அரசியல் செய்தி

தமிழ்நாடு

லோக் ஆயுக்தா கூட்டம்: பங்கேற்க ஸ்டாலின் மறுப்பு

Added : டிச 27, 2018 | கருத்துகள் (22)
Advertisement
லோக் ஆயுக்தா, திமுக, ஸ்டாலின், ஐகோர்ட் நீதிபதி , ஊழல் புகார் , 
Lok Ayukta, DMK,  Stalin, High court Justice, Corruption Complaint,

சென்னை: நாளை நடக்க உள்ள லோக் ஆயுக்தா தேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்க முடியாது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

லோக் ஆயுக்தா தலைவர், உறுப்பினர்களை தேர்வு செய்யும் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து அரசு சார்பில் எழுதப்பட்ட கடிதத்திற்கு பதில் அளித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: லோக் ஆயுக்தா தலைவர், உறுப்பினர்களை நியமிக்கும் குழுவில் ஆளும்கட்சியினரே அதிகம் உள்ளனர். தேர்வு குழு தலைவரான முதல்வர் மீது ஊழல் புகார் உள்ளது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் சபாநாயகர் குழுவில் உள்ளார். இந்த தேர்வு குழு ஐகோர்ட் நீதிபதி தலைவராக இடம்பெறும் 5 உறுப்பினர்களை கொண்டதாக இல்லை.

இந்த தேர்வு கூட்டத்தில் பங்கேற்பதால், ஊழலை ஒழிக்க எந்த வகையிலும் உதவாது.

ஊழல் புகாரை விசாரிக்க துணை செயலர் தலைமையில் விசாரணை குழு அமைப்பது என்பது வெறும் கண்துடைப்பு. லோக் ஆயுக்தா அமைப்பு அதிகாரமற்ற நிலையில் உள்ளது. இவ்வாறு கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
27-டிச-201818:12:54 IST Report Abuse
Pasupathi Subbian இதெல்லாம் நமக்கு ஒத்துவராது. அங்கே போனால் கேள்வி கேட்பார்கள். பதில் நமக்கு தெரியாது., சமாளிக்கவும் முடியாது. அன்று ஐயோ ஐயோ கொல்றாங்களே என்று அவாஸ் கொடுத்து அப்பன் நடித்தார், மகன் காருக்கு சென்று சட்டையை கிழித்துக்கொண்டு அனுதாபம் தேடினார், அதுபோன்ற நடிப்புகளை இனி நடிக்கமுடியாது என்ற காரணத்தினால் கூட்டத்துக்கு போகவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Jaya Ram - madurai,இந்தியா
27-டிச-201817:10:17 IST Report Abuse
Jaya Ram அது சரி இப்போ உங்களால் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள நபர் உச்ச கோர்ட் நீதிபதி தலைமையில் லோக் ஆயுக்த மத்தியில் அமைக்க தயாராக உள்ளார் என உங்களால் உத்தரவாதம் கொடுக்க முடியுமா? , உங்கள் அப்பாவே போர் முடிந்தது என்று அறிவித்து பதுங்கு குழியில் இருந்தவர்களை வெளிவரச்செய்து கொத்துக்குண்டுகள் போடச்செய்து இலங்கைத்தமிழ் மக்களை காவு கொடுத்தவர்தானே
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
27-டிச-201816:59:53 IST Report Abuse
narayanan iyer ஸ்டாலின் கூட்டும் கூட்டத்திற்கு மட்டும் அவர் அழைக்கும் காட்சிகள் மட்டும் வரவேண்டும் . அனைத்து கட்சி கூட்டம் வேண்டும் என்பார் . கூட்டினால் எதாவது ஒருகாரணத்தை சொல்லி வெளியேறிவிடுவது . பின்னர் நாங்கள் கேட்டும் இந்த அரசு செவிசாய்க்கவில்லை என்பார் . நாக்கில் எலும்பு இல்லாததது எவ்வளுவு சௌகரியம் இவர் சொல்வதையும் கேட்க ஆட்கள் இருக்கிறார்கள் .என்னதான் இருந்தாலும் ஒரு மாபெரும் இயக்கத்தின் தலைவர் இல்லையா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X