிரதமர் மோடி மற்றும் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கடுமையாக விமர்சித்து முழக்கமிட்டுள்ளார். மேலும் அவர், தான் அகிலேசுக்கு மட்டுமே ஓட்டளிப்பேன் எனவும், அகிலேஷ் வாழ்க என்றும் முழக்கமிட்டுள்ளார். இதனை கேட்டதும் அங்கிருந்த பா.ஜ., தலைவர் முகம்மது மியான் அவரை கம்பால், வாயில் கடுமையாக தாக்கி உள்ளார்.
இதனை அங்கிருந்தவர்கள் தங்களின் மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து அமைதியை சீர்குலைத்ததற்காக மனோஜை கைது செய்ய மாவட்ட துணை மண்டல மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள முகம்மது மியான், பா.ஜ., தலைவர்களுக்கு எதிராக மனோஜ் மிகவும் மோசமான வார்த்தைகளால் விமர்சித்தார். அவர் அளவுக்கு மீறி பேசியதாலேயே அவரை கட்டுப்படுத்தி, அங்கிருந்து அப்புறப்படுத்த வேறு வழியின்றி தாக்கியதாக கூறி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-டிச-201810:18:02 IST Report Abuse
சௌக்கிதார் வேலங்குடியான் இவனுக்கெல்லாம் கோட், கலர் கண்ணாடி ஒரு கேடு.....
Rate this:
Share this comment
Cancel
27-டிச-201810:16:52 IST Report Abuse
சௌக்கிதார் வேலங்குடியான் .. என்ன செய்ய இப்படியும் ஒரு சிலரால் கட்சிக்கு அவப்பெயர் வருகிறது..... இவரை போன்றோரை கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படவேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
Dv Nanru - mumbai,இந்தியா
26-டிச-201819:26:11 IST Report Abuse
Dv Nanru இவன் உலகமகா மடையன்.... யாரை அடிப்பது என்று கூட தெரிய வில்லை... கோட்டு போட்டவனுக்கும் கோவணம் கட்டியவனுக்கு இது தான் வித்தியாசம் டோய்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X