விவசாயிகளை தவறாக வழிநடத்தும் காங்.,: பிரதமர்

Added : டிச 27, 2018 | கருத்துகள் (24)
Share
Advertisement
பிரதமர் மோடி, பா.ஜ., பாஜ, காங்கிரஸ், விவசாயிகள், கடன்தள்ளுபடி

தர்மசாலா: கடன் தள்ளுபடி விஷயத்தில் விவசாயிகளை காங்கிரஸ் தவறாக வழிநடத்தி வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்,


ஏமாற்றும் காங்.,:



இமாச்சல பிரதேச மாநிலத்தில் பா.ஜ., ஆட்சி அமைத்து ஒராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு நடந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: 2009ல் ஆட்சியமைத்த போது ரூ.6 லடசம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்தது. ஆனால், ரூ.6 ஆயிரம் கோடி மட்டுமே தள்ளுபடி செய்தது. இதில் விவசாயிகள் அல்லாதோரின் கடன் தான் தள்ளுபடி செய்யப்பட்டதாக சிஏஜி அறிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது.

பஞ்சாப் தேர்தலின் போது கூட விவசாய கடன் தள்ளுபடி என காங்கிரஸ் கூறியது. ஒன்றும் நடக்கவில்லை. கடன் தள்ளுபடி விஷயத்தில் காங்கிரஸ் மக்களை முட்டாள் ஆக்குகிறது.

மன்மோகன் ஆட்சியின் போது, ஒன் ரேங்க் ஒன் பென்சன் திட்டத்திற்கு குறைந்தளவு நிதி ஒதுக்கி நாட்டை தவறாக வழிநடத்தியது. இந்த திட்டம், பா.ஜ., ஆட்சிக்கு வந்த பிறகு தான் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Varatharaajan Rangaswamy - Tiruchirappalli ,இந்தியா
31-டிச-201807:36:50 IST Report Abuse
Varatharaajan Rangaswamy பச்சை துண்டு போட்டவனையெல்லாம் விவசாயியாக எடுத்துக்கொள்ள முடியுமா? உண்மையிலேயே விவசாய கடன் தள்ளுபடி என்பது சரியான தீர்வாக இருக்க முடியாது நரேந்திர மோதி அரசின் திட்டங்கள் விவசாயிகளின் வருமானத்தை பேருக்கும் நோக்கத்திலேயே இருக்கின்றன என்பதுதான் உண்மை கடன் வாங்கிவிட்டு அதனை தள்ளுபடி செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பதே தவறு பயிர் பாதுகாப்பு காப்பீடு, உரங்களின் தரத்தை மேம்படுத்தி அவற்றுக்கு சரியான விலையில் கிடைக்கச்செய்வது மற்றும் பல்வேறு விவசாயிகள் நலத்திட்டங்களை மோதி அரசுதான் செய்துள்ளது காங்கிரஸ் நாட்டு மக்களையும் விவசாயிகளையும் ஏமாற்றி வந்தது என்னும் நரேந்திர மோதியின் கணிப்பு நூறு சதவீதம் உண்மை
Rate this:
Cancel
Mohan Nadar - Mumbai,இந்தியா
28-டிச-201802:17:07 IST Report Abuse
Mohan Nadar முந்திய ஆட்சியில் ஊழல் பண்ணியும் விவசாயி கடனை தள்ளுபடி பண்ணமுடித்தது ...உங்களாலே எல்லாத்தையும் மிச்சப்படுத்திடேன் சொல்லியும் ஒன்னும் பண்ண முடியலை ...ஒன்னு நிர்வாக திறமை இல்லையா ? ஊழல் பண்ணலே என்பது பொய்யா ? கேட்டா சிலை காட்டினேன் ..பாலத்தை காட்டினேன் ...ரோட்டை போட்டேன் என்று நல்ல பைசா அடிக்கிற திட்டங்களை சொல்லுறீங்க ..
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
28-டிச-201802:07:15 IST Report Abuse
தமிழ்வேல் நீங்க சரியான வழியில் அவர்களைக் கொண்டுபோகலாமே.. தேடி வருபவர்களை பார்க்கவே உங்களுக்கும் உங்கள் சகாக்களும் நேரம் இல்லை. அது தமிழக முதல்வரானாலும் சரி அமைச்சர்களானாலும் சரி.. ஆனால் நடிகையின் திருமணத்திற்கு நேரம் ஒதுக்குகின்றோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X