கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பொறுப்பற்ற அதிகாரிகளை வீட்டுக்கு
அனுப்புங்க! ஐகோர்ட், 'சவுக்கடி'

சென்னை:விதிமீறல் கட்டட பகுதிகளில், மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பை துண்டிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விதிமீறலில் ஈடுபடுபவர் களை, நீதிமன்றம் பாதுகாக்காது என்றும், தெளிவுபடுத்தி உள்ளது.

பொறுப்பற்ற, அதிகாரிகளை, வீட்டுக்கு, அனுப்புங்க!,ஐகோர்ட், 'சவுக்கடி'

சென்னை, மண்ணடியில், அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதியை இடிக்கும்படி, உரிமையாளருக்கு, மாநகராட்சி தரப்பில், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.சிறிய அளவிலான விதிமீறல் இருந்தால், அபராதம் செலுத்த தயார் எனவும், இது குறித்த மனுவை பரிசீலிக்க, மாநகராட்சிக்கு உத்தரவிட கோரியும், உயர் நீதிமன்றத்தில், உரிமையாளர் மனு தாக்கல் செய்தார்.

இம்மனுவை விசாரித்த, நீதிபதிகள் வைத்தியநாதன், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய டிவிஷன் பெஞ்ச், மாநகராட்சி தரப்பில் சுட்டிக்காட்டிய குறைகளை, உரிமையாளர் சரி செய்யவும், இல்லையென்றால், அதை மாநகராட்சி இடிக்கவும் உத்தரவிட்டது.

கட்டட வரன்முறை தொடர்பாக, நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் குறித்து, அறிக்கை அளிக்க வும் உத்தரவிட்டிருந்தது. வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு

தரப்பில் போதிய விபரங்கள் தாக்கல் செய்யப்பட வில்லை.இதையடுத்து, நீதிபதிகள் வைத்தியநாதன், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய,டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:

சட்ட விரோத கட்டுமானங்கள், ஆக்கிரமிப்புகள், புற்றுநோய் போல் பரவி வருகின்றன.கட்டு மானங் களை, அதிகாரிகள் அவ்வப்போது கண்காணிக்க வில்லை என்றால்,விதிமீறல்கள் தொடரும். மாநகராட்சி அதிகாரிகளின் துணையின்றி, ஆக்கிர மிப்புகளோ, சட்ட விரோத கட்டு மானங்களோ நடக்காது.

'கார்ப்பரேஷன்' அலுவலகமா, 'கரப்ஷன்' அலுவலகமா என்ற, சந்தேகம் எழுகிறது.மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பை துண்டிப்பதற்காக, விதிமீறல் பகுதி எது என்பதை குறிக்க முடியவில்லை என்றால், கட்டடத்தின் முழு பகுதி யிலும் உள்ள குடிநீர் மற்றும் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.எந்த வழியிலும், மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பை பெற முடியாது என்பதை, அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

திட்ட அனுமதியின்படி தான் கட்டுமானம் நடக்கிறதா என்பதை உறுதி செய்ய, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கட்டுமானப் பணிக்கான சான்றிதழ் தருவதற்கான அரசாணையை, 2018 ஏப்ரலில், தமிழக அரசு பிறப்பித்துள்ளது.மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வழங்கிய, கட்டட அனுமதி குறித்தவிபரங்கள், குறிப்பாக, ௨௦௧௮ ஏப்ரலில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு பின், எத்தனை கட்டடங்களை, அதிகாரிகள் ஆய்வு செய்தனர் என்ற விபரங்களை அளிக்க வேண்டும்.

அனுமதியின்றி, அடித்தளத்துக்கு மேல் கட்டுமானம் இருந்தால்,மின் இணைப்பை உடனடியாக துண்டிக்க வேண்டும்.அதிகாரிகள் ஆய்வு செய்யாமல்

Advertisement

இருந்தால், நேர்மையாக கடமை ஆற்ற தவறியதற்காக, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பொறுப் பற்ற அதிகாரிகளை, பணி நீக்கம் செய்ய வேண்டும்.

கட்டடங்கள் வரன்முறை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட, மேல்முறையீட்டு மனுக்களை பரிசீலிக்க, கூடுதல் செயலர் அந்தஸ்தில் ஒருவரை மட்டும் நியமித்திருப்பது, போது மானது அல்ல.அதிக பணியிடங்களை உரு வாக்கி, நேர்மையாக, திறமையாக, கடினமாக பணியாற்றுபவர்களைநியமிக்க வேண்டும். இந்த மேல்முறையீட்டு விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்காக நியமிக்கப்படுபவர்கள், தங்களின் சொத்து விபரங்களை அளிக்க வேண்டும். அதை, இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

சனிக்கிழமைகளிலும், அதிகாரிகள் பணியாற்றி னால், மேல்முறையீட்டு மனுக்கள் விரைந்து பைசலாகும். விதிமீறலில் ஈடுபடுபவர்களை, இந்த நீதிமன்றம் பாதுகாக்காது.இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது. விசாரணையை, 2019 ஏப்., 12க்கு, நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.


Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
30-டிச-201818:43:12 IST Report Abuse

Darmavanஇந்த விதிகள் தற்கால நிலைக்கு பொருந்துமா என்று வல்லுநர்கள் சோதிக்க வேண்டும்.மக்கள்தொகையளவுக்கு மீறி இருக்கும்போது ஆனால் இருக்கும் நிலம் அதிகமாகத போது சட்டங்கள் விதிமுறைகள் மாற்றப்படவேண்டும்.

Rate this:
Indhuindian - Chennai,இந்தியா
30-டிச-201818:32:50 IST Report Abuse

Indhuindianஇது சென்னைக்கு மட்டுமா பொருந்தும் இப்போது நகராட்சிகளில் விதிமுறை மீறி கட்டப்பட்ட /காட்டப்படும் கட்டிடங்கள் - அது குடியிருப்பானாலும் சரி, வணிகக்கட்டிடமாக இருந்தாலும் சரி அங்கெல்லாம் அனுமதி வாங்குவதை இல்லேய் அப்படியே வாங்கினாலும் அதைப்பற்றி கவலை படுவதே இல்லை.

Rate this:
A.Gomathinayagam - chennai,இந்தியா
30-டிச-201818:18:01 IST Report Abuse

A.Gomathinayagamஎல்லாமே கூட்டணி அமைத்து தவறு செய்யும் பொழுது அந்த ஆண்டவனால் கூட தமிழக த்தை காப்பாற்ற முடியாது

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X