கிடுக்கிப்பிடி! குட்கா வழக்கில் உயர் அதிகாரிகளிடம் விசாரணை; சி.பி.ஐ., அலுவலகத்தில் துருவித்துருவி கேள்வி Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
Gutka scam,CBI investigation, Madhava Rao, Vijayabaskar, குட்கா வழக்கு, சிபிஐ விசாரணை , குட்கா ஊழல், அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா,  மாதவ ராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ், குட்கா ஆலை , குட்கா குடோன், டிஜிபி டிகே ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் , குட்கா,
gutka, Gudka case,  Minister Vijayabaskar,
Former Minister Ramana,  Umashankar Gupta, Srinivasa Rao, Gutka plant, Gutka Goodown, DGP TK Rajendran, former police commissioner George,

'குட்கா' ஊழல் விவகாரத்தில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணாஆகியோரிடம், ஏற்கனவே விசாரணை நடந்து முடிந்துள்ள நிலையில், துணை கமிஷனர் உள்ளிட்ட, ஏழு போலீஸ் அதிகாரிகளிடம், தற்போது, சி.பி.ஐ., அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை, சி.பி.ஐ., அலுவலகத்தில், இரண்டு நாட்களாக நடந்து வரும் விசாரணையில், சி.பி.ஐ., அதிகாரிகள் எழுப்பிய கேள்விகளால், லஞ்சப் பணம் கைமாறிய விவகாரத்தில், பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன.
சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த, மாதவ ராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ் ஆகியோர், செங்குன்றம் அருகே, ஏழு இடங்களில், 'குட்கா' ஆலை மற்றும், 'குடோன்' நடத்தி வந்தனர்.பல கோடி ரூபாய் லஞ்சம்தடையை மீறி, குட்கா விற்பனை செய்வதை, கண்டுகொள்ளாமல் இருக்க, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் ரமணா, டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்டோருக்கு, இவர்கள் பல கோடி ரூபாய் லஞ்சம் தந்ததாக கூறப்படுகிறது.
அதேபோல, மாதவ ராவ் உள்ளிட்டோர், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, 2016ல், மாதவ ராவ், சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா ஆகியோரின் வீடுகளில், வருமான வரித் துறையினர், அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ரகசிய டைரி சிக்கியது.

அதில், அமைச்சர்கள், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு, 39 கோடி ரூபாய் லஞ்சம் தரப்பட்டதற்கான குறிப்புகள் இருந்தன.
லஞ்சம் கொடுத்தது குறித்து, மாதவ ராவும், ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். வருமான வரித்துறையின் பரிந்துரைப்படி, குட்கா ஊழல் குறித்து, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தனர். அதில், திருப்தி இல்லை என்பதால், விசாரணையை, சி.பி.ஐ.,யிடம் ஒப்படைத்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்பின், இந்த வழக்கின் விசாரணை வேகம் பெற்றுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர்,டி.ஜி.பி., ராஜேந்திரன், ஜார்ஜ், ரமணா உள்ளிட்டோரின் வீடுகளில், சி.பி.ஐ., அதிகாரிகள், அதிரடி சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். 6 பேர் கைதுபின், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் செந்தில்முருகன், எம்.கே.பாண்டியன் மற்றும்

மாதவ ராவ் உள்ளிட்ட, ஆறு பேரை கைதுசெய்தனர்.
இதையடுத்து, விஜயபாஸ்கர், அவரது உதவியாளர் சரவணன் மற்றும் ரமணா ஆகியோருக்கு, 'சம்மன்' அனுப்பி, விசார ணைக்கு அழைத்தனர். இம்மூவரிடமும்,ஐந்து நாட்கள், சென்னையில், தொடர் விசாரணை நடத்தி முடித்தனர்.அதில் கிடைத்த தகவல்கள் அடிப்படையில்,அடுத்தகட்டமாக, போலீஸ் அதிகாரிகளுக்கு வலை விரித்தனர்.அதில் சிக்கிய, சென்னை, மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றியவர்கள் உள்ளிட்ட,ஏழு போலீஸ் அதிகாரிகளிடம், தற்போது கிடுக்கிப்பிடி விசாரணை நடந்து வருகிறது.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, சி.பி.ஐ., அலுவலகத்தில், டில்லியில் இருந்து வந்த அதிகாரிகள், இவர்களை விசாரித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, டி.ஜி.பி., மற்றும் முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரிடமும், விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

இருவருக்கும், விரைவில், சம்மன் அனுப்பப்பட உள்ளது. இதுகுறித்து, சி.பி.ஐ., வட்டாரங்கள் கூறியதாவது: குட்கா ஊழலில் சிக்கியுள்ள, ஐ.பி.எஸ்., அதிகாரிகள், விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். குட்கா ஊழல் நடந்த, 2013 - 15ல், சென்னை, செங்குன்றம் மற்றும் புழல் பகுதிகளில் பணியாற்றிய உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்களிடமும் விசாரிக்க உள்ளோம்.
குட்கா குடோனில் சோதனை நடத்திய வரும், தற்போது, விழுப்புரம், எஸ்.பி.,யாக இருப்பவருமான, ஜெயகுமாரிடம், ஏற்கனவே விசாரித்துள்ளோம். அவர் தந்த தகவல்கள் அடிப்படையில், துணை கமிஷனர் உள்பட, ஏழு போலீஸ் அதிகாரிகளிடம், இப்போது விசாரணை நடந்து வருகிறது.
இந்த ஏழு பேரிடமும், ஏற்கனவே, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து உள்ளனர். அப்போது, 'குட்கா ஊழலுக்கும், டி.ஜி.பி., உள்ளிட்ட, ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கும், எந்த சம்பந்தமும் இல்லை' என, தெரிவித்துள்ளனர்.'எந்த அடிப்படையில், இதுபோல கூறினீர்கள்; அதற்கு ஆதாரங்கள் உள்ளனவா' என்பது குறித்து, ஏழு பேரிடமும், துருவித்துருவி கேள்விகள் எழுப்பப்ட்டன. அப்போது, பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.அவர்களிடம் நடத்திய விசாரணை முழுவதும், 'வீடியோ' பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan. - kerala,இந்தியா
28-டிச-201818:51:35 IST Report Abuse

rajan.  மொத்தத்தில் இந்த திராவிட கூட்டமே ஊழல் நுணுக்கங்களை பற்றி தான் இத்தனை காலமும் ரூம் போட்டு ஆராய்ச்சி பண்ணி இருக்கிறானுங்க.

Rate this:
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
28-டிச-201818:48:46 IST Report Abuse

புதிய தமிழ்மைந்தன்கோவையில் மொத்த கொள்முதல் ஏஜெண்ட் ஊழல்கட்சி எம்எல்ஏ

Rate this:
அப்பாவி - coimbatore,இந்தியா
28-டிச-201817:09:35 IST Report Abuse

அப்பாவிஇந்த கிடுக்கிப்பிடி எல்லாம் கூட்டணிக்காக தான். மோசடினா சும்மாவா

Rate this:
மேலும் 34 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X