பொது செய்தி

இந்தியா

உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க சாவடிகளில் இலவசம்?

Added : டிச 28, 2018 | கருத்துகள் (35)
Advertisement
உள்ளூர் வாகனங்கள், சுங்க சாவடி, மத்திய அரசு, சுங்க கட்டணம் , சுங்க கட்டண விலக்கு , Local vehicles, customs booth, central government, customs duty, customs duty exemption,

புதுடில்லி : உள்ளூர் வாகனங்களுக்கு, சுங்கச் சாவடிகளில் இலவச அனுமதி வழங்குவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

நாடு முழுவதும், ஒரு லட்சம் கி.மீ.,க்கு மேல், தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இச்சாலைகளின் வழியாக செல்லும் வாகனங்களிடம், கட்டணம் வசூலிக்க, 400க்கும் மேற்பட்ட இடங்களில், சுங்கச் சாவடிகள் இயங்கி வருகின்றன.

தமிழகத்தில், 46 இடங்களில், சுங்கச் சாவடிகள் உள்ளன. இவற்றின் வாயிலாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. இந்த நிதியை பயன்படுத்தி, சாலை விரிவாக்கம், பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த, 2014 லோக்சபா தேர்தலின் போது, சுங்கச் சாவடிகளை அகற்றப் போவதாக, பா.ஜ., சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. பின், அது, கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், லோக்சபா தேர்தல், அடுத்தாண்டு நடக்க உள்ளதால், அந்த வாக்குறுதியை செயல்படுத்தும் வகையில், முதற்கட்டமாக, சுங்கச் சாவடிகளில், உள்ளூர் வாகனங்களுக்கு, கட்டண விலக்கு அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

சில சுங்கச் சாவடிகளை, சாலை விரிவாக்கம் மற்றும் கட்டண வசூலிப்பு அடிப்படையில், தனியார் நிறுவனங்கள் இயக்கி வருகின்றன. உள்ளூர் வாகனங்களுக்கு, கட்டண விலக்கு அளிப்பதற்கு, இந்நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன.எ னவே, இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, அந்தந்த மாநில தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம், அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை அடிப்படையில், இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் வாய்ப்புள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
01-ஜன-201917:50:48 IST Report Abuse
Malick Raja GST. நுழைவு சுங்க வரிகள் நீக்கினால் மட்டுமே நாடு முன்னேறும் .. GST. Tollgate. இரண்டும் ஏழைகளின் சாபம் நாடு உருப்பட வாய்ப்பில்லை ... மலேசியாவில் இரண்டும் ஒழித்துக்கட்டப்பட்டுவிட்டதை கண்டு உலகமே வியந்தது .. மலேசிய ஒன்றும் மூழ்கிவிடவில்லையே
Rate this:
Share this comment
Thiru - Singapore,சிங்கப்பூர்
02-ஜன-201909:11:06 IST Report Abuse
Thiruநல்ல கருத்து.... ஆனால், மலேஷியாவில் இன்னும் டோல் கேட் வசூல் ஒழிக்கப் படவில்லை.......
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - bengalooru,இந்தியா
29-டிச-201804:37:11 IST Report Abuse
 nicolethomson திருடர்கள் முன்னேற்ற கழகத்தினர் தமிழகத்தில் பாதி டோலக்கேட்டின் உரிமையாளர்கள், அவர்களின் வெறுப்பை மோடி அரசு சம்பாதிக்கிறதோ? அது சரி சாலையில் தவறான திசையில் பயனிப்போரை எப்போ தடுக்க போறீங்க சார்?
Rate this:
Share this comment
Cancel
Madhav - Chennai,இந்தியா
28-டிச-201816:18:57 IST Report Abuse
Madhav இந்த சுங்க சாவடிகள் ஒரு பெரும் ஊழலின் ஒரு பகுதி. இவைகள் பெரும் பகுதி பணத்தை அரசியல்வாதிகள் கட்சிகளுக்கு லஞ்சமாக கொடுக்கின்றன. வரும் வருமானத்தில் சாலைகளுக்கு பெரும்பகுதி செலவு செய்தால் கணக்கை வெளிப்படையாக தெரிவிக்கலாம் ஆனால் இவர்களின் வருமானம் ஊழல் ஆக பெரும்பகுதி மாறுவதால் தான் கணக்கு வழக்கு இல்லாமல் வருடாவருடம் கட்டண கொள்ளை அதிகமாகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X