படிக்காத எம்.எல்.ஏ.,க்கு அடித்தது மந்திரி யோகம்| Dinamalar

படிக்காத எம்.எல்.ஏ.,க்கு அடித்தது மந்திரி யோகம்

Added : டிச 27, 2018 | கருத்துகள் (12)
Advertisement
படிக்காத எம்.எல்.ஏ.,க்கு அடித்தது மந்திரி யோகம்

ராய்ப்பூர், சத்தீஸ்கர் மாநில அமைச்சரவையில், எழுத, படிக்கத் தெரியாத, காங்., - எம்.எல்.ஏ., கவாசி லக்மா அமைச்சராக சேர்க்கப்பட்டு உள்ளார்.சத்தீஸ்கர் மாநிலத்தில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், காங்., வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, சத்தீஸ்கர் மாநில, காங்., தலைவர், பூபேஷ் பெஹல், முதல்வராக பதவியேற்றார். அவருடன், டி.எஸ்.சிங் டியோ உள்ளிட்ட மூன்று பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்நேற்று முன்தினம், சத்தீஸ்கர் மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. ஒரு பெண் உட்பட, ஒன்பது பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களுக்கு, மாநில கவர்னர் ஆனந்தி பென் படேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.அப்போது, காங்கிரசைச் சேர்ந்த, கொன்டா தொகுதி, எம்.எல்.ஏ., கவாசி லக்மா, தன் கையில் இருந்த தாளை பார்த்து படிக்காமல், கவர்னர் கூறியதை அப்படியே கூறினார்.இது குறித்து, எம்.எல்.ஏ., கவாசி லக்மா கூறியதாவது: நான் ஏழை குடும்பத்தில் பிறந்தவன்; பள்ளிக்கு சென்றதில்லை. என்னை, அனைத்து தரப்பு மக்களும் விரும்புகின்றனர். படிக்கா விட்டாலும், தற்போது, நான் அமைச்சர்.என்னை போன்ற ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடுவேன். 20 ஆண்டுகளாக, எம்.எல்.ஏ.,வாக பதவி வகித்துள்ளேன். இதுவரை, என் மீது யாரும் ஒரு சிறிய புகார் கூட தெரிவித்ததில்லை.அமைச்சராக செய்ய வேண்டியதை செய்வேன். அதற்குரிய திறமையை, கடவுள் எனக்கு தந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.சுவாசி லக்மா, 2013ல், நக்சல்கள் நடத்திய தாக்குதலில் தப்பி உயிர் பிழைத்தவர். இவர், 1998ல், முதன்முறையாக, எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார்.இதைத் தொடர்ந்து, 2003, 2008, 2013, 2018 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களிலும், அவர், எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
28-டிச-201820:51:03 IST Report Abuse
K.   Shanmugasundararaj சத்தீஸ்கரில் சுவாசி லக்மா ஏற்கனவே 15 ஆண்டுகளாக , பி ஜெ பி ஆட்சியில் இருக்கும் பொழுதும் எம் எல் எ ஆக இருந்தார்.. அப்பொழுது இந்த சுவாசி லக்மா வுக்கு எம் எல் எ ஆக யோகம் அடித்தது என்று இந்த படிப்பாளி தினமலர் சொல்லவில்லை.இந்திய ஜனநாயகத்தில் யாரும் எம் எல் எ ., எம் பி , மந்திரி ஆகலாம்.. அவருடைய நற்செயலால் தான் , கொண்டா தொகுதி மக்கள் ,. நான்கு முறை சுவாசி லக்மா வை தேர்வு செய்து உள்ளனர்.அந்த மக்கள் , பி ஜெ பி ஆட்சியில் இருக்கும் பொழுதும் சுவாசி லக்மா வை தேர்வு செய்தனர்.ஆக அவர் ஒரு படிக்காத மேதை யாக சத்தீஸ்கர் மாநிலத்தில் இருக்கின்றார்.எனவே தான் சுவாசி லக்மாவை அந்த தொகுதி மக்கள் விரும்பி தேர்வு செய்கின்றனர்.படிக்காதவர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வருவதை ஆர் எஸ் எஸ் ஆதரவாளர்கள் அவாள் வகையறாக்கள் என்றும் எப்பொழுதும் விரும்புவது கிடையாது.
Rate this:
Share this comment
Cancel
கலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா
28-டிச-201800:48:55 IST Report Abuse
கலியுக கண்ணன் இவர் காமராஜை பின்பற்றினால் சந்தோசம் . ராப்பரி தேவியையும் லாலூவையும் பின்பற்றினால் கஷ்டம்
Rate this:
Share this comment
Cancel
27-டிச-201821:13:59 IST Report Abuse
ஆப்பு இவுரு எப்படி எம்.எல்.ஏ தொகுதிக்கு மனு தாக்கல் செஞ்சாரு? கை நாட்டா? கர்மம்..கஷ்ட்டம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X