பொது செய்தி

இந்தியா

பசுக்களுக்கு காப்பகம் : உ.பி., முதல்வர் உத்தரவு

Added : டிச 27, 2018 | கருத்துகள் (39)
Advertisement
Uttar Pradesh,  Yogi Adityanath, Cow protection, உத்தரபிரதேசம், பசு காப்பகம், யோகி ஆதித்யநாத், பசு பாதுகாப்பு, கோசாலைகள் , கால்நடைகள்,

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில், தெருக்களில் சுற்றித் திரியும் பசுக்களை பாதுகாக்க காப்பகங்கள் அமைக்கும்படி, அதிகாரிகளுக்கு, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.சமீபத்தில் நடந்த அதிகாரிகள் கூட்டத்தில், பசு பாதுகாப்பு குறித்து, முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது: தெருக்களில், ஆதரவற்று சுற்றித் திரியும், கால்நடைகளை பாதுகாக்க, காப்பகங்கள் அமைப்பதற்கு கமிட்டி அமைக்கப்பட வேண்டும். அதற்கான பரிந்துரைகளை, மாநில தலைமை செயலர் ஒரு வாரத்தில் அளிக்க வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட, கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களை மீட்பதுடன், ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜில்லா பஞ்சாயத்து அளவில், தேவையான தீவனம், கொட்டகை மற்றும் குடிநீர் வசதிகளுடன் கூடிய, 750 கோசாலைகள் அமைக்கப்பட வேண்டும். இதற்காக, 16 மாநகராட்சிகளுக்கு, தலா, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். தெருக்களில் திரியும் கால்நடைகளுக்காக கோசாலை அமைப்பதற்கு, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 1.2 கோடி ரூபாய் வழங்கப்படும்.கோசாலைகள் அமைக்கப்படுவதை கண்காணித்து, அதிகாரிகள் அறிக்கை அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gideon Jebamani - Yonkers,யூ.எஸ்.ஏ
27-டிச-201814:43:19 IST Report Abuse
Gideon Jebamani Mr . Yogi, cow milk belongs to calf . Can you stop eating all the milk products. Kindly be sensitive to people's issues.
Rate this:
Share this comment
Cancel
Gopi - Chennai,இந்தியா
27-டிச-201813:29:29 IST Report Abuse
Gopi இந்த விஷயத்தில் காங்கிரஸ் முந்திக்கொண்டது (தேர்தல் அறிக்கையிலாவது அதை பதிவிட்டனர் ). ஒவ்வொரு நான்கைந்து அருகருகே அமைந்த கிராமங்களில் மந்தைவெளியுடன் கூடிய வெள்ள பாதிப்பு இல்லாத மேடான கோசாலைகள் அமைக்கப்பட்டால் அந்த கிராம மக்கள் வேறெங்கும் கையேந்தி பிழைக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்கு இயற்க்கை எரிவாயு (அதன் மூலம் மின்சாரம் ), எரு, கோமியம் மற்றும் பஞ்சகவ்யம் மூலமாக இயற்க்கை பூச்சிக்கொல்லி , பால் அது சார்ந்த உணவு பொருட்கள் அவர்களை தன்னிறைவு அடைய செய்யும். இதை இந்தியா முழுமைக்கும் விரிவு படுத்தி விவசாயிகள் பயனடைய அந்தந்த மாநில அரசுகள் கொள்கை முடிவுகள் எடுத்து சட்டம் இயற்றவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
27-டிச-201812:59:30 IST Report Abuse
ஆப்பு அடுத்தமுறை ஜெயிச்சா பசுக்களுக்கு தனியா ஒரு எய்ம்ஸ் கட்டிருவாரு. பசு நேசன் யோகிஜி வாழ்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X