பள்ளிகளுக்கு, 150 நாட்கள், 'லீவு': ஆசிரியர், மாணவர்களுக்கு, 'ஜாலி'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகளுக்கு, 150 நாட்கள், 'லீவு': ஆசிரியர், மாணவர்களுக்கு, 'ஜாலி'

Added : டிச 29, 2018 | கருத்துகள் (37)
Advertisement
பள்ளி விடுமுறை, ஆசிரியர்கள், மாணவர்கள், அரசு பள்ளிகள், கோடை விடுமுறை, School holidays, teachers, students, government schools, summer holidays,

சென்னை: வரும், 2019ம் ஆண்டில், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு, 150 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. மீதமுள்ள, 215 நாட்களிலும், ஐந்து நாட்கள் உள்ளூர் மற்றும் மழைக்கால விடுமுறை எடுக்கலாம் என, அனுமதிக்கப்பட்டு உள்ளது.ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான, அனைத்து அரசு பள்ளிகளுக்கும், 210 நாட்கள், வேலை நாட்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், 210 நாட்கள் பணியாற்றினால் போதும். அதற்கு குறைவான நாட்கள் இருந்தால், சனிக்கிழமைகளில் பணியாற்ற வேண்டும். பெரும்பாலான பள்ளிகளில், சனிக்கிழமையன்று பாதி நாள் மட்டுமே, வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், வரும், 2019ல், பள்ளிகளுக்கு, 150 நாட்கள் விடுமுறையாக கணக்கிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, மாவட்ட கல்வி அதிகாரிகள் அலுவலகங்களில், பணி நாட்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.அதன்படி, ஜனவரியில், 11 நாட்கள்; பிப்., 7; மார்ச்சில், 9; ஏப்., 16; மே, 31; ஜூன், 10; ஜூலை, 7; ஆக., 11; செப்., 14; அக்., 12; நவ., 8 மற்றும் டிசம்பரில், 14 நாட்கள் என, 150 நாட்கள் விடுமுறை நாட்களாகின்றன. இந்த விடுமுறை நாட்களுக்கு ஏற்ப, வகுப்புகளுக்கான பாட அட்டவணை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அட்டவணையின்படி, மொத்தம், 365 நாட்களில், 215 நாட்கள் பள்ளிகள் செயல்பட வேண்டும்; ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். இதிலும், ஐந்து நாட்கள் உள்ளூர் பண்டிகை மற்றும் மழைக்கால விடுமுறையாக எடுத்துக் கொள்ளலாம். இது, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, 'ஜாலி'யாக அமையும். ஆசிரியர்களுக்கு, ஏப்ரல், மே மாதங்களில், 47 நாட்கள், கோடை விடுமுறை கிடைக்கிறது. கோடை விடுமுறையில், பொது தேர்வுக்கான விடை திருத்தும் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, தனியாக ஊதியம் தரப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vinoth - Chennai,இந்தியா
30-டிச-201808:18:57 IST Report Abuse
vinoth @ram correct sir mathavanga thaan katharanum vela apdi neenga poi vattiya vasool panunga.. inga oruthar comment panirukar scientific ah indha leave thevanu.. ama mini bus conductor teamaster busstand la poo vikuravar ivangala ellam unga teaching nala ready panrathuku scientific ah indha leave thevathaana sir
Rate this:
Share this comment
Cancel
Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
29-டிச-201822:14:20 IST Report Abuse
Mannai Radha Krishnan இந்தியாவிலேயே ஜாலியான் வேலை டீச்சர் வேலை தான். சம்பளமும் ஹைதான். அதிக சம்பளம் வாங்கிக் கொண்டு குறைந்த நேரம்/நாள்கள் வேலை செய்பவர் வாத்தியார்கள் தான். நிறைய கம்ளெயிண்ட் சொல்பவர்களும், சம்பளம் போதவில்லை என்று மூக்கால் அழுவதும் டீச்சருங்கத்தான், டியூஷன் சம்பளம், வட்டிக்குவிடும் வட்டி பணம், ப்ரைவேட் வேலை, etc ...ஆக டீச்சருக்குத் தான் ஜாலியோ ஜாலி
Rate this:
Share this comment
Cancel
Meenu - Chennai,இந்தியா
29-டிச-201821:25:23 IST Report Abuse
Meenu பள்ளி ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கும் ஊதியம் மிக மிக அதிகம். இவர்கள் வாங்கும் சம்பளத்துக்கு வருஷம் பூராவும் வேலை செய்கின்றனர் மற்ற துறையிலும், தனியார் நிறுவனங்களிலும். போதை குறைக்கு ரிட்டையர் ஆனால் பென்ஷன் வேறு. இவ்வளவு சம்பளம் வாங்கி, இவர்களில் நிறைய பேர் ரியல் எஸ்டேட், பிளாட் போன்றவற்றில் முதலீடா போட்டுவைத்துள்ளனர். எத்தனையோ பனி நிரந்தரமில்லாதவர்கள் வெறும் மூவாயிரம் ரூபாய்க்கு வேலை செய்து வருகின்றனர்.
Rate this:
Share this comment
30-டிச-201809:26:49 IST Report Abuse
aravamudhan. ஆசிரியர்களுக்கு விடுமுறை கொடுப்பது அவர்கள் வகுப்பிற்கு தங்களை தயார் படுத்திக் கொள்வதற்குத்தான். உழைத்துப் படித்து முன்னுக்கு வந்த ஒவ்வொருவரது வாழ்க்கைக்கு பின் ஓரு ஆசிரியர் இருக்கிறார்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X