பொது செய்தி

தமிழ்நாடு

நிறுவனங்களில் விசாகா கமிட்டி கட்டாயம் மாநில மகளிர் ஆணைய தலைவர் தகவல்

Added : டிச 28, 2018
Share
Advertisement
கோவை ''பெண்கள் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களிலும், விசாகா கமிட்டி கட்டாயம் அமைக்க வேண்டும்,'' என, மாநில மகளிர் ஆணைய தலைவர், கண்ணகி தெரிவித்தார்.தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கல்வி, வேலைக்காக வெளியூர் விடுதிகளில் தங்கும், பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. 10 சதவீத விடுதிகள் கூட, முறையாக உரிமம் பெறுவதற்கு

கோவை ''பெண்கள் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களிலும், விசாகா கமிட்டி கட்டாயம் அமைக்க வேண்டும்,'' என, மாநில மகளிர் ஆணைய தலைவர், கண்ணகி தெரிவித்தார்.தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கல்வி, வேலைக்காக வெளியூர் விடுதிகளில் தங்கும், பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. 10 சதவீத விடுதிகள் கூட, முறையாக உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்கவில்லை. இதனால், மாவட்ட வாரியாக, தனியார் விடுதிகளை ஆய்வு செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அனைத்து அரசு, தனியார் நிறுவனங்களிலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை விசாரிக்க, விசாகா கமிட்டி அமைக்க வேண்டும். 1997ல் கொண்டுவரப்பட்ட இக்கமிட்டி விதிமுறைகளில், ஆண்டுக்கு நான்கு முறை கூட்டம் நடத்தி, பெண்களுக்கு பாதுகாப்பான பணிசூழல் உருவாக்கி தர வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள், இதை பின்பற்றுவதில்லை.மாநில மகளிர் ஆணைய தலைவி கண்ணகி கூறியதாவது:பெண்கள் பணிபுரியும், அனைத்து வகை நிறுவனங்களிலும், விசாகா கமிட்டி கட்டாயம் அமைக்க வேண்டும். மாவட்ட கலெக்டர், விசாகா கமிட்டியின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும்.பெண்கள் விடுதிகளில் தங்கும்போது, பாதுகாப்பு குறித்து முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். பாலியல் தொல்லை தரும் நபர் மீது, அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க வேண்டும்.பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, கவுன்சிலிங் அளிப்பது அரசின் கடமை. இதுசார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த, தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X