பதிவு செய்த நாள் :
மோடி பயணத்துக்கு ரூ.2,000 கோடி செலவு

புதுடில்லி:கடந்த, நான்கு ஆண்டுகளில், பிரதமர் மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங் களுக்காக, 2,021 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாக, பார்லியில் தெரிவிக்கப்பட்டது.
பார்லியின் குளிர்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்கள் குறித்த கேள்விக்கு, வெளியுறவுத் துறை இணையமைச்சர், வி.கே. சிங், ராஜ்யசபாவில் எழுத்து மூலம் பதில் அளித்துள்ளார்.அதில்

கூறியுள்ளதாவது:பிரதமர் மோடி, 2014, ஜூன் முதல், இதுவரை, 48 வெளிநாட்டுப் பயணங்களில், 55 நாடுகளுக்குச் சென்றுள்ளார். விமானச் செலவு, அவற்றின் பராமரிப்பு உள்ளிட்டவற்றுக்காக, நான்கு ஆண்டுகளில், 2,021 கோடி ரூபாய்செலவிடப்பட்டு உள்ளது.


அதேசமயம், 2014ல், 2.16 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நேரடி அன்னிய முதலீடு, 3.04 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.நாட்டில் அதிக முதலீடு செய்யும் நாடுகளில், முதல், 10 இடங்களில்,

Advertisement

மோடி பயணம் மேற்கொண்ட நாடுகள் உள்ளன.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த

 மோடி,பயணத்துக்கு, ரூ.2,000 கோடி ,செலவு

முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங், 2009 - 2014ல் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங் களுக்கு,ரூ. 1,346 கோடி செலவிடப்பட்டு உள்ளது.இவ்வாறு பதிலில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T M S GOVINDARAJAN - Madurai,இந்தியா
30-டிச-201815:04:42 IST Report Abuse

T M S GOVINDARAJANகாமராஜர் உண்மை தமிழனாக ஊழல் செய்யாமல் உத்தமனாக வாழ்ந்தவர் நமக்கு தான் உத்தமராக இருந்தால் பிடிக்காது அதனால் தோற்கடிக்கபட்டார். ஊழல்கள் வெற்றி அடைந்த பெருமை தமிழனை சாரும்.

Rate this:
Manian - Chennai,இந்தியா
31-டிச-201814:25:48 IST Report Abuse

Manianஅவரை போல பெரும்பாலான மாகாளம் இரூந்தார்களே எப்போ, திருடர்கள் கழக பொய்களை நம்பி ஆரம்பித்தார்களோ , ருபாய்க்கு நாலு படி அரிசி, பிராமணர்கள் ஒழிந்தால், இங்கே தேன் நதிகள் ஓடும், கோவிலுக்கு போக வேண்டிடம், எங்கள் கழக தொண்டர்களை ஆகி வேலையே செய்யாம எல்லோருக்கும் அரசாங்க வேலை கிடைக்கும்.. அப்பவே சனி புடிச்சுகிட்ட்து. இனி விடவே விடாது. ...

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
30-டிச-201814:37:02 IST Report Abuse

Pugazh Vஹா ஹா ஹா. இது எப்படி இருக்கு?? நாலேமுக்கால் வருஷத்துக்கு முன்னாடி ஒரு அயல்நாட்டு கம்பெனி கூட இல்லாமல் ஒத்தைப் பனமரமா அனாதையாக இருந்தது இந்தியா என்ற ரேஞ்சுக்கு பாஜகவினர் பொய்கள் பேசுகிறார்கள். எத்தனையோ அயல்நாட்டு கம்பெனிகள் 2002 ஆம் ஆண்டு முதலே இந்தியா வில் ஆரம்பித்து செயல் படத் துவங்கின. அவற்றின் கிளை அலுவலகங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. இந்த கிளை அலுவலகங்களின் முதலீடுகளை பாஜக சொந்தம் கொண்டாட நினைப்பது அசிங்கம். இவை இந்த பயணங்களால் அல்ல

Rate this:
POPCORN - Chennai ,இந்தியா
30-டிச-201812:53:45 IST Report Abuse

POPCORNபுதுசேரிகோ வண்ணக்கம்

Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X