பொது செய்தி

தமிழ்நாடு

ஆறு வகை பயிர்களுக்கு காப்பீடு பதிவு: விவசாயிகளுக்கு அழைப்பு

Added : டிச 28, 2018
Advertisement

கோவை:பிரதம மந்திரியின் புதிய பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், ஆறு வகையான பயிர்களுக்கு, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடுபதிவு செய்துகொள்ள, வேளாண் இணை இயக்குனர் பானுமதி அறிவுறுத்தியுள்ளார்.2016--17ம் ஆண்டு காரீப் பருவம் முதல், புதிய பயிர் காப்பீட்டு திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அரசினால் அறிவிக்கப்பட்ட கிராமங்களில், அறிவிக்கப்பட்ட பயிர்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள், தங்கள் பயிர்களை காப்பீடு செய்துகொள்ளலாம்.இதன் மூலம், விதைப்பு முதல் அறுவடை வரை நீரின்மை, வறட்சி, வெள்ளம், புயல், விலங்கு தாக்குதல் என இயற்கை பாதிப்புகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு, விதிமுறைகள்படி இழப்பீடு வழங்கப்படுகிறது.கோவை மாவட்டத்தில், 276 கிராமங்களும், ஆறு வகையான பயிர்களும் (ராபி பருவம்)காப்பீட்டு திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் உள்ள விவசாயிகள், உரிய பிரீமியத்தை செலுத்தி, பயிர் காப்பீடு செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2017--18 காரீப் பருவத்தில், 2,145 விவசாயிகள் இக்காப்பீட்டின் மூலம் பயன்பெற்றுள்ளனர்.யாரை அணுக வேண்டும்!இது குறித்து, வேளாண் இணை இயக்குனர் பானுமதி கூறியதாவது:சோளம், மக்காசோளம், பாசிப்பயறு, உளுந்து, நிலக்கடலை, கரும்பு ஆகிய ஆறு பயிர்களுக்கு காப்பீடு பதிவு செய்யப்படுகிறது. கரும்புக்கு, பிரீமியம் செலுத்த இறுதிநாளாக 2019, அக்., 31ம் தேதியும், பிற ஐந்து பயிர்களுக்கு, ஜன., 15ம் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிட்டா மற்றும் அடங்கல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக முன்பக்க விபரம் ஆகிய சான்றுகளுடன், விவசாயிகள் நேரடியாக அணுகலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X