கோவை:இலவச வை - பை வசதியுடன், அனைத்து பத்திரிகைகளும் ஒரே செயலியில் கொண்டு வரப்பட்டு, மாவட்ட மைய நுாலகம் டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தின் மைய நுாலகம், ஆர்.எஸ்.புரத்தில் உள்ளது. இங்கு, 2 லட்சத்து 39 ஆயிரத்து 40 புத்தகங்கள் உள்ளன. போட்டித்தேர்வு பயிற்சி மையம்,குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவு, இன்டர்நெட் வசதி உள்ளதால், வாசகர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றனர்.இந்த நுாலகத்தை, டிஜிட்டல்மயமாக்கும் திட்டம், சமீபத்தில் சட்டசபை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன், இலவச வை-பை வசதி செய்யப்பட்டுள்ளது.நுாலக வளாகத்தினுள், இந்த வசதியை பயன்படுத்தி, மாணவர்கள் இணையதளத்தில் தேவையான தரவுகளை பதிவிறக்கலாம். இதோடு, மேக்ஸ்டர் (Magzter App) என்ற செயலியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இச்செயலியில், தினசரி, வார, மாத இதழ்களை, இலவசமாக பதிவிறக்கி படிக்கலாம். போட்டித்தேர்வுக்கான புத்தகங்களும் உள்ளதால், இளைஞர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.'ப்ரீயாக பதிவிறக்கலாம்விரிவாக படிக்கலாம்'மாவட்ட மைய நுாலகர் ராஜேந்திரன் கூறுகையில்,'' மைய நுாலகத்தை திறன்மிகு நுாலகமாக்க, 50 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேக்ஸ்டர் ஆப் மூலம், நுாலக வளாகத்திற்குள், இலவசமாக புத்தகங்களை பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த லிங்க் வசதியை பெற, 98118 69259 என்ற எண்ணுக்கு 'மிஸ்டு கால்' கொடுத்தால் போதும். கூகுள் பிளேஸ்டோரிலும், இச்செயலியைபதிவிறக்க முடியும். வாசகர்களின் வசதிக்காக கொண்டு வரப்பட்டுள்ள இத்திட்டம், போட்டித்தேர்வு மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE