அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
லோக் ஆயுக்தா கூட்டத்தில்
பங்கேற்பில்லை: தி.மு.க.,

சென்னை:'இன்று நடக்கவுள்ள, லோக் ஆயுக்தா தேர்வுக்குழு கூட்டத்தில், பங்கேற்க இயலாது' என,தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

 லோக், ஆயுக்தா, கூட்டத்தில்,பங்கேற்பில்லை,தி.மு.க.,

இதுதொடர்பாக, தமிழக பணியாளர் நலன் மற்றும் நிர்வாகம் சீர்திருத்தத் துறை செயலர், சுவர்ணாவுக்கு, ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்:லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க, இன்று

நடைபெறும் கூட்டத்திற்கு, எனக்கு அழைப்பு விடுக் கப்ப ட்டுள்ளது.ஊழல் புகார்கள் மீது,பொது நலனுக்கு பயனுள்ள வகையில், ஆக்கப் பூர்வமான நடவடிக்கை எடுக்கும் எவ்வித அதிகாரமும், லோக் ஆயுக்தா அமைப்புக்கு இல்லை.இந்த தேர்வுக்குழு, உயர் நீதிமன்ற நீதிபதி தலைவராக இடம் பெறும், ஐந்து உறுப்பினர்கள் குழுவாக இல்லை.


அனைத்திற்கும் மேலாக, அரசு ஒப்பந்தங்கள், டெண்டர்கள், நியமன ஊழல்கள், உள்ளாட்சி துறையில்நடைபெறும் வெளிப்படையான ஊழல்கள் போன்றவற்றை விசாரிக்கக் கூடாது என, லோக் ஆயுக்தா சட்டப்பிரிவில் கூறப்பட்டுள்ளது.

இது, விசாரணையின் நகங்களைப் பிடுங்கி, ஊழல் ஒழிப்பு என்ற அடிப்படை நோக்கத்தையும்,

Advertisement

தீவிரத்தையும் பாழ்படுத்து வதாக உள்ளது. லோக் ஆயுக்தா தேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்பது, எவ்விதத்திலும் ஊழல் ஒழிப் பிற்கும் உதவாது. எனவே, என்னால், தேர்வுக் குழு கூட்டத்தில் பங்கேற்க இயலாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganesh Shetty - chennai,இந்தியா
28-டிச-201821:43:07 IST Report Abuse

Ganesh Shettyஏற்கனவே உயர்நீதிமன்றம் மற்றம் கிழமை நீதிமன்றத்தில் இவருடைய ஆட்களை சொருகியாகிவிட்டது இது புதிது அல்லவா அதனால் அலறுகிறார்

Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
28-டிச-201821:35:23 IST Report Abuse

Natarajan Ramanathanஇன்று பெரம்பலூர் தொகுதி முன்னால் திமுக MLA ராஜ்குமாருக்கு 15 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற வழக்கில் பத்து ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 42000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

Rate this:
niki - Chennai,இந்தியா
28-டிச-201817:27:24 IST Report Abuse

nikiஊழல் பண்றதுல முதல் நபரே நீங்கதான் அதனாலதான் பயந்துகிட்டு வரலையோ என்னவோ?

Rate this:
மேலும் 34 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X